சர்தார்ஜி ஜோக்ஸ் - 5

ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும்

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்.

எடை பார்க்கும் மிஷின்
நம்ம சர்தார்ஜி ஒரு நாள் கடை வீதிக்கு சென்று இருந்தார். அவருடன் அவரது 2 வயது பெண்ணும் சென்று இருந்தார். அப்போது அவர் குழந்தை தனது எடையய் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. மேலும் ஒரு ரூபாய் நாணையத்தையும் தானே போடுவேன் என்று பிடிவாதம் பிடித்தது. ஆணால் குழந்தை உயரம் இல்லாததால் அந்த குழந்தையால் நாணையத்தை போட முடியவில்லை. அதை பார்த்த நம்ம சர்த்தார்ஜி குழந்தையை தூக்கி பிடித்து கொண்டார். குழந்தையும் நாணையத்தை போட்டது.
உடனே ஒரு கார்டு வந்து விழுந்த்தது.
எடை 0 என்று.


தொலைபேசி அழைப்பு
சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.
துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.
50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.
25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.
10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று.

ஓவியம் அல்ல கண்ணாடி
ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்
"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"
பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி"

Posted by போவாஸ் | at 7:54 PM

1 கருத்துக்கள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முல்லா நகைச்சுவை
எல்லாக் கதைகளும்
நல்லா இருக்கின்றன.

Post a Comment

Related Posts with Thumbnails