சினிமா நகைச்சுவை

எங்க படத்துல டயலாக் கிடையாது. டைட்டிலும் கிடையாது.
ஆர்ட் ஃபிலிமா?
இல்லை....! ப்ளு பிலிம்

சினிமாங்கறது என் ரத்தத்துல ஊறினது சார்
சரி... ஏன் ஒரு மாதிரியான படமாவே எடுக்கிறீங்க.
என் ரத்தம் ஏ குரூப் ஆச்சே...!

அடிக்கடி வாந்தி எடுக்கிற நோயாளியை பத்தி ஒரு படம் எடுக்கப்போறேன்.
என்ன பேரு?
கக்க...! கக்க...!

என் மனைவி டி.வி சீரியலை விரும்புகிறதுக்கும் ஒரு அளவில்லாம போயிடுச்சு
ஏன்?
எங்க வீட்டு பெயரை மெட்டிஒலி இல்லம்னு மாத்திடசொல்றா.

எங்க படத்துல இடைவேளைக்கு முன்ன 3 பாட்டு, இடைவேளைக்கு அப்புறம் 4 பாட்டு.
அப்ப எட்டு முறை இடைவேளைன்னு சொல்லுங்க.

நான் ஹீரோயினா நடிக்கிற படத்தோட காஸ்ட்யூமை நைஸா வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடுவேன்.
ஓ ஹோ... அதான் வீடு நிறைய கர்சீப், ரிப்பனா இருக்குதா?

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
எப்படி?
ரொம்ப நாளா ஒரு திருடன் கரெக்டா நாங்க டி.வி. சீரியல் பார்க்கும் போது வந்து வந்து திருடிக்கிட்டு இருந்தான். ஒரு நாள் கரண்ட் இல்லாத சமயம் அவனை பிடிச்சிட்டோம்

கழுக்கும், மனிதனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னன்னு சொல் லு பார்க்கலாம்?
இரண்டுமே ரஜினிகார்ந்த நடிச்சது

என்னங்க உங்க ரசிகர்கள் எல்லாம் நிறைய களிம்பு மருந்து அனுப்பியிருக்காங்களே ஏன்?
போன படத்துல என் பின்னாடி பெரிய படையே இருக்குன்னு டயலாக் பேசினேன் அதை தப்பா புரிஞ்சு கிட்டாங்க போலிருக்கு.

Posted by போவாஸ் | at 1:00 PM

1 கருத்துக்கள்:

ரமேஷ் விஜய் said...

அருமை. நன்றாக சிரித்தேன்

Post a Comment

Related Posts with Thumbnails