முல்லா ஸ்பெஷல் - IV

நானும் ஒரு விபச்சாரி

ஒரு முறை நடைபாதையில் லைசென்ஸ் இல்லாமல் நடை பாதையில் வியாபாரம் செய்ததற்க்காக முல்லா மாட்டிக்கொண்டார்-அவ்ர் அந்த ஊருக்கு புதிது அதனால் அங்கு நடல்பாதையில் வியாபாரம் செய்ய லைசென்ஸ் தேவை என்பது தெரியாது.

அவர் நீதி மன்றத்திற்க்கு அழைத்துவரப்பட்டார்- அங்கு நீதிபதி முன் மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் லைஸன்ஸ் இல்லாமல் விபச்சாரம் செய்ததல் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர். அந்த ஊரில் விபசாரம் செய்யவும் லைஸன்ஸ் வழங்கப்படுகிறது-அவர்கள் அத்தகைய லைஸன்ஸ் இல்லாததால் மாட்டிக்கொண்டனர்.

நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார் “ நீ யார் ,என்ன செய்து கொண்டிருந்தாய் ? இந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிராயா ?“

முதல் பெண் “ நான் ஒரு மாடல் , என்னை தவறாக கைது செய்துவிட்டனர்” என்று பொய் சொன்னாள்.

நிதிபதி “ 30 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு இரண்டாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

இரண்டாம் பெண் “ நான் ஒரு நடிகை! இதற்க்கும் சிறிதளவும் சம்மந்தமில்லை “ எனச் சொன்னாள் ( பொய்தான் ) நிதிபதி “ உணக்கு 60 நாள் கடும் காவல் தண்டனை “ என்று சொல்லிவிட்டு முன்றாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

முன்றாம் பெண் “ ஐயா ! நான் ஒரு விபச்சாரி , லைஸன்ஸ் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னாள்

இதைக் கேட்ட நீதிபதி “ நான் உண்னை பாராட்டுகிறேன் தண்டனை கிடைக்கும் எனத்தெரிந்தும் உண்மையை சொன்னதற்க்காக! நான் உண்னை விடுதலை செய்கிறேன் அதுமட்டுமல்ல உனக்கு லைஸன்ஸ் வழங்கவும் உத்திரவிடுகிறேன்! “ எனதீர்ப்பு கூறினார்

இப்போது முல்லாவின் முறை, நீதிபதி தனது வழக்கமான கேள்விகளை முல்லாவிடம் கேட்டார் அதற்க்கு முல்லா” ஐயா ! நானும் ஒரு விபச்சாரி , லைஸன்ஸ் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! “ எனச்சொன்னார்.



பறக்கும் யானை

முல்லா ஒரு முறை சர்க்கசில் வேலை செய்து கொன்டிறுந்தார் அப்போது அவர் ஒரு யானையை பயிர்ச்சியின் மூலம் ஒரு காலை தூக்கியபடி நிற்க்க பழக்கினார், சிறிது நம்பிக்கை வந்தது மேலும் யானைக்கு பயிற்ச்சி கொடுத்தார் யானை இரன்டு காலையும் தூக்கியபடி நின்றது, மேலும் பயிற்ச்சி கொடுத்தார் யானை முன்று கால்களையும் தூக்கியபடி நிற்க்க பழகியிருந்தது அதோடு விட்டாரா?

அவருக்கு தன் பயிர்ச்சியின் மேல் அதிகப்படியான நம்பிக்கை பிறந்தது அதனால் அந்த பாவப்பட்ட யானயை அனைத்துகால்களயும் தூக்கவைக்கமுடியும் என்று! பாவம் யானை! அவர் தொடர்ந்து பயிர்ச்சி கொடுத்துகொன்டே இருந்தார் இது நடக்காத காரியம் என்று உணரும் வரை

உட்னே அவருக்கு ஒரு யோசனை ப்த்திரிக்கையில் ஒரு அறிவிப்பு செய்தார் " யார் எனது யானையை நான்கு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க வைக்கிறார்றோ அவறுக்கு 10,000/- ரூபாய் சன்மானம் வழங்கப்படும் அத்ற்க்கான் போட்டி கட்டணம் 100/- ரூபாய் "

போட்டிக்கு அதிகமான கூட்டம் கூடியது, பலர் பல்வேறு முறைகளில் முயற்ச்சித்தனர், சிலர் ஹிப்னாட்டிஷம்,யோகா என எனென்ன முறைகள் தங்களுக்கு தெரியுமோ அனைத்தயும் முயற்ச்சித்தனர் , ஆனால் யாராலும் யானையை நான்கு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க வைக்கமுடியாவில்லை, முல்லாவின் கல்லா நிரம்பியது அந்த சமயத்தில் ஒரு குட்டையான நபர் காரில் இருந்து இறங்கிவந்தார் " யார் எனக்கு 10,000/- ரூபாய் சன்மானம் வழங்கப்போவது, நான் யானையை நான்கு கால்களையும் ஒரே சமயத்தில் தூக்க வைத்தால்?" என்றான்

முல்லா" நான் தான் , முதலில் போட்டிகட்டனம் செலுத்தவேண்டும் "
அந்த குட்டை மனிதர் தனது பாக்கட்டில் இருந்து 100/- ரூபாய் கொடுத்துவிட்டு தனது காரில் இருந்து ஒரு இரும்பு தடியை எடுத்தார், முல்லா இவன் என்ன புதிதாக செய்யபோகிறான் எத்தனயோ பேர் என்னெவெல்லமோ செய்து பார்த்துவிட்டார்கள் என்று யோசித்தார்.

அந்த குட்டை மனிதர் யானையின் முன் சென்றார் அதன் கண்களையே சிரிது நேரம் பார்த்தார், பின் நேராக யானையின் பின் சென்று அதன் கொட்டையில் ஒரு போடு போட்டார். யானை நான்கு கால்களையும் தூக்கி பிளிரிக்கொன்டு குதித்தது முல்லாவும் தான்!

முல்லா கண்னிர் விட்டார் அவர் 8,000 ரூபாய் தான் வசூல் செய்திருந்தார் தனது பணத்தை 2,000/ ருபாய் சேர்த்து அந்தகுட்டை மனிதனுக்கு கொடுத்தார் அவன் தன்னை ஏமற்றிவிட்டதாக நினைத்தார் அந்த பணதை எப்படியாவது திரும்ப சம்பாரிப்பது என உறுதி கொன்டார்

யானைகள் தனது தலையை மேலும் கிழூமாக தான் தலயை ஆட்டும் அவை பக்கவாட்டில் தலையை ஆட்டது என்பதை உணர்ந்தார். உடனே பத்திரிக்கையில் ஒரு அறிவிப்பு கொடுததார் " யார் தனது யானையை பக்கவாட்டில் தலயை ஆட்ட வைக்கிறார்களோ அவருக்கு 10,000/- ரூபாய் சன்மானம் வழங்கப்படும் அதற்க்கான் போட்டி கட்டணம் 100/- ரூபாய் மேலும் யாரும் யானயை அடிக்ககூடாது "

மீண்டும் மக்கள் குவிந்தனார், வந்தவர்கள் வழக்கம் போல் முல்லாவிற்க்கு கல்லா கட்டிகொண்டிருந்த்னர், யாரளும் யானையை பக்கவாட்டில் தலை ஆட்டவைக்கமுடியவில்லை அப்போது நமது குட்டை மனிதர் அதே போல் இரும்பு தடியுடன் வந்தார்

முல்லா இவன் இப்பொது என்ன செய்யமுடியும் என பார்த்தார் அவன் இவரிடம் வந்து இன்னும் நீ திருந்தவில்லையா ? நீ தான் பணம் தரப்போகிராயா? என்றான்.
முல்லா ஆமாம்! நான் தோற்த்தது அப்போது! விளம்பரத்தில் சொன்ன மாதிரி யானயை நீ அடிக்ககூடாது- போட்டிகட்டனம் ரூ 100/- என்றார்

குட்டை மனிதர் பணத்தை தந்து விட்டு தனது தடியுடன் யானயின் முன்னே சென்றார் அதன் கண்களை உற்று பார்த்தார் பின் அதனிடம் " நான் யாரென்று தெரிகிறதா? " என கெட்டார். யானை மேலும் கிழூம் த்லயை ஆட்டியது " ஆமாம்" என்பது போலஅவர் யானையை பார்த்து " மீண்டும் அந்த அனுபவம் வேண்டுமா ?" எனக்கேட்டார். யானை " வேண்டவே வேண்டாம் " என்பது போல் தலையை பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டே இருந்தது.


டாஷ்மாக்கில் முல்லா

டாஷ்மாக் கடை நண்பர் முல்லாவிடம் “ என்ன ? நசுருதீன் இன்று சீக்கிரமாகவே போகிறீர்கள் ?

முல்லா , “ இது என்னுடைய அன்றாட பிரச்சனை , மனைவி ! “

நண்பர் “ என்னது மனைவியா ? அவரிடம் பயமா உங்களுக்கு ? நீரெல்லாம் ஒரு ஆண்மகனா ? அல்லது எலியா ? ”என்றார்,

முல்லா “ நான் ஒரு ஆண்மகன்தான் ! “

நண்பர் “ அப்படியென்றால் ஏன் இவ்வாளவு சீக்கரமாக செல்கிறாய் ? நீ ஆண்மகன் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? “

முல்லா “ நான் நிச்சயமாக சொல்கிறேன் நான் ஒரு ஆண்மகன் தான் , என்னுடைய மனைவிக்கு எலிகள் என்றால் பயம் எனக்கு என் மனைவி என்றால் பயம் , நான் மட்டும் எலியாக இருந்திருந்தால் ?எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ? “ என்றார்



முல்லா ஒரு மன நல மருத்துவரிடம் சென்று தான் இரவுகளில் தொடர்ச்சியாக காணும் கொடிய கனவை பற்றி மிகவும் பயந்தார்,.

ம.மருத்துவர் “ கவலைப்படதே நசுருதீன் , முதலில் என்ன கனவு கண்டாய் சொல் ! “

முல்லா “ நான் , நான் திருமணம் செய்வதாக கனவு கண்டேன்!”

ம.ம “ அதனால் என்ன ? ஏன் பயப்படவேண்டும் ? கனவினில் யாரை திருமணம் செய்தாய் சொல் !

“முல்லா “ எனது மனைவியைத்தான் , அதனால்தான் பயந்துவிட்டேன் என்றார் “

Posted by போவாஸ் | at 2:00 AM

3 கருத்துக்கள்:

kumar said...

நன்றாக இருக்கிறது.அனால் முல்லா நசுருதீன் mr.x போல கோமாளியோ அல்லது முட்டாளாகவோ அறியப்பட்டவர் அல்ல.மாறாக பீர்பால்,தெனாலி ராமன் போல தன் புத்திசாலிதனத்திற்கு பெயர் பெற்றவர்.அதை மாற்றி அவரை வேறு மாதிரி உருவகப்படுத்துவது அவ்வளவு நன்றாக இல்லை.உங்கள் பதிவில் நான் படித்த பெரும்பாலான ஜோக்குகள் இளித்தவாயர்கலாகிப்போன சிங்குகளை வைத்து எழுதப்பட்டது.ஏன் இந்த வன்மம்?

Gifariz said...

தயவு செய்து இழிவான (சிங்) ஜோக்குகளுக்கு முல்லா நசுருதீனின் பெயரைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லதென்று நினைக்கிறேன். ஏன் என்றால் முல்லா ஜோக்குகள் அறிவு புர்வமான ஜோக்கள் என்பதால்...

Gifariz said...

அடுத்து,
ஒருபோதும் முல்லா ஜோக்குகள் (மனைவிக்கு பயந்த கணவன்)போன்ற குடும்ப வாழ்வை இழிவுபடுத்தும் ஜோக்குகள் இல்லை....

Post a Comment

Related Posts with Thumbnails