புகைப்படத்துடன் மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் புகைப்படத்துடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
இந்தியாவிலேயே முதல் முறையாக 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் (2010-11) நடை முறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் மதிப்பெண் பட்டியலில் மோசடி, ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. முறைகேடு நடப்பதை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்படுகிறது.
இந்த திட்டத்தை இ.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியலில் பரீட்சார்த்த முறையில் கொண்டு வந்தோம். அது வெற்றிகரமாக இருந்தது. எஸ்.எஸ். எல்.சி., பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இதை ஏன் கொண்டு வரக்கூடாது என ஆலோசித்து நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மாணவர்களின் புகைப்படத்துடன் மதிப்பெண் பட்டியல் வழங்கும் போது கெசட் அதிகாரியின் கையெழுத்து தேவையில்லை. மார்க் பட்டியலில் மாணவர்களின் புகைப்படம் இடம் பெறும் போது எவ்வித சந்தேகமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
மார்க் பட்டியலில் ஏற்கனவே கண்ணுக்கு தெரியாத சந்தேக குறியீடுகள் உள்ளன. இதையும் மீறி மோசடி நடப்பதை தடுப்பதற்காகத்தான் இத்திட்டத்தை கொண்டு வருகிறோம். இந்த கல்வி ஆண்டில் கொண்டு வருவது சிரமம் இத்திட்டத்தை அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை தருமாறு தேர்வுத்துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் புகைப்படம் உள்ளது. அதை பயன்படுத்தி கொள்ளலாமா? சென்டரில் மென் பொருள், காகிதம் உள்ளதா எனகேட்டு இருக்கிறோம் என்றார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் நல்ல திட்டம்தான்.வரவேற்கிறோம். வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டுகளில் தவறான பெயர், முகவரி, புகைப்படங்களால் ஏற்பட்ட, ஏற்படும் குளறுபடி போல் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் எதுவும் நேர்ந்துவிடாதபடி மிகுந்த கவனத்துடன் செயல் படுத்தவேண்டும்.
1 கருத்துக்கள்:
இந்த முறை ஏற்கனவே ஆந்திராவில் அமலில் உள்ளது. நீங்க ரொம்ப தாமதம் திரு. தென்னரசு அவர்களே.
Post a Comment