இதெல்லம் ஒரு பிழைப்பா ?...


விஜய்க்கு இது போதாத காலம் போலிருக்கிறது.  வேட்டைக்காரன் விவகாரத்திற்கே இன்னும் விடை தெரியமாமல் இருக்கிறது.   இதில் அடுத்த பிரச்சனை வேறு.

நில வில்லங்கத்தில் சிக்கியுள்ளார்.  காய்த்த மரம் கல்லடி படத்தானே செய்யும் என்று விஜய் வட்டாரம் ஆறுதல் சொல்லிக்கொண்டாலும்,  அடி மேல் அடி விழுகிறதே என்று கவலையிலும் இருக்கிறது.

நடிகர் விஜய்க்கு வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கீடு செய்தது. இதை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை செனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
’’எனது தந்தை ரத்தினபாண்டியன் சென்னை பாடி பகுதியில் நிறைய நிலம் வைத்திருந்தார். கொரட்டூர் வீட்டு வசதி வாரியத்துக்காக 1973-ல் எனது தந்தையின் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலம் 36 ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை. இவ்வாறு பயன்படுத்தாமல் இருந்தால் நில சொந்தக்காரருக்கே அந்த நிலத்தை திருப்பி தரவேண்டும்.
எனவே, நிலத்தை திருப்பி தருமாறு ஐகோர்ட்டில் எனது தாயார் வழக்கு தொடர்ந்தார். 3 மாதத்தில் எங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4.3.2008 அன்று வீட்டு வசதி துறை செயலாளர் ஆர்ஜிதம் செய்த நிலத்தை திருப்பிதர இயலாது என்று தெரிவித்தார்.

ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் ஒருபகுதி அம்பத்தூர் நகராட்சி சாலைக்கும், இன்னொரு பகுதி குடியிருப்புக்கும், வணிக வளாகத்துக்கும் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதுதவிர, .38 ஏக்கர் நிலம் திராவிடம் பஞ்சாயத்து திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், 2008 செப்டம்பர் மாதம் .38 ஏக்கர் நிலத்தில் காம்பவுண்டு சுவர் கட்டுவது தெரிய வந்தது. இந்த நிலத்தின் பெரும்பகுதி நடிகர் விஜய்க்கு ஒதுக்கியுள்ளனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுபற்றி கேட்டபோது, 25.4.2007-லிலேயே விஜய்க்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் திராவிட பஞ்சாயத்து திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை விஜய்க்கு வீட்டு வசதி வாரியம் வழங்கியுள்ளது.
வீட்டுவசதி வாரியம் ஒருவருக்கு அதிகபட்சம் ஒரு கிரவுண்டு, குறைந்தபட்சம் 5 சென்ட்தான் ஒதுக்க முடியும். ஆனால் வரைமுறையை மீறி பெரிய அளவில் .27 ஏக்கர் நிலம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட செல்வாக்கு அடிப்படையில் அவருக்கு இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும்.
4.3.2008 அன்று நிலத்தை எங்களுக்கு திருப்பித்தர முடியாது என்று வீட்டு வசதி துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். நிலத்தை விஜய்க்கு ஒதுக்கீடு செய்ததையும் ரத்து செய்யவேண்டும்’’என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

---------------------------------------------------
பைசாவுக்காக, சினிமவில் வாய் கிழிய பேசி உத்தமனாக பக்கம் பக்கமாக டயலாக் பேசும் நடிகனுக்கு, அநியாயத்தை எதிர்த்து அரை டஜன் பன்ச் டயலாக் பேசும் நாயகனுக்கு நிஜ வாழ்கையில் கொஞ்சம் தூய்மையாக, நேர்மையாக,  வாழ கசக்கிறதோ? இதெல்லம் ஒரு பிழைப்பா.?

நிலத்தினை விஜய் தெரிந்து அல்லது தெரியாமல் வாங்கியிருந்தாலும் குற்றம் குற்றமே. அவருக்கு இருக்கும் காசுக்கும் புகழுக்கும் வேறு எத்தனை எத்தனையோ இடங்கள் கிடைத்திருக்கும், வாங்கியிருக்கலாம்.இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் வரம்பு மீறச் செய்து, குற்றத்திற்கு, நிலா மோசடிக்கு துணையாக பயன்படுத்தியிருக்கிறார். இடத்தினை மிகக் குறைந்த அளவிற்கு வாங்கிருக்கிறார் பாருங்கள் இவரது குறுக்கு புத்தியினை.

மனிதாபிமானம், நேர்மை, தூய்மை உடையவன் இதை செய்ய மாட்டான். செய்யவும் துணிவு வராது. இது ஒரு கீழ்த்தரமான செயல். கோர்ட் கடுமையான கண்டனகளை விஜய் தரப்புக்கு தெரிவிக்க வேண்டும். கண்டிக்க வேண்டும். இன்னும் எத்தனை இடத்தில் இது போன்ற இடத்தினை வாங்கி போட்டுள்ளாரோ ?.

இப்பொழுதுதான் தெரிகிறது, விஜய் அரசியலுக்கு வர முயற்சிப்பது இது போன்று குறுக்கு வழியில் வாங்கி வைத்திருக்கும் சொத்துக்களை பாதுகாக்கவேயன்றி வேறு எதற்குமில்லை என்று. சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கோர்ட் கண்டிக்க, தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு தகுந்த, சாதகமான பதிலினை கூறி நீதியை நிலை நாட்ட வேண்டும். இதற்கு மேலும் தன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் தவறை உணர்ந்து மீண்டும் நிலத்தின் உரிமையாளரிடம் நிலத்தினை ஒப்படைத்தால் உமக்கு ஒரு நன்றி + வாழ்த்துக்கள். அப்படியில்லைனா.கடவுள் பாத்துப்பார்..அதிலிருந்து தப்ப முடியாது. ஒவ்வொரு பலனுக்கு ஒரு பிரதிபலன் உண்டு.

Posted by போவாஸ் | at 11:17 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails