ரகசியத்தை தருவாரா விஜயகாந்த் ?.


தகவலை ரகசியமாகத் தாருங்கள் : விஜயகாந்துக்கு கருணாநிதி பதில்

சென்னை, ஆக. 18: ""இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தொடர்பாக, ரகசியமாகத் தகவல் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


  இதுதொடர்பாக, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

"ஐந்தாவது கட்டமாக 2009 - 2010-ம் நிதியாண்டில் சுமார் 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பெற்று வழங்கிட ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்படி வழங்கப்பட்டுவரும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஏதோவொரு தெரிந்த மருத்துவமனைக்கு கொடுத்து விட்டதாக ஒருவர் குறை கூறினார். உடனே, அது எந்த மருத்துவமனை என்று விளக்கம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தேன்.

ஆனால், குற்றம்சாட்டியவரே எந்த மருத்துவமனை என்பதை அரசே கண்டுபிடிக்க வேண்டுமென்று சொல்லி விட்டார்.

அப்படியொரு மருத்துவமனை இருந்தால்தானே கண்டுபிடிக்க முடியும். உண்மையில் தவறு களையப்பட வேண்டுமானால் குற்றம்சாட்டியவர் அந்த மருத்துவமனையின் பெயரைச் சொல்ல வேண்டும்.

வெளிப்படையாகச் சொல்வது தவறு என்று நினைத்தால், அந்தத் தகவலை அரசுக்கு ரகசியமாகக் கூறினால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராகவே உள்ளது'' என்றார்.

நன்றி : தினமணி. 

               --------------------------------------------------------------

ரகசியத்தை தருவாரா விஜயகாந்த் ?.


இந்த விஜயகாந்துக்கு ஒரு பழக்கம் உண்டு.

அடுக்கு அடுக்கா குற்றம் சொல்லுகிற பழக்கம். என்ன குற்றம், குற்றத்தின் விளக்கத்தைக் கூறு, எங்கே நடந்தது, எப்படி நடந்தது என்று கேட்டால்...அதற்கு பதில் சொல்லத் தெரியாமல், முழி பிதுங்கி அடுத்த குற்றச்சாட்டுக்குத் தாவி விடுவார்.

சரி விஷயத்திகு வருவோம்.

தமிழக மாநிலத்தின் முதல்வர் இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டத்தைக் கொண்டு வந்து அதை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலின் பிராச்சாரத்தின் பொது இந்த விஜயகாந்த் கூவிய குற்றச் சாட்டுகளில் " தமிழக அரசு வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டிகள், எதோ ஒரு தெரிந்த மருத்துவமனைக்கு கொடுத்துவிட்டதாக குற்றச்சாட்டினைக் கூறி, அதற்கான புகைபடங்களை பிரச்சார வேன் முன் இருந்த மக்களிடம் மட்டுமே காட்டினார். 

அதை அவர் முறையாக வெளியிடவில்லை, பத்திரிக்கைகளிலும் வெளி வரவில்லை.

இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறிய அன்றே, விஜயகாந்துக்கு கலைஞர் அவர்கள் பதிலடியாக அல்லாமல், பக்குவமாக , ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற பொறுப்புணர்வோடு அது எந்த மருத்துவமனை சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கேட்டார்.

அதற்கு, பதில் சொல்லத் தெரியாமல் முழித்த விஜயகாந்த் அந்த மருத்துவமனையை தமிழக போலீசாரிடம் சொல்லி கண்டுபிடிக்க சொன்னார்.

மீண்டும் கலைஞர் அவர்கள், குற்றச்சாட்டை கூறிவிட்டு அதற்கு தொடர்புடைய விளக்கங்களையும், ஆதாரங்களையும் தாராமல் இருந்தால் எப்படி என்று கேட்டார். 
அட, அந்த மருத்துவமனை பெயராவது சொல்லுங்கள் என்று கேட்டார்.

அப்பொழுதும் இந்த விஜயகாந்து ஒரு பதிலும் சொல்லாமால், தேர்தல் பிரச்சாரத்தில், ஒரு பக்கம் கலைஞரையும் ஒரு பக்கம் தி.மு.கவையும் திட்டிக் கொண்டும், அதை செய்வேன் இதை செய்வேன் என்று கூவிக் கொண்டு இருந்தார்.

கூவுவது அவரது இஷ்டம். அதை கேட்பதும் கேட்கமால் இருப்பதும் நம் மக்கள் இஷ்டம்.

ஆனால், இவர் கூறிய குற்றச்சாட்டுக்கான விளக்கத்தை இவர் தர வேண்டுமல்லவா ?.

சாதாரணமாக நம் வீட்டில் ஒரு பொருள் காணவில்லையென்றால், வீட்டில் இருப்போரிடம் நாம் கேட்போம் அல்லவா?.

எவ்வாறு கேட்போம்.....இந்த இடத்தில், இந்த பொருள் வைத்து இருந்தேன்...அதை இப்பொழுது காணவில்லை ...யாரேனும் பார்த்தீர்களா என்று கேட்போம். தெரிந்தவர்கள் பார்த்தேன் என்று சொல்வார்கள். தெரியாதவர்கள் எனக்கு தெரியாது என்று சொல்வார்கள். 

எனக்கு தெரியும், ஆனால் நான் சொல்ல மாட்டின் என்று ஒருவர் சொன்னால்...அந்த மனிதருக்குள் இருக்கும் வில்லத்தனனும், விசமத்தனமும், பொய்யும், வேஷமும்தான் வெளிப்படும். பொருளைத் தொலைத்த்வருக்கு கோபம் வருமா வராதா?.

அதை போலவே, மாநிலத்தின் முதல்வர் முறையாக கேட்கும் போது, இவர் இந்த இடத்தில் உள்ள மருத்துவமனை, அதன் பெயர் இது என்று விலாவாரியாக சொல்ல வேண்டியதுதானே ?. அதிலே என்ன சிக்கல் ?. இல்லை பயமா? இல்லை வேறு காரணங்கள் உண்டா? 

இவர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்றால்..ஆதாராங்களுடன் பத்திரிக்கைகளுக்கும், அரசுக்கும் கொடுக்க வேண்டியதுதானே ?. 

இன்று மீண்டும் கலைஞர் அவர்கள், தனிப்பட்ட முறையில் ரகசியமாகவாது சொல்லுங்கள் என்று கேட்டுவிட்டார்.

மூன்றாவது முறையாக கேட்டுவிட்டார்.

ஒரு பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக இருக்கும் இந்த விஜயகாந்த் இப்பொழுதாவது சரியான் விளக்கங்களைத் தருவாரா?.

இவர் இனியும் தரவில்லையென்றால்...இவரை என்னவென்று சொல்வது ?.

இவர் பொய் குற்றச்சாட்டை கூறியுள்ளாரா? என்ற சந்தேகம் எழுகின்றது.

கருப்பு (இருட்டு) எம்.ஜி.ஆருக்கே வெளிச்சம்.

Posted by போவாஸ் | at 2:35 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails