புற்று நோயை உருவாக்கும் சி.டி.ஸ்கேன்கள் - மருத்துவ ஆய்வில் தகவல்
உடலில் உள்ள நோய்களை கண்டறிய தற்போது சி.டி.ஸ்கேன்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை தேவையில்லாமல் அதிக அளவு பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படும் என புதிய மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், மற்றும் சான்பிரான் சிஸ் கோவில் உள்ள ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் சி.டி.ஸ்கேன் கருவிகளில் இருந்து அதிக அளவில் வெளியாகும் ஒளிக்கதிர்கள் செல்களில் ஊடுருவி புற்று நோயை உருவாக்கும் என்று கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் அதிக அளவில் சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டவர்களில் லட்சக்கணக்கானவர்களுக்கு புற்று நோய் ஏற்பட்டுள்ளதும் மேலும் வருடத்துக்கு 15 ஆயிரம் பேர் பலியாவதும் தெரியவந்துள்ளது.
இதே கருத்தை தான் சமீபத்திய பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இதற் கிடையே சாதாரண சி.டி. ஸ்கேன் மூலம் மார்பு பகுதியில் ஒரு தடவை சோதனை செய்வது 100 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமமாகும்.
சில சி.டி. ஸ்கேன்கள் 440 எக்ஸ்ரேக்கள் எடுக்க கூடிய விளைவை ஏற்படுத்தக் கூடியவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
0 கருத்துக்கள்:
Post a Comment