கழுதைக்கு கல்யாணம்...மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் மக்கள்.

கழுதைக்கு கல்யாணம்...மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் மக்கள்.


மழை பெய்ய வேண்டி இரு கழுதைகளை பிடித்து, கோவிலில் வைத்து கல்யாணம் செய்துள்ளனர், கோவில்பட்டியில் இருக்கும் ஒரு பகுதி மக்கள். கழுதைகளுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் மழை பெய்துவிடுமா என்ன?


இன்றைய காலத்தில் இது போன்று சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பது நமக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இன்னும் நம் மக்கள் அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிப் போயுள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது. வேதனையைத் தருகிறது.


இந்த வீடியோவின் பின்னணியில் குரல் கொடுத்த முகம் தெரியாத தினமலர் பத்திரிக்கையின் நபர்,  இப்படி ஒரு முட்டாள்தனமான செயலைக் கண்டித்து, மூடனம்பிக்கையை போக்கும் சமுதாய, சமூக அக்கறையில்லாமல், கழுதைக்கு கல்யாணம் நடந்தத்தைப் பற்றி பெருமை பட வர்ணனையாக வர்ணித்துள்ளார்.



என்று திருந்தப் போகிறார்களோ. இது போன்று மூடநம்பிக்கையில் ஊறிப்போன மக்களுக்கும், இப்படி ஒரு விவஸ்தகெட்ட கலாச்சாரத்தை பின்பற்றும் மக்களுக்கு இருக்கும் அறியாமை விலக சமுதாய சமூக அக்கறையோடு தினமலர் போன்ற பத்திரிகைகள் செயல்பட வேண்டும்.

இப்படி கழுதைகளுக்கு கல்யாண, மரத்திற்கு கல்யாணம், தவளைக்கு கல்யாணம் அப்படிங்குற விசயத்துல முக்கியத்துவம் கொடுக்குற நம்ம மக்கள், செலவு செய்கிற மக்கள், .. உருப்படியா நல்ல மரங்களை நட்டு வைத்தால், அடுத்து வரும் சந்ததிகளாவது சீரான, ஆரோக்கியமான, நல் வாழ்வு வாழ வழி வகுக்கும். மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

Posted by போவாஸ் | at 12:58 AM

1 கருத்துக்கள்:

முனைவர் இரா.குணசீலன் said...

இவனுங்க திருந்தமாட்டாங்க நண்பரே...

Post a Comment

Related Posts with Thumbnails