முல்லா ஸ்பெஷல் - I

முல்லாவின் திருமணம்

முல்லா தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்

”ஐயா ! நான் உங்களது மகளை திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறேன் “

அந்தப் பெண்ணின் தந்தை அவனைப் பார்த்து கேட்டார் “ இது நிமித்தமாக எனது மனைவியை பார்த்தாயா ? “

”பார்த்தேன் ஐயா ! ஆனாலும் எனக்கு உங்களின் மகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது ” என்றார் முல்லா

பெண்ணின் தந்தை : ???????????

முல்லாவும் அவரது மனைவியும்

முல்லாவும் அவரது மனைவியும் ஒரு நாள் தொலைக்காட்சி பார்த்துக்க்கொண்டிருந்தனர் , அதில் ஒரு சுகமளிப்பவர் ( faith healer ) உறை ஆற்றிக்கொண்டிருந்தார் அவர் “ உங்களின் உடம்பில் ஏதாவது பகுதியை குனப்படுத்தவேண்டும் எனில் , உங்களது ஓரு கையை பாதிக்கப்பட்ட உருப்பில் வைக்கவும் மற்றொரு கையை இந்த தொலைக்காட்சிப் பெட்டியில் வைத்தால் அந்த உருப்பு ஆண்டவனுடைய கிருபையினாலே குனப்படுத்தப்படும்” என்றார்

இதைக் கேட்ட அவரது மனைவி தன்னுடைய கையை தன்னுடைய இதயத்தில் வைத்தாள்.

முல்லாவோ அவசரமாக தனது கையை அடிவயிற்றை நோக்கி கொண்டு சென்றார்
இதை கவனித்த அவரது மனைவி “ முல்லா ! இவருக்கு பாதிக்கப்பட்ட உருப்பை மட்டுமே குனப்படுத்தவைக்க முடியும். இவரால் இறந்தவைகளை உயிர்த்தெழச்செய்யமுடியாது விட்டுவிடு” என்றாள்

பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம்

முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார் , அப்போது நாளிதழில் வந்த ஒரு( கிழ்கண்ட ) விளம்பரம் அவரை கவர்ந்தது

“ மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு!
1.) சாதா உடற் இளைப்பு –ரூ 1,000/- ஒரு மணி நேரம் ( 2 - 5 கிலோ வரை)
2.). சூப்பர் ட்ரிம்மர் - ரூ 2,000/- இரண்டு மணி நேரம் ( 6-10 கிலோ வரை)
3.) ஹெவி ட்ரிம்மர் - ரூ 3,000/- மூன்று மணி நேரம் ( 11 – 15 கிலோ வரை )
4.) அல்டிமேட் ட்ரிம்மர் - ரூ 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்க்கு முந்துங்கள் “

முல்லா அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்ச்சி செய்து பார்த்துவிடுவது என முடிவேடுத்தார் , ஆனாலும் முதலில் சாதா முறையில் முதலில் பரிச்சிக்க விரும்பி அதற்க்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார் அந்த அறை 16 x 16 என்ற அளவில் இருந்தது அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவரூடைய கையில் ஒரு அட்டை அதில் “ ஒரு மணி நேரத்திர்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம் “ என்று எழுதியிருந்தது , முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார் – அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது – அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது..

முழு திருப்தியுடன் அதற்க்கு அடுத்த முறையை பரிச்சிக்க விரும்பினார் இந்த முறையில் வித்யாசம் அறையின் அளவு 40x40, சாதா முறையைவிட நல்ல அழகான பெண் , கால அவகாசம் 2 மணி அவ்வளவுதான், மற்றபடி முறை ஒன்றுதான் ,இங்கும் அவருக்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் வித்யாசம் அறையின் அளவு 75x75 , மிக அழகான பெண் , கால அவகாசம் 3 மணி நேரம் , முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார் அவருக்கு , எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம் , கடைசியாக அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார் ,

வரவேர்ப்பாளர் அவரிடம் 16 வது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார், முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோசத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு 16 மாடிக்கு வந்தார் , அங்கு அவர் 42 வது மாடிக்கு 15 நிமிடத்திற்க்குள் ஓடி வந்து சேர வேண்டும் அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது , முல்லாவிற்க்கு வேறு வழியும் இல்லை , தான் கானப்போகும் மிக மிக அற்ப்புதமான அனுபவத்தை நினைத்தவாரே உயிரைக் கொடுத்து ஓடி 42 வது மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500x500 அடி பரப்பளவு இருக்கும் , அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது, முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே ஒரு பெரிய மனிதக்குரங்கு “ நான் உன்னை துரத்திப் பிடித்தால் , என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் “ என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக அமர்ந்திருந்தது

முல்லாவின் ஆராய்ச்சி

முல்லா எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்பவர் , எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படித்தான் ஒரு நாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது....

வழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கிறார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார் அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை , பிறகு அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார் அப்போதும் அவருக்கு விளங்கவில்லை, அதை தனது மூக்கின் அருகில் எடுத்துச் செனறு முகர்ந்து பார்த்தார் , அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற்றது அனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை , பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டு கொண்டார் அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது பிறகு சொன்னார் " ஆஹா , நான் சந்தேகப்பட்டது சரிதான், இது சந்தேகமே இல்லாமல் மாட்டுச்சானம்தான் , நல்லவேலை இது தெரியாமலிருந்தால் இதை காலில் மிதித்திருப்பேன் " என்று தன்னைத்தானே பாராட்டிக்க்கொண்டார்

அடக்க முடியாது

ஒரு சமயம் முல்லா, தம்முடைய அரச சபை அனுபவங்களைச் சீடர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தார்,
இளவரசரின் முன்னால் , வலிமையும், இளமையும் பெற்ற , முரட்டுத்தனமும்,முன் கோபமும் உடைய குதிரை ஒன்று நிறுத்தப்பட்டது. அக்குதிரையின் மேல் ஏறிச்சவாரி செய்யமுயன்ற வீரர்கள் எல்லாம் கீலே விழுந்து, காயமடைந்தனர்.

இதைக் கண்டு நான் சும்மா இருப்பேனா ? எனவே அவ்வீரர்களிடம் சென்று ,” இளைஞர்களே! உங்களால் இந்த குதிரையை அடக்க முடியாது! இதன் மேல் ஒரு நொடி கூட உட்கார முடியாது. தள்ளிச் செல்லுங்கள் “ என்று சொன்னேன்.

அதைக் கேட்டு வீரர்கள் விலகி நின்றனர். இளவரசர் என்னைப் பார்த்தார். மிகுந்த தன்னம்பிக்கையுடன் புன்னகை தவழ எழுந்த நான், குதிரையின் அருகில் சென்றேன் என்று சொல்லிய முல்லா சற்று நிறுத்தினார்.

முல்லா கூறியதை எல்லாம் கேட்ட சீடர்களில் ஒருவன் , “ பிறகு என்ன நடந்தது ? “ என்று கேட்டான்.

அதற்க்கு முல்லா , “ நான் சொன்னது மிகச் சரியாக இருந்தது ! என்னாலும் ஒரு நொடிகூட குதிரையின் மேல் உட்கார முடியவில்லை “ என்று பெருமையாக சொன்னார்


முழு நிலா இரவில் தேன் நிலவில் முல்லாவிடம்

முழு நிலா இரவில் தேன் நிலவில் முல்லாவிடம் அவரது மனைவி கேட்டாள்
“ முல்லா உனக்கு த் தெரியுமா ? பெளர்ணமி இரவில் கடல்கள் கொந்தளிக்கும் , மனித மனம் பைத்தியகாரத்தனம்மாக வேலை செய்யும் ! கேள்விப் பட்டிருக்கிறாயா ? “

முல்லா “ நான் கேள்விப்பட்டதில்லை , ஆனால் உன்னை முதல் முதலாக காதலிக்கிறேன் என்று சொன்னது பெளர்ணமி இரவில் தான்” என்றார்

முல்லா

"முல்லா மிகவும் புத்திசாலி " என்று அரசசபையில் இருந்த பலரும் புகழ்வதைக் கேட்ட மன்னர், முல்லாவின் அறிவைச் சோதிக்க எண்ணினார்.
ஒரு நாள் அரச சபை கூடியபோது, அரச சபையில் இருந்த முல்லாவை மன்னர் அழைத்து, முல்லா, " உங்கள் அறிவைச் சோதனை செய்து பார்க்க எண்ணுகிறேன். நீங்கள் ஏதேனும் ஒன்று கூறுங்கள். நீங்கள் கூறுவது உண்மையாயின் உங்கள் தலை வெட்டப்படும்; பொய்யாயின், உங்களைத் தூக்கிலிடுவேன் , எங்கே ஏதாவது ஒன்று கூறுங்கள் " என்றார்.

"முல்லா உண்மையைக் கூறினாலும் இறந்து விடுவார்; பொய்யைக் கூறினாலும் இறந்துவிடுவார். ஆதலால்; முல்லா இன்று தொலைந்தார்" என்று சபையோர் வருந்தினர்கள்.

முல்லா மன்னரைப் பார்த்துப் அமைதியுடன், " மன்னரே , நீங்கள் என்னைத் தூக்கில் போடிவீர்கள் " என்று சொன்னார்.

முல்லா கூறியதைக் கேட்ட மன்னர் திகைத்தார்.

முல்லா சொன்னது உண்மையாயின், அவருடைய தலை வெட்டப்படவேண்டும் , அவ்வாறு வெட்டப்பட்டால், அவர் கூறியது பொய்யாகிவிடும். பொய் கூறினால் தலையை வெட்டாமல், தூக்கில் போட வேண்டும்.
mullaa கூறியது பொய்யாயின் முல்லாவத்தூக்கில் போடவேண்டும்
அவ்வாறு தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மையாகிவிடும் , உண்மையை கூறினால் அவரைத் தூக்கில் போடாமல் தலையயை வெட்டவேண்டும்.

எனவே, புத்திசாலித்தனமாக பதில் சொன்ன முல்லாவை மன்னர் பாராட்டினார், சபையோர் மகிழ்ந்தனர்.

Posted by போவாஸ் | at 12:24 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails