இந்த நாராயணன் தொல்லை தாங்க முடியலப்பா..


சனிப்பெயர்ச்சியால் சுனாமி ஆபத்து: ஜோதிடர் காழியூர் நாராயணன் தகவல்
நியூசிலாந்து அருகே பசிபிக் பெருங்கடலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சுனாமி அரக்கனால் சாமோவ் நாடு, மற்றும் அமெரிக்கன் சமோவ் தீவை சேர்ந்த 144 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன.இதே போல இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் பிற்பகலில் ஏற்பட்ட பூகம்பத்தால் அங்குள்ள பதாங் நகரமே இடிந்து நாசமானது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த திடீர் பேரழிவுகளுக்கு கடந்த 26-ந் தேதி நடந்த சனிப்பெயர்ச்சியின் தாக்கமே காரணம் என்று சென்னையின் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:- உலக நடப்புகள் யாவுமே பிரகத் ஜாதகம் என்று சொல்லக்கூடிய மன்டேன் அஸ்ட்ராலஜி படி மிக துல்லியமாக இதுவரை நடந்து வந்துள்ளன.
நாஸ்டர் டாமஸ் போன்ற 16-ம் நூற்றாண்டு ஜோதிட வல்லுனர்கள் அன்றே இதனை கணித்து கூறி உள்ளனர்.நமது நாட்டிலும் ஆர்யப்பட்டா, வராகமிகிரர், போன்ற ஜோதிட வானிலை ஆராய்ச்சியாளர்கள் மிகத்துல்லியமாக எடுத்து கூறி உள்ளனர்.இன்று நிகழ்ந்து வரும் ஜல (நீர்) சம்பந்தமான சுனாமி போன்ற பேரழிவுகளுக்கு காரணமாக இருப்பது சனி மற்றும் குருப்பெயர்ச்சிகள் ஆகும்.கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி நடந்த சனிப்பெயர்ச்சி இதற்கு காரணமாகும்.
மேலும் ஜலகாரகன் என்று சொல்லக்கூடிய சந்திரனானது அமெரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் 6 மற்றும் 8-ம் இடங்களில் சஷ்டாஸ்டக தோஷமுடன் விளங்கியதால் இப்படிப்பட்ட நீர் சம்பந்தமான உட்பாதங்களுக்கு (சீரழிவு) காரணம் என்று நம்முடைய ஜோதிட வல்லுனர்கள் அன்றே எழுதி வைத்துள்ளனர்.
குருபகவான் வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி அன்று மகரராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயரும் போது மீண்டும் ஒரு சுனாமி அமெரிக்கா, இந்தோனே சியா போன்ற நாடுகளில் ஏற்படும்.
இதனால் நமது நாட்டுக்கும் சிறிய பின் விளைவுகள் ஏற்படலாம். இது மிதமாக இருந்தாலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி அன்று ஜல ராசியாக மீனத்துக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார். இதனால் இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு “சுனாமி” ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவை யாவுமே பரிகாரத்துக்கு உட்பட்டது என்று அன்றைய பெரியவர்கள் பல ஜெபங்களையும், யாகங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு சுதர்சன யாகம், ஆங்காங்கே செய்தால் சுனாமியை தடுக்கலாம். இதனுடன் மகாமிருத்திஞ்சியயாகம் செய்வித்தால் மனித இறப்புகளும், மற்ற பேரிழப்புகளும் நிச்சயம் தவிக்கப்படும்.
இவ்வாறு ஜோதிடர் காழியூர் நாராயணன் கூறினார்.
ஒரு பெரியார் இல்ல ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை போன்றவர்களை திருத்த முடியாது.
உங்களை நம்பிக்கிட்டு இருக்குற மக்களுக்கு பகுத்தறிவு வர வரை...உங்க கதை நல்லா ஓடும்.

Posted by போவாஸ் | at 8:30 PM

1 கருத்துக்கள்:

r.selvakkumar said...

பதிவு முழுவதும் திரு.நாராயணன் அவர்கள் கூறியதை பிரசுரித்துவிட்டு கடைசி வரியில் நக்கல் அடித்திருக்கிறீர்கள்.

உள்ளுக்குள் உங்களுக்கே காழியுரார் கூறியுள்ளதில் சிறிது ஈர்ப்பு உள்ளது போல எனக்கு தோன்றுகிறது.

Post a Comment

Related Posts with Thumbnails