சிறப்பு ரயிலே வேணாம்...நீங்களே தொண்டர்களுடன் டில்லிக்கு வந்து சேருங்க


வருகிற 29ம் தேதி, தமிழக மீனவர்கள் பிரச்னைக்காக, டில்லியில் விஜயகாந்த் உண்ணாவிரதம் இருக்கப்போறார். இதுக்காக, "ஒவ்வொரு மாவட்டச் செயலரும் 100 தொண்டர்களை டில்லிக்கு கூட்டிண்டு வரணும்னு கட்சித் தலைமையில இருந்து உத்தரவு போட்டுட்டா. 
"சமீபத்தில் அறிமுகமான, "பாயின்ட் டூ பாயின்ட் துரந்தோ எக்ஸ்பிரஸ்' ரயில்ல அவர்களை அழைச்சிட்டு போக ஏற்பாடும் செஞ்சிருக்காங்க.தெற்கு ரயில்வேயில் முன்பதிவுக்கு 15 லட்சம் ரூபாய் கட்ட, 22ம் தேதி கடைசி நாள்.அதுக்கு மாவட்டச் செயலர்களிடம் பணம் கேட்டப்ப, ரெண்டு நாள் கழிச்சு தர்றதா சொல்லிருக்காங்க... சில மாவட்டச் செயலர்கள், பணம் இல்லைன்னு சொல்லி, மொபைலை, "ஸ்விட்ச் ஆப்' செஞ்சுட்டாங்கலாம். 
"கோபமான கட்சித் தலைமை, "சிறப்பு ரயிலே வேணாம்... நீங்களே தொண்டர்களுடன் டில்லிக்கு வந்து சேருங்க'ன்னு சொல்லிடுச்சாம்... "கட்சி வளர்ச்சிக்கு ஏராளமான பணத்தை செலவு பண்ணியும், 15 லட்சம் ரூபாய்க்கு நம்மை நம்பலையே'ன்னு மாவட்டச் செயலர்கள் இப்ப புலம்பிட்டு இருக்காங்களாம்.
நன்றி: தினமலர்.
இதுதான் தேமுதிக மற்றும் அதன் தலைவர் விசயகாந்தின் தன்மை, கட்சியினர் மேல் வைத்துள்ள நம்பிக்கை என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். கட்சிக்கு செலவு செய்ய மனமில்லாத கட்சித் தலைவர் விசயகாந்த். கட்சியில இருக்குறவுங்கள 'ஆண்டி'யாக்காமல் விடமாட்டார் போலருக்கு. என்னும் எவ்ளோ நாளைக்குன்னு பாக்கலாம்.
இப்படியெல்லாம் செஞ்சு கட்சிகாரங்கள கஷ்டபடுத்தி டெல்லில போயி டிராமா போடனுமா? ஐயோ..ஐயோ...இன்னும் இவரை சில ஜனங்க நம்பிக்கிட்டு இருக்குறதுதான் கொடுமையிலும் கொடுமை.
"ஆழம் அறியாமல் காலை விடாதே" - இது மாவட்ட செயலர்களுக்கு.
"தன வினை தன்னைச் சுடும்" - இது விசயகாந்துக்கு.
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" - இது மக்களாகிய நமக்கு.
லேட்டஸ்ட் நியூஸ்:
விஜயகாந்த் டெல்லி செல்லும் நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி, முதல்வர் பதவி, ஆளுக்குப் பாதி தொகுதிகள் என்ற ஃபார்முலாவுக்கும் அவர் தயாராகிவிட்டாராம். ஏற்கெனவே, இதுபற்றி டெல்லியில் சுதீஷ் பேசியிருக்கிறாராம். விரைவில் இருதரப்பு தலைவர்களும் பேசுவார்களாம். போராட்டம் நடத்தப் போகும் தலைநகர் டெல்லியிலும் பெண் குழந்தைகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறாராம் கேப்டன். அங்கேயும்  50 குழந்தைகளுக்கான தொகை டெபாசிட் செய்யப்படவுள்ளதாம்.
nandri:kumudam.
இப்போ உங்களுக்கு தெரிஞ்சதா இவர் ஏன் டெல்லில போய் டிராமா போடப் போறாருன்னு.
உங்களால் முடிந்தால் உங்களுக்கு தெரிஞ்சவுங்க,அக்கம்பக்கத்துல இருக்குறவங்ககிட்ட எல்லாம் இவரைப் பத்தின உண்மையை  கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.
"பேராசை பேரு நஷ்டம்" - இதை விஷகாந்த் புரிந்துகொள்ளும்போது பெருங்கஷ்டமாக இல்லாமல் இருந்தால் சரி.

Posted by போவாஸ் | at 10:42 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails