விஜயகாந்துக்கு ஜால்ரா போடுகிறதா தினமலர் ?.

விஜயகாந்துக்கு ஜால்ரா போடுகிறதா தினமலர் ?.

எண்ணற்ற தினமலர் வாசகர்களில் நானும் ஒருவன்.

தினமலர் செய்தித்தாளிலும் சரி, தினமலர் இணையதளத்திலும் சரி சமீப காலங்களாகவே ஒரு வித்தியாசம் தெரிகிறது.
ஒரு நபருக்கு தேவையற்ற அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

அந்த நபர் வேறு யாருமில்லைங்க.

வாய்க்கு வந்ததைப் பேசும் வாய்ச் சவடால் மன்னன்,
ஜெயலலிதாவினால் 'குடிகாரன்' என்று அழைக்கப்பட்டவர்,
கலைஞரால் 'அரைவேக்காடு' என்று அழைக்கப்பட்டவர்,
கேள்வி மட்டுமே கேட்கத் தெரிந்த கேப்டன்

விருத்தகிரி விஜயகந்துதாங்க.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிராச்சாரத்தில் இருந்தே பாத்துட்டு வரேன்,தினமலர் ரொம்பவே கவனம் செலுத்தி அதிக முக்கியத்துவம் தராங்க. விஜயகாந்த் பத்தி எந்த செய்தி வந்தாலும் உடனே அதை தினமலரில் பார்க்க முடியும்.

பனையூர் கொலைவழக்கில் அதிமேதாவி அங்குசாமி போல பல கேள்விகளைக் கேட்டார். இதை பயங்கர பரபரப்பாக செய்தி தினமலர் இணையதளத்தில் வெளியிட்டது.

செய்தியுடன் இணைக்கப்பட்ட விஜயகாந்தின் புகை படத்தை கிட்டத்தட்ட ஐந்து முறை மாற்றி மாற்றி செய்தியைவிட விஜயகாந்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

முதல்வர் கலைஞர் அவர்கள் பத்திரிகை மூலமாகவும், தமிழக போலீஸார் சம்மன் மூலமாகவும் விஜயகாந்திடம் கொலையைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள் என்று கேட்டனர். பயந்துபோய் ஜகா வாங்கி விட்டார் விஜயகாந்த்.

இதே தினமலரில் இந்த ஜகா வாங்கிய மேட்டரை பெரிதாக போடவில்லை. இவரது அறியாமை, வாய்க்கு வந்ததைப் பேசும் வாய்ச்சவடாலைப் பற்றி பெரிதாக எப்போதுமே போடுவதில்லை.

இன்று கூட தினமலர் செய்தித்தாளில், அண்ணாவிற்கும் தனக்கும் துளியும் சம்மந்தமில்லாத விஜயகாந்த், அண்ணா பிறந்தநாளான நேற்று தன அலுவலகத்தில் மலர் தூவி வணங்கினார் என்று புகைப்படத்துடன் வெளி வந்துள்ளது.


இந்த விஜயகாந்திற்கு , அண்ணாவின் மேல் இத்தனை வருடம் இல்லாதப் பாசம், மரியாதயும் இப்ப மட்டும் எங்க இருந்து பீறிட்டு வந்ததுன்னு தெரியுல.

இதற்கு தினமலர் தந்துள்ள அதிக முக்கியத்துவம் ஏன் ?


ஆனால், அண்ணாவின் அரசியல் வாரிசு, பாசத்திற்கு உரிய தம்பி என்று அழைக்கப்படும் நம் முதல்வர் கலைஞர், அண்ணா பிறந்தநாளான நேற்று அவரை மலர் தூவி வணங்கியதை பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் போடவில்லை.



இந்த புகைப்படம் தினமணி இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் முதல்வர் செல்லும் இடங்களுக்கு எப்போதுமே செய்தி சேகரிக்க செல்லும் நிருபர் ஒருவர் இருப்பார்?. அவர் செல்லவில்லையோ?

இல்லையில்லை வேண்டுமென்ற இச்செய்தி புறக்கணிக்கப் பட்டுள்ளது.


இதைப் போல .தி.மு. கட்சியின் தலைவர் ஜெயலலிதா அவர்கள் அண்ணாவை மலர் தூவி வணங்கும் புகைப்படத்தையும், அதைப் பற்றியச் செய்தியையும் போடவில்லை.

இந்த புகைப்படம் தினமணி இணையதளத்தில் வெளியாகி உள்ளது.


தமிழகத்தின் பிராதான எதிர்கட்சியின் தலைவர் அவர்களுடைய செய்திக்கும் முக்கியம் தரவில்லை, தமிழக முதல்வரின் செய்திக்கும் முக்கியத்துவம் தரவில்லை.

விஜயகாந்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் என்ன?

கலைஞருக்கும், ஜெயலலிதாவுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப் படவேண்டும் எண்டு நான் கூறவில்லை.

அனைவருக்கும் சமமான முக்கியத்துவத்தித் தந்தால் வேறுபாடுகள் கழையப்படும்.

ஒரு நேர்மையான பத்திரிக்கையாக இருக்கும்.

இல்லையென்றால் 'தினமலர்' என்பதை 'ஜால்ரா மலர்' என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

Posted by போவாஸ் | at 12:44 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails