சத்தம் காட்டாமல் 'ஜகா' வாங்கிய விஜயகாந்த்அரசியல் கட்சி என்பது தேர்தலில் போட்டியிட்டே ஆகவேண்டும் என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். இப்படி சொன்னவர் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்.
சமீபத்தில் நடந்த ஐந்து சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் தே.மு.தி.க., அத்தேர்தலை எதிர்க் கொள் கிறது என்பதற்காகத் தான் விஜயகாந்த் இப்படி அறிக்கை விட்டார். 
தற்போது தமிழகத்தில் காலியாகவுள்ள 603 உள்ளாட்சி இடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 7ம் தேதி நடக்கிறது. திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளின் இரு கவுன்சிலர் பதவிகளுக்கும், ராஜபாளையத்தில் ஒட்டுமொத்த நகராட்சிக்கும் சேர்த்து தான் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் புறக்கணிப்பு நிலை எடுத்த அ.தி.மு.க., தனது கூட் டணி கட்சிகளை புறந்தள்ளிவிட்டு உள்ளாட்சி இடைத் தேர்தலை சந்திக்கிறது. ஆனால் தேர்தலை சந்தித்தே தீரவேண் டும் என்று கூறிய தே.மு.தி.க., தலைமை சத்தமின்றி உள்ளாட்சி இடைத்தேர்தலை புறக்கணித்து "ஜகா' வாங்கியுள் ளது. 
போட்டியா, புறக்கணிப்பா, அதற்கான காரணமென்ன என்பதையும் அக்கட்சி தலைமை இதுவரை வெளியிடவில்லை
இது அக்கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி அரசியல் மட்டத்திலும் பெரும் பரபரப் பாக பேசப்பட்டு வருகிறது. தே.மு.தி.க.,வின் இடைத் தேர்தல் புறக்கணிப்பிற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கட்சியினரிடையே நிலவும் கோஷ்டி பூசல் அதற்கு முதல் காரணமாக சொல்லப்படுகிறது.
தேர்தலில் போட்டியிட்டால் அதற்கு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பணத்தை செலவழிக்க வேண்டும்.ஏற்கனவே பல்வேறு தேர்தலுக்கு பணத்தை செலவழித்து நொந்து "நூடுல்ஸ்' ஆகியுள்ள அவர்கள் ஒதுங்கிக் கொள்வர் அல்லது வேறு கட்சிகளுக்கு ஓடிவிடுவர் என்பதை கருத்தில் கொண்டே தே.மு.தி.க. தலைமை இத் தேர்தலை புறக்கணித் துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி கட்சித் தலைமைக்கும் இத்தேர்தலால் செலவு ஏற்படும்; பிரசாரத்திற்கு செல்ல வேண்டிய நிர் பந்தமும் ஏற்படும். இதுவும் தே.மு.தி.க., தேர்தல் புறக்கணிப்பிற்கு காரணம் என்று விவரம் அறிந்த சிலர் அறிக்கை வாசிக்கன்றனர்.
தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிய அக்கட்சி நிர்வாகிகள் சிலர், கட்சி அலுவலகத்திற்கு வந்து விஜயகாந்தை சந்தித்து பேசினர். அப்போது விஜயகாந்த், "தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் தேர்தலில் சுயேச்சையாக நீங்கள் போட்டியிடுங்கள்; கட்சி சார்பில் போட்டியிட வேண்டாம்' என கூறி அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது.

nandri : dinamalar.

Posted by போவாஸ் | at 12:57 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails