என்னத்த செஞ்சு கிழிச்சிட்டீங்க ?.


"இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு செல்வது ஏமாற்று வேலை, கபட நாடகம்"  - இப்படிச் சொன்னவர் ஓய்வு நேர அரசியல் வியாதி என்று பெருமையாக அழைக்கப்படும் விஜயகாந்துதான்.

கலைஞரு  உக்காந்தா குத்தம், பேசுனா குத்தம், பேசலைனா குத்தம்னு பேசிகிட்டு திரியிரவுங்கள்ள இவரும் ஒருத்தர்.


மனசுல இவரு தன்னை புத்தரா, காந்தியா, உத்தம அரிச்சந்திரனா நெனச்சுகிட்டு இருக்காருபோல.  

இவ்ளோ நாளா இலங்கையில இருக்குற தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு யாரையுமே பார்க்கிறதுக்கு அனுமதிக்கலை. யாரும் போகமுடியாத நிலைமையா இருந்துச்சு. 
இந்திய அரசாங்கத்துக்குகிட்ட இலங்கைக்கு போய் முகாம்களை பாக்குறதுக்கு மனு கொடுத்தார்கள் நம் எம்பிக்கள். அது இன்னும் பரிசீலினை நிலையிலேயே இருக்குது.சரியான ஒத்துலழைப்பு இல்லைங்கறதும் ஒருபக்கம் பேச்சா இருக்குது.

அதுனாலதான்  கலைஞரு மத்திய அரசின் அதிகாரப் பூர்வ அனுமதியில்லாமல் தன் சொந்த முயற்சியில், தன் கட்சி செலவில், நாடாளுமன்ற எம்பிக்களின் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். போகுமிடத்தில் அவர்களுக்கு எது நடந்தாலும் அது முழுக்க முழுக்க கலைஞரையே சேரும். அந்த அளவுக்கு முழு பொறுப்பு எடுத்து, அக்கறை எடுத்து குழுவை அனுப்பி வைத்துள்ளார். 

விஜயகாந்து, போகும் குழுவுக்கு ஆதரவாக பேச வேண்டாம், குழு ஏற்பாட்டினை வரவேற்றுப் பேசியிருக்கலாம்.அறிவுரைகள் வழங்கியிருக்கலாம், நானும் வருகிறேன், குழுவில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று விண்ணப்பித்திருகலாம் அல்லது குவாட்டரும் கோழி பிரியாணியும் சாப்பிட்டு குப்புறப் படுத்து குறட்டை விட்டுத் தூங்கியிருக்கலாம். 

இதை எதுவும் பண்ணாமல், நாடாளுமன்றக் குழு இலங்கை சென்று, முகாம்களைப் பார்வையிட்டு நாடு திரும்பி வெளிப்படையான அறிக்கையை  இன்னும் தராத போது....நாடாளுமன்றக் குழு இலங்கை செல்வதைக் கபட நாடகம் என்றும், ஏமாற்று வேலை என்றும் கூறுவது...தேவையற்ற ஒன்று. உங்களது தாழ்மையான கீழ்த்தரமான எண்ணங்களே.. அந்தப் பேச்சின் மூலம் வெளி வந்துள்ளது.
 எதுகெடுத்தாலும் கலைஞரைத் திட்டுவதும், இழிவானச் சொற்களால் பேசுவதும், அநாகரீக வார்த்தைகளால் அலங்கரிப்பதும் தேவையற்ற ஒன்று. 

இலங்கைப் பிரச்சனையில் வாய் கிழியப் பேசும் நீங்கள்....இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது எங்கே சென்றீர்கள் ??? 

இலங்கையில்  உள்ள ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் வரையில் நானும் , கட்சியில் உள்ள எனது தொண்டர்களும்,சிகர்களும் கருப்பு பட்டையை (பேட்ஜ்) எப்போதும் அணிவோம் என்று உரக்க கூவினேரே..அது என்னவாயிற்று.???

சமீபத்தில் கூட தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு தில்லியில் போய் உண்ணாவிரதம் இருந்தீர். வாய் வழிக்க வசன மழை பொழிந்துவிட்டு வந்தீர். அதைத் தொடர்ந்து இரு நாட்கள் கழித்து, இலங்கையின் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இலங்கைக் கடற்படைகள் தமிழக மீனவர்களைத் தாக்கவில்லை.அது பொய்யானக் குற்றச்சாட்டு என்று கூறினார்.நம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் 'கடந்த பத்து மாதங்களாக தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படவில்லை' என்று கூறினார்.
இதற்கு வைகோ, ராமதாஸ், திருமாவளவன் கண்டனம் தெரிவித்தனர். துணைத் தூதர் வெளியேற வேண்டும் என்றும் கூறினர். பாஜக கூட கண்டனம் தெரிவித்தது. 
ஆனால், தில்லி வரை உண்ணாவிரதம் நடத்திவிட்டு ஊரு திரும்பிய நீங்கள் ஒரு வார்த்தைக் கூட பேசாமல், பொட்டிப் பாம்பை போல பதுங்கிக் கொண்டீர். தில்லியில் வாய் கிழிய பேசியதில் கொஞ்சமாவது வடிவேல் கிருஷ்ணமூர்த்திக்கும், ப.சிதம்பரம் அவர்களின் எதிமாறான கருத்துக்களுக்கு பதில் பேசியிருக்கலாமே. அப்போது எங்கே சென்றிருந்தீர் ???.

இப்படிப்பட்ட நாடகங்களை எல்லாம் அரங்கேற்றிவிட்டு நீங்கள் கலைஞரைப் பற்றி கூற என்ன அருகதை இருக்கிறது.?

 கலைஞரைத் திட்டுங்க, கண்டனத்தை தெரிவியுங்க...வேணாங்கல. ஆனா அதுக்கு முன்னாடி நாம யோக்கியமா, நமக்கு அருகதை இருக்கான்னு நெனைச்சு பாருங்க.

இலங்கைத் தமிழர்கள் பற்றியும், தமிழ் மீனவர்கள் பற்றியும், தமிழ் மக்கள் பற்றியும் கடவுளுக்கு கூட இல்லாத அக்கறை உங்களுக்கு இருக்கறதா சொல்லும் நீங்கள் இது நாள் வரை செஞ்சு கிழிச்சது என்ன ???. 

தொடர் உண்ணாவிரதம் இருந்தீங்களா ?.
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தீங்களா ?.
நடைபயணம் போனிங்களா?.
ஓயாத போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் பண்ணியிருக்கிங்களா?.
பாமக ராமதாஸ் போல்...மாதிரி பட்ஜெட் ஏதாவது போட்டிருக்கிங்களா?.
கலைஞரைத் திட்டுவதையும், குறைகூருவதைத் தவிர உருப்படியாக ஏதாவது செய்தது உண்டா ?.

இது வரை ஏதாவது உருப்படியாக பேசியது உண்டா?

என்னத்த செஞ்சு  கிழிச்சிருக்கிங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க. நாட்டு மக்கள் தெரிஞ்சுகிடலாமே.

சுய சிந்தனையும், சுய எண்ணமும் இல்லாமல், அடுத்தவர் எழுதிக் கொடுத்து அதை மனப்பாடம் செய்து, அறிக்கையை விடும் நீங்களே இவ்ளோ பேசும் போது...தன் கை பட, தன் சுய சிந்தையோடு, தன் எண்ணத்தை எழுத்தாக எழுதி அறிக்கையை விடும் கலைஞருக்கு உங்கள் வாய்ச் சவடாலுக்கு பதிலும், உங்கள் நாவுக்கு கடிவாளமும் போடுவது மிக சுலபம், எளிது

ஆயினும் அவருக்கு மிக நன்றாகத் தெரியும்...'சூரியனை பார்த்து நாய் குறைத்தாலும், சூரியனின் ஒளி மங்காது' என்று.

அனைவரையும் அனுசரித்து போகக்கூடியவர் கலைஞர் என்று பலருக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும். இதுவே  ஜெயலலிதா அம்மா அவர்களின் ஆட்சி என்றால், அவர் முதல்வராக இருந்திருந்தால்...கலைஞரைப் பேசுவது போல் ஒரு வார்த்தை உங்களால் பேசி இருக்க முடியுமா?. அப்படி பேசியவர்களின் நிலை என்ன ஆயிற்று என்றும் உங்களுக்கு தெரியும்.

இனிமேலாவது கொஞ்சம் நிதானத்துடன், புத்தி கூர்மையோடு பேச முயற்சி செயுங்கள். உருப்படியாக யோசியுங்கள். செயல்படுத்துங்கள். அப்போது வரவேற்கிறோம். ஆதரவு தருகிறோம்.

கருப்பு எம்ஜிஆர்னு தனக்கு தானே கூப்டுகிட்டு இருந்தா மட்டும் எம்ஜிஆர் ஆயிட முடியாது?....எம்ஜிஆர் போல் ஒரு சதவீதமாவது நடந்துக்க தெரியனும்.உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாக முடியாது.
உரக்க கத்தினாலும் பொய் உண்மையாகிவிடாது.

Posted by போவாஸ் | at 3:40 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails