இடைத்தேர்தல்

வெற்றி மேல் வெற்றி வரும்...ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்.

கடந்த 18ஆம் தேதி நடந்து முடிந்த ஐந்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் தி.மு.க.,கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி 31359 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

கம்பத்தில் தி.மு.க.,வேட்பாளர் ராமகிருஷ்ணன் 57,373 ஓட்டுகள் வித்தியாசத்திலும்,

பர்கூரில் தி.மு.க.,வேட்பாளர் நரசிம்மன் 59,103 ஓட்டுகள் வித்தியாசத்திலும்,

இளையான்குடியில் தி.மு.க.,வேட்பாளர் சுப மதியரசன் 41,456 ஓட்டுகள் வித்தியாசத்திலும்,

தொண்டாமுத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.எம்.கந்தசாமி 41,456 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். இதேபோல் காங்கிரஸ் தொண்டர்களும் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது வெற்றியை கொண்டாடினார்கள்.

வெற்றி பெற்ற வேட்பாளர்க
ளுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி 31 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஸ்ரீவைகுண்டம் - மொத்த ஓட்டுகள் - 1,16,607. பதிவான ஓட்டுகள் - 84,501 (72.46 சதவீதம்).

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விவரம்:

சுடலையாண்டி (காங்.) 53,827

சௌந்தரபாண்டியன் 22,468

தனலட்சுமி (சிபிஐ) 3407

சந்தனக்குமார் (பாஜக) 1797

வெற்றி வித்தியாசம் 31,379 வாக்குகள்.


தொண்டாமுத்தூர் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.என். கந்தசாமி 71,487 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தொண்டாமுத்தூர் - மொத்த ஓட்டுகள் - 3,41,240. பதிவான ஓட்டுகள் - 1,98,461 (58.16 சதவீதம்).

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விவரம்:

கந்தசாமி (காங்.) - 1,12,350


கே.தங்கவேலு (தேமுதிக) - 40,863

ஈஸ்வரன் (கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்)-19,558

பெருமாள் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)-9,126

சின்னராஜ் (பாஜக)- 9,045

வெற்றி வித்தியாசம் 71,487 வாக்குகள்.


பர்கூர் சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.கே.நரசிம்மன் 59,103 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

பர்கூர்- மொத்த ஓட்டுகள் - 1,83,724. பதிவான ஓட்டுகள் - 1,29,613 (71. 02 சதவீதம்).

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விவரம்:

கே.ஆர்.கே.நரசிம்மன் (திமுக) - 89,481


வி.சந்திரன் (தேமுதிக) - 30,378

அசோகன் (பாஜக) -1482

வெற்றி வித்தியாசம் 71,487 வாக்குகள்.

இத்தொகுதியை அதிமுகவிடமிருந்து திமுக கைப்பற்றியுள்ளது


கம்பம் சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 57,373 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

கம்பம் - மொத்த ஓட்டுகள் - 1,45,673. பதிவான ஓட்டுகள் - 1,10,726 (76.2 சதவீதம்).

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விவரம்:

ராம‌‌கி‌ரு‌ஷ்ண‌ன் (தி.மு.க.) 81,515

ஆர்.அருண்குமார் (தே.மு.‌தி.க.) - 24,142

வெற்றி வித்தியாசம் 57,373 வாக்குகள்.


இளையான்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுப.மதியரசன் 41,456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இளையான்குடி - மொத்த ஓட்டுகள் - 1,26,623. பதிவான ஓட்டுகள் - 85,019 (67.14 சதவீதம்).

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் விவரம்:

சுப.மதியரசன் (தி.மு.க.) – 61,084

அழகு பாலகிருஷ்ணன் (தே.மு.‌தி.க.) - 19,628

ராஜேந்திரன் (பாஜக) - 1,487

வெற்றி வித்தியாசம் 41,456 வாக்குகள்.


பர்கூர், இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதுகுறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி கூறுகையில்,

5 தொகுதிகளுக்கான வெற்றி மத்திய, மாநில அரசுகளின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்றும், தேர்தலை புறக்கணிக்க சொன்ன ஜெயலலிதாவின் கருத்தை மக்கள் ஏற்கவில்லை. இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றார்.


Posted by போவாஸ் | at 1:24 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails