பிரபாகரன் என பெயர் வைத்தால் கைது செய்ய முடியுமா ?
பிரபாகரன் என பெயர் வைத்தால் கைது செய்ய முடியுமா? வைகோ
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வைகோ இவ்வாறு பேசினார்.
நம்ம வைகோக்கு தமிழக அரசின் எச்சரிக்கை செய்தியை ஒழுங்காக படிக்கவில்லை போலும். ஒரு வேளை புரியவில்லையோ ?.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி :
தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்கள் படங்கள், கொடி, இலச்சினைகளை (முத்திரை) பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல், காண்பித்தல் ஆகியவை Unlawful Activities (Prevention) Act, 1967 படி தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் செய்திக் குறிப்பில் பிரபாகரன் என்று ஒரு இடத்தில் கூட இல்லையே....பின்னர் ஏன் வைகோ இப்படி கூறியுள்ளார்.
ஒ...கேரளா போயிட்டு திரும்பி வந்துட்டேன்னு காட்ரதுக்கா ?
ஒண்ணுமே புரியலையே......
1 கருத்துக்கள்:
mmmmm
Post a Comment