5 ரூபாய்க்கு மருத்துவச் சிகிச்சை - வித்தியாசமான மருத்துவர்











சேவை நோக்கத்தோடு செயல்படும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஓய்வுபெற்ற அரசு மருத்துவ அதிகாரி ஜி.புஷ்பவனம்.
சாதாரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சென்றாலே "கணினி பில் புனிதமாகப் போற்றப்படும் மருத்துவத்துறை வணிகமயமாகி வரும் இந்தக் காலத்தில்' போட்டு பணம் கறக்கும் இந்த ஹைடெக் "மெடி' யுகத்தில், வெறும் 5 ரூபாய்க்கு மருத்துவச் சிகிச்சை அளித்து வருகிறார் இவர். தற்போது 63 வயதாகும் புஷ்பவனம், மதுரை மாவட்டம், சோழவந்தானில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிளினிக் நடத்தி வருகிறார்.

எப்படி இந்த 5 ரூபாய் சிகிச்சை? என அவரிடம் கேட்டோம்.

மருத்துவம் என்பது நோயாளியின் நோயைத் தீர்க்கும் பணியாக இருக்க வேண்டுமே ஒழிய, பணத்தைப் பறிக்கும் ஒரு கருவியாக இருக்கக்கூடாது என்பது என் எண்ணம். எப்பொருளும் விலையின்றி கொடுத்தால் மதிப்பிருக்காது. அதனால்தான், குறைந்த கட்டணமாவது வாங்கி இச் சேவையை அளித்து வருகிறேன். 28 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் இச் சேவையைச் செய்து வருகிறேன்.
தொடக்கத்தில் ரூ.3 கட்டணம்தான் வசூலித்தேன். தற்போது ரூ.5 வசூலிக்கிறேன். இக்குறைந்த கட்டணத்தில் சிசிச்சை அளிப்பதற்கு போதும் என்ற மனநிறைவுதான் காரணம். நான் வசித்த பகுதிகள் பெரும்பாலும் கிராமப்புற பின்னணி கொண்டதால், மருத்துவத்துக்கு பல ஆயிரம் பணம் செலவழிக்கும் நிலையில் பெரும்பாலானோரும் இல்லை என்பதை நன்கறிவேன். இதனால், புற்றுநோயாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், தொழுநோயாளிகள், காசநோயாளிகள் என்றால் கட்டணம் வாங்குவதில்லை.
இதுதவிர, அவசர நேரத்தில் தொலைபேசி மூலமும் தெரிந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பேன் என்று கூறும் புஷ்பவனம், தொழுநோயாளிகள், காசநோயாளிகளுக்கு தரமான இலவச சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி பரிந்துரையும் செய்கிறாராம்.
500-க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டுள்ளதாக கூறும் இவர், இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சேவை செய்ய விரும்புவதாக தெரிவிக்கிறார் இந்த வித்தியாசமான மருத்துவர். நன்றி : தினமணி.

Posted by போவாஸ் | at 12:15 AM

1 கருத்துக்கள்:

Unknown said...

மயிலாடுதுறையில் ராமமூர்த்தி என்று ஒருவர் இன்னமும் இருக்கிறார்

--
என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப்

Post a Comment

Related Posts with Thumbnails