உண்மையை மறைக்கிறார் விஜயகாந்த்.


உண்மையை மறைக்கிறார் விஜயகாந்த்.

இந்த விஜயகாந்த என்ன சொல்றதுன்னு தெரியலை.

இவருக்கு எத, எங்க, யார, எப்படி, பேசத் தெரியலைனு நினைச்சோம்.

ஏதோ தேர்தல்ல ஓட்டுக்களை வாங்கத்தான் ஒரு மூன்றாம்தர பேச்சாளரை போல தாக்கி பேசுறாருன்னு நினைச்சோம்.

இபோதான் தெரியுது இவருக்கு அரசியலும் தெரியாது, தமிழக அரசியல் வரலாறும் தெரியாது, தமிழக வரலாறும் தெரியாதுன்னு.

சினிமால இவரு மூச்சு விடாம முன்னூறு வசனம் பேசலாம்.

ஆனா, நிஜ வாழக்கையில், அதுவும் அரசியல் என்ற பொது வாழ்க்கையில் வந்த பின்னர் பேசுற ஒவ்வொரு பேச்சையும் பாத்து பேசணும், உண்மைய பேசணும், அரசியல் வரலாறு தெரிஞ்சி இருக்கணும், தெரியலைனா, உங்க கூட இருந்து ஜால்ரா போடுறவங்க கிட்ட கேட்டாது தெரிஞ்சிக்கணும்.

எதுவுமில்லாம இப்படி அரைகுறையா உளறக்கூடாது.

இவருதான் தினமும் ஏதாவது உளறிகிட்டு இருக்காரே, இன்னைக்கு என்ன புதுசானு கேட்கலாம் ?

புதுசு கண்ணா புதுசுதான்.

அப்படி என்னதான் உளறி இருக்காருன்னு

தினமலர் செய்திக் குறிப்பு : "இளைஞர்களை ஹிந்தி படிக்க விடாமல் கெடுத்தது கருணாநிதி தான். இவ்வாறு விஜயகாந்த் பேசினார். "

இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே பேசப் போறாருன்னு தெரியலை.

இவரு இப்படி பேசுனதுல இருந்தே இவருக்கு ஒரு எழவும் தெரியலைங்கறதும்...தான் உளறல் மன்னன் என்றும், அரசியலில் ஒரு அரைவேக்காடு என்றும் மீண்டும் மீதும் நிரூபித்து வருகிறார்.

அப்படி உண்மைலேயே தமிழ் மக்களை ஹிந்தி படிக்க விடாமல் கெடுத்தது கருணாநிதி தான் என்றால் அது முற்றிலும் தவறான தகவலாகும்.

அப்போ உண்மைதான் என்ன ?. வரலாறு என்ன சொல்கிறது ? நாம் பார்ப்போம்...

---------------------------------------------------------------------------------------

இந்தி முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக மோத்திலால் நேரு தலைமையிலான குழு இந்திய அரசாங்கத்திற்கு (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரை செயதது.

அது முதல் தமிழ் நாட்டில் பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்.

1937
இல் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்த்து போராட்டமாக வெடித்தது.

நீதிக்கட்சியின் தமிழ் தேசியவாதிகளான சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மற்றும் பெரியார் இப்போராட்டத்தினை முன்னின்று நடத்தினர். இப்போராட்டம் 1938 இல் பல்ர் கைது செய்யப்பட்டு சிறையில் இராஜாஜி அரசால். அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது.

அதே வருடம் "தமிழ்நாடு தமிழருக்கே" என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது. இதை முதன்முதலில் முழக்கமிட்டவர் பெரியார், பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ஆரியர்கள், திராவிடர்களின் பண்பாடுகளை ஊடுருவிச் சிதைக்க திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார். இந்தியை ஏற்றுக்கொளவது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களை பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும்.

இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாக பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுவிடுவார்கள் என்று பெரியார் வலியுறுத்தினார்

1938 இன் இந்தி எதிர்ப்பு போராட்டம்

1938
இல் மதராஸ் இராசதானியில் காங்கிரசு அரசு சி.ராஜகோபாலாச்சாரி தலைமியில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பட்டை முன்மொழிந்தவர் இராஜாஜி, பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக அவருடைய ஆட்சிகாலத்தில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தமிழ் ஆன்றோர்கள், தலைவர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களாலும் எதிர்க்கப்பட்டது.

அண்ணாதுரை மற்றும் தமிழ் அறிஞர்கள் பாரதிதாசன் உட்பட இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்தினர். காஞ்சிபுரத்தில் 27 பெப்ரவரி, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை எடுத்த தடியடி நடவடிக்கையால் பலத்த காயமுற்று தாளமுத்து மற்றும் நடராசன் என்ற இரு தமிழ் போராட்ட வீரர்களும் மாண்டனர். இறுதியாக தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பின் காரணமாக மதராஸ் இராசதானி அரசு அச்சட்டத்தை 1940 இல் திரும்ப பெற்றது.


1965 மதராஸ் இந்தி எதிர்ப்பு போராட்டம்

இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என் அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை:

இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது?, உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே

தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும்வரை, எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.

இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும் இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது.

மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது

திமுக கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து 1960 இல் ஆகஸ்டில் சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணாதுரை தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யபட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவெதெனவும் முடிவு செய்யப்பட்டது.

இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியலமைப்பில் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்பாட்டம் கைவிடப்பட்டது.

இந்த திருத்த சட்டம் கொண்டு வரப்படாவிட்டால் இந்தியாவின் 15 வது குடியரசு தின்த்தை 26 ஜனவரி, 1965 துக்கதினமாக அறிவிக்கபோவதாக அண்ணாதுரை அறிவித்தார். இந்த அறிவிப்பை அன்றைய மதராஸ் மாநில முதலமைச்சரான பக்தவச்சலம் அண்ணாதுரைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கருப்புதின அறிவிப்பை 24 ஜனவரி அன்று மாற்றியமைத்தார். இதற்கான அறைகூவலாக அண்ணாதுரை முழங்கியவை இந்தியை ஒழித்து, இந்தியக் குடியரசு நீண்ட ஆயுளுடன் வாழ்க.

இந்தியை எதிர்த்து கருணாநிதி முழங்கியவை
இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்து செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கபட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு. -கருணாநிதி

---------------------------------------------------------------------------------------

இப்படித்தான் நம் வரலாறு கூறுகின்றது.

இவரு ஆதியும் தெரியாம அந்தமும் தெரியாம, இப்படி தலைகால் புரியாம உளறிக் கொட்டுகிறார்.

உண்மையை மறைக்கிறார் விஜயகாந்த்.

இந்த விஜயகாந்த் தன்னோட கட்சி பேனர்ல..யாரு யாரு போட்டோவெல்லாம் வச்சு இருக்கார்னு பாருங்க.




நீங்களே சொல்லுங்க...இவரு பேசுறது நியாயம்தானா?. உண்மைதானா ?.

ஹிந்தி படிக்காமல் விட்டதால் நாம் என்ன முடங்கிப் பொய் வீட்டிலா உக்காந்து இருக்கிறோம்.

உண்மையில் கொஞ்சம் கஷ்டம் இருந்திருக்கலாம். ஆனால் அது மிக மிகக் குறைந்த காலம் மட்டுமே.

இன்னைக்கு, உலகத்துல தமிழன் இல்லாத இடமேல்லைனு பெருமையா சொல்லுற அளவுக்கு நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம்.

பெரும்பாலான நாடுகளில் தமிழின மக்கள் இருக்கின்றனர்.

பல வகையில் நான்ம முன்னேறி கொண்டு இருக்கின்றோம்.

உண்மையில் வட நாட்டு மாநிலத்தவரை விட நம் தமிழ் மக்கள் மிக நன்றாக ஆங்கிலம் பேசுகின்றனர்.

பல வடநாட்டு மக்கள் ஹிந்தியை விட்டு விட்டு இப்பொழுது ஆங்கிலத்தை முழு மூச்சாக கற்று வருகின்றனர்.

அவர்களுக்கே புரிந்து விட்டது ஹிந்தியை நாம் வீட்டில் மட்டுமே பேசக் கூடிய மொழி என்று.

அன்னைக்கு ஹிந்திக்கு நாம முக்கியத்துவம் கொடுக்காம, உலகப் பொதுமொழியான ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் தந்ததால்தான் நமக்கு இந்த நிலை இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாட்டு நடப்பும் தெரியாம, அரசியலும் தெரியாம, வரலாறும் தெரியாம, கன்னாபினான்னு உண்மைய மறைத்து உளறி மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன ?.

Posted by போவாஸ் | at 1:27 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails