நகைச்சுவை துணுக்குகள்

நண்பர் 1:உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?

நண்பர் 2 : அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.

மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
மாணவன் 2:யாரோ இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.

குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..
நீதிபதி : ஆமா .. ..
குற்றவாளி :அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் ..

மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்.
 
ரானி : போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றார் ?
வேனி : ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்கிறார்.
 
மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன் : வேற என்னதான் போட்ட?
மனைவி : பேசாம பட்டிணி போட்டேன்.

பாக்கி : என் மனைவியோடு ஹேhட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .

ரமனன் : என்னாச்சு ?
பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா.

பாக்கி : நேற்று ஏன் லீவு ?

ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்.

பாக்கி : அதிக விலை கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது போலருக்கே.

வேலு : எத வச்சு சொல்ற?
பாக்கி : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்கறார்.

பாஸ்கி : புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.
ஜோதிடர் : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
பாஸ்கி : வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குருத்தீங்கன்னா நல்லா இருக்கும்.

சர்வர் : முதலாளி சதாம் உசேன உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கலாம் அதுக்காக போர்டுல இப்படியா எழுதறது.
முதலாளி : என்ன எழுதியிருக்கேன்?
சர்வர் : தயிர் சதாம் தக்காளி சதாம் லெமன் சதாம் ரெடி அப்படீன்னு எழுதியிருக்கீங்க.

பாக்கி : ஏன் சார் நீங்களோ வீணை வித்வான் பின்ன ஏன் குரல் சரியில்லைன்னு கச்சேரி வேணாண்டீங்க?
ரமனன் : நான் பாடிக்கிட்டே தான் வாசிப்பேன் அதனால தான்.

வேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
பாக்கி : நீ என்னாவே....?
வேலு : காலியாயிருவேன்.

சிலுக்கு சீனி : "படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க"
விச்சு : "கரும்பு".

ரமனன் : புத்தகக் கடைக்காரர்கிட்ட வம்பிழுத்தது தப்பாப் போச்சு.
வேலு : ஏன்?
ரமனன் : நல்லா புரட்டி எடுத்துட்டாரு.

டாக்டர் : அந்தப் பேசண்டுக்கு என் மேல கோபம் போல தெரியுது.
நர்ஸ் : எப்படிச் சொல்றீங்க ?
டாக்டர் : நாக்கை நீட்டச் சொன்னா, அந்த சாக்குல நாக்கைத் துருத்துறாரே.

வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.

Posted by போவாஸ் | at 9:54 PM

3 கருத்துக்கள்:

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் said...

எல்லாம் அசத்தலா இருக்கண்ணே....

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் said...

//மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
மாணவன் 2:யாரோ இங்கே தமிழாசிரியர் யாருன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.//

சூப்பர்...

வால்பையன் said...

சூப்பர் தல!

சிரிச்சிகிட்டே இருக்கேன்!

Post a Comment

Related Posts with Thumbnails