கர்நாடகத்தில் ரூ.30,000 கோடியில் லட்சுமி மிட்டலின் உருக்கு ஆலை!
இரும்பு எஃகுத் தொழிலில் உலகிலேயே முன்னிலை வகிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலின் ஆர்செலார் மிட்டல் நிறுவனம் கர்நாடகத்தில் உருக்கு ஆலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
ரூ 30 ஆயிரம் கோடி முதலீட்டில் உருவாகும் இந்த ஆலை குறித்து கர்நாடக அரசுடன் முதல்கட்டப் பேச்சுக்களைத் துவங்கியுள்ளனர் அந்நிறுவன அதிகாரிகள்.
இந்த தொழிற்சைலை மட்டும் கர்நாடகத்தில் அமைந்தால், சர்வதேச முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதால், மிகுந்த கவனத்துடன் இந்த திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்செலார் நிறுவனத்தைப் பொறுத்தவரை, தங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதி மற்றும் சலுகைகளும் ஒற்றைச் சாளர முறையில் உடனுக்குடன் கிடைத்தாக வேண்டும் என எதிர்ப்பார்க்கிறது.
இந்த ஆலை குறித்த பிற விவரங்களை விரைவில் வெளியிடுவோம் என்றும், சில நடைமுறைகள் முடியும்வரை மேற்கொண்டு எதுவும் கூற முடியாது என்றும் ஆர்செலார் மித்தல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஆண்டுக்கு 6 லட்சம் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இன்னொரு நடுத்தர ஆலை ஒன்றை இதே கர்நாடகத்தில் அமைக்கவும் ஆர்செலார் மிட்டல் திட்டமிட்டுள்ளதாம். இந்த பிளாண்ட்டுக்கு ரூ 30 ஆயிரம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாம். இதற்கான அனைத்து பூர்வாங்க வேலைகள் முடியும் தறுவாயில் உள்ளதாம்.
ஏற்கெனவே ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களில் உருக்கு ஆலைகளை ஆர்செலார் மித்தல் அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அங்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனைகள் தொடர்வதால், கர்நாடக திட்டத்தில் கவனத்துடன் செயல்பட விரும்புகிறது.
0 கருத்துக்கள்:
Post a Comment