அண்ணா பிறந்தநாள் : சீன் போட்ட விஜயகாந்த்.
முதல்வர் கலைஞர் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அரசியல் வாரிசு. கலைஞரும் அண்ணாவின் பாசத்திற்குரிய தம்பியாய் இருந்தார். தி.மு.க கட்சியை அண்ணா கலைஞரிடம் ஒப்படைத்தார்.
அந்த நன்றி விசுவாசத்திற்கும், பாசத்திற்கும். மரியாதைக்கும் அண்ணாவை, கலைஞர் அவர்கள் அவரது பிறந்தநாள் போது மலர் தூவி வணங்குகிறார். ஏற்றுக் கொள்ளலாம்.
அடுத்து நம்ம 'அம்மா' ஜெயலலிதா.
கலைஞர் எப்படி பாசத்திற்குரிய தம்பியாய் அண்ணாவிடம் இருந்தாரோ, அது போலவே அளவற்ற பாசத்துடனும், பற்றுடனும் எம்.ஜி.ஆரிடமும் இருந்தார்.
எம்.ஜி.ஆர் தி.மு.க.வில் இருந்து வெளியே வரும் போது புதிய கட்சிக்கு பெயராக தன் பாசத்திற்குரிய அண்ணாவின் பெயரை சேர்த்து அண்ணா தி.மு.க என்று வைத்தார்.
அவர் மறைந்த பின் அவர் வழியில் வந்த ஜெயலலிதாவும் அண்ணாவை ஏற்றுக் கொண்டு, அ.தி.மு.க கட்சியையும் நடத்தி வருகிறார்.
இந்த நன்றிக்காக அம்மாவும் பேரறிஞர் அண்ணாவுக்கு மலர் தூவி வணங்குகிறார்.
இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.
ஆனால், பேரறிஞர் அண்ணாவுக்கும் இந்த விஜயகாந்துக்கும் என்ன சம்மந்தம்னு புரியலங்க.
இவரு போடுற சீனுக்கும் அளவே இல்லைங்க...
இவருக்கு அண்ணாவைப் பற்றி என்ன தெரியும் ?
அவரது கொள்கை தெரியுமா?
அவர் உழைத்த உழைப்பு தெரியுமா?
அவர் வழிநடத்திய போராட்டங்கள், தீர்வுகள்...இது ஏதாவது இவருக்கு தெரியுமா?
அவர் பேசிய பேச்சுக்களைக் கேட்டதுண்டா?
அவர் எழுதியவைகளை படித்ததுண்டா?
அட...அண்ணா எழுதிய நாடகங்களையாவது படித்ததுண்டா.?
இந்த விஜயகாந்திற்கு , அண்ணாவின் மேல் இத்தனை வருடம் இல்லாதப் பாசம், மரியாதயும் இப்ப மட்டும் எங்க இருந்து பீறிட்டு வந்ததுன்னு தெரியுல.
இந்த படத்தை பாருங்க.
பேரறிஞர் அண்ணா படத்திற்கு முன் வாழைபழமும், ஆப்பிளும், ஆரஞ்சும்.
ஓஹோ..... இதெயெல்லாம் கொடுத்து அண்ணாவுக்கு வாழைப் பழம் கொடுத்த வள்ளல், ஆப்பிள் கொடுத்த வள்ளல், ஆரஞ்சு கொடுத்த விஜயகாந்து...அப்படின்னு பேப்பர் செய்திக்காக (குறிப்பா தினமலர்), வெட்டி பப்ளிசிட்டிக்காக இருக்குமோ ?
இந்த படத்தைப் பாத்தா வணங்கி மரியாதை செலுத்துற மாதிரி தெரியல....போட்டோவுக்கு போஸ் கொடுக்குற மாதிரி தெரியுது.
நானும் google, bing, etc இப்படி பல search engine வெப்சைட்டுல தேடி பாத்துட்டேனுங்க. அண்ணாவுக்கும் விஜயகாந்துக்கும் ஏதாவது ஒரு வகையில் சம்மந்தம் இருக்கும்னு பாத்தா ஒன்னுமே இல்லைங்க.
இதப் படிக்கிறவுங்க உங்களுக்காவது ஏதாவது தெரியுமுங்களா?
0 கருத்துக்கள்:
Post a Comment