ஒரு மாதத்தில் சராசரியாக 45 இளம்பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்

கேரளாவில், ஒரு மாதத்தில் சராசரியாக 45 இளம்பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு, முதல் ஐந்து மாதங்களில் மட்டும், 225 பெண்கள் இக்கொடுமைக்கு உள்ளாகி உள்ளனர்.

திருவனந்தபுரம், பாலக்காடு மற்றும் கோழிக்கோடு மாவட்ட காவல் நிலையங்களில் தான், கற்பழிப்பு சம்பவங்கள் குறித்த வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், 21 சதவீதம் பெண்கள், 18 வயது கூட நிரம்பாதவர்கள். 15 வயதுக்குக் கீழ் 9 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 சதவீத பெண் கள், 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.இது தவிர, மகளிர் ஆணையத்தில் கொடுக் கப்பட்ட புகார்கள் குறித்து, கணக்கு விவரம் தெரியவில்லை. அவற்றையும் கணக்கில் எடுத்தால், மேற்கண்ட எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்தாண்டு மட்டும், கேரளாவில், 548 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு, மே மாதம் வரை 225 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

கற்பழிப்பு வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகள், பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்களாக இருப்பது அதிகரித்து வருவதாக மகளிர் கமிஷன் தலைவர் நீதிபதி ஸ்ரீதேவி தெரிவித்தார்.

கேரளா மாநிலத்தில், கடந்தாண்டு இளம்பெண்கள் கடத்தல், கற்பழிப்பு என, 9,706 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டில், 9,381 ஆக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்.

Posted by போவாஸ் | at 12:22 AM

1 கருத்துக்கள்:

ஊர்சுற்றி said...

என்ன கொடுமை இது! எல்லா பயபுள்ளகளும் படிச்சவங்கங்கிற பெருமை வேற!

தமிழ்நாட்டு நிலவரம் என்னாங்க?

Post a Comment

Related Posts with Thumbnails