மதுரைக்கு ஒரு மறுமலர்ச்சி
அழகர்கோவில் : ""மதுரையை தொழில் நகரமாக மாற்றி ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பேன்,'' என மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க., அழகிரி தெரிவித்தார்.
மதுரை லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பாடு பட்ட தி.மு.க.,வினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா அழகர்கோவிலில் நடந்தது. புறநகர் தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., தலை மை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் சிறைச் செல்வன் வரவேற்றார்.
176 பேருக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மோதிரம் அணிவித்து பேசியதாவது: பலர் வேலை கேட்டு மனு கொடுக்கின்றனர். அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது என்றாலும், அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மேலூரில் கிரானைட் பாலீஷ் பட்டறை, இடையப்பட்டியில் சிப்பட் தொழிற்சாலை அமைக்கவும், மத்திய அரசின் "ஏரோபார்க்" அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். கட்சி நிர்வாகிகள் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து எனக்கு தகவல் தெரிவியுங்கள். மக்களின் குறைகளை தீர்ப்பதே எனது முதல் கடமை. சட்டசபை தேர்தலில் தென் தமிழகத்தில் உள்ள 60 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றிபெற வேண்டும் என்றார். நகர் செயலாளர் தளபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேற்கு ஒன்றிய தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.
0 கருத்துக்கள்:
Post a Comment