சில குறும்பு உரையாடல்கள்

நபர் 1: இந்த SMSஸை மணந்து பாருங்க, உங்களுக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
நபர் 2: இல்லையே...
நபர் 1: என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று.


மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?
கணவன் :
ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!


ஒரு தந்தை (நண்பரிடம்) : என் பையன் செய்த காரியத்தால் வெளியில் தலை காட்ட முடியவில்லை.
நண்பர் : அப்படி என்ன செய்தான்?
தந்தை: என் பொய் முடியை(wig) எங்கேயோ தொலைத்து விட்டான்.

ஆசிரியர்: முட்டை போடும் உயிரினங்கள் இரண்டு கூறு ?
மாணவன்: வாத்து! வாத்தியார்!


மனைவி: அத்தான்... உங்களை கணவராக அடைய நான் நிறைய கொடுத்து வைத்தவள்...
கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை இப்படிக் குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.


நபர் 1: நான் மட்டும் சரியான நேரத்தில் உதவி செய்யலேன்னா அவன் நடுத் தெருவிலே நின்னுக்கிட்டு இருப்பான்.
நபர் 2: அடடே......அப்படி என்ன உதவி செஞ்சீங்க?
நபர் 3: கூப்பிட்டு ஓரமா நிக்கச் சொன்னேன்.

நபர் 1: உன் பேரு என்னப்பா?
நபர் 2: முன்னுசாமி
நபர் 1: குழந்தைங்க எத்தனை?
நபர் 2: மூனு சாமி.

ஆசிரியர்: ஏன்டா நான் வரும் போது மட்டும் கண்ணாடி போடுறாய்?
மாணவன்: டாக்ரர் தான் தலைவலி வரும் போது மட்டும் கண்ணாடி போட சொன்னார்.


நபர் 1: நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்?
நபர் 2: நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும்
.

பையன்1 : டேய், என் அப்பா ரொம்ப பயந்தாங்கொல்லிடா.
பையன்2 : எப்படிடா?
பையன்1 : எப்போ தெருவை கடக்கும் போதும், என் கையை பிடிக்கிறார்டா.

Posted by போவாஸ் | at 3:47 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails