நகைச்சுவை துணுக்குகள்


ஒருவர் : சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.
மற்றொருவர் : எப்படிச் சொல்றீங்க ?
ஒருவர் : ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.
திருடன் : என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.
நீதிபதி : எப்படி ?
திருடன் : ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.
நண்பர் 1 : தீபாவளிக்கு ரிலீசாகற படங்கறதால இந்த மாதிரி சீன் வைக்கிறது கொஞ்சம் ஓவர்.
நண்பர் 2 : என்ன சீன்?
நண்பர் 1 : ஹீரோயின் தொப்புள்ல சங்குச் சக்கரம் விடறமாதிரி!
வேலு : "விசிடி கடையெல்லாம் மூடினதால நம்ம டைரக்டர் கை ஒடிஞ்ச மாதிரி ஆயிட்டார்"
ரமனன் : "ஏன் இவங்கதானே திருட்டு வி.சி.டி.ய ஒழிக்கனும்னு குதிச்சாங்க?"
வேலு : "தமிழ் சிடிக்கள மட்டும்தான் சொன்னாங்க இங்கிலீஷையும் ஒழிச்சுட்டா எதப்பாத்து இவர் படம் எடுக்க முடியும்"
கோபு : தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும்
பாபு : ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?
நண்பர் 1 : நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கவிதை எழுதியிருப்பீங்க?
நண்பர் 2 : சரியா சொல்லனும்னா 10 கிலோ 300 கிராம்.
ரானி : தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
வேனி : தெரியலையே .. .. என்னது ?
ரானி : தலையிலே முடி இருக்கறதுதான் .. ..
டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?
நோயாளியின் மனைவி : எப்படி சொல்றீங்க?
டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!

ஒருவர் : டாக்டர் எழுதிக் கொடுத்ததுல மேல உள்ள மருந்து மட்டும் இல்ல.
மற்றொருவர் : மேல உள்ளது மருந்து இல்ல என்னோட பேரு.
பாபு : அவர் ஏன் காரை ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார்.
கோபு : காரை விக்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம்.
ரமனன் : என்னப்பா இது எலக்ட்ரிக் ட்ரெயின் டிரைவர போய் ஈவ் டீசிங் கேஸ்ல புடிச்சுட்டு வந்திருக்கீங்க?
வேலு : லைன்ல நடந்து போய்ட்டு இருந்த காலேஜ் பொண்ணு மேல ட்ரயினால மோதிட்டாராம்.
பாக்கி : டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு!
டாக்டர் : நீங்க சொல்லவே வேண்டாம் எங்கிட்ட நீங்க வந்ததவச்சே புரிஞ்சுக்க முடியும்.
நண்பர் 1 : இதோ தர்றேன் அவசரப்படாதீங்க எல்லாருக்கும் உண்டு அப்டீன்னு 100, 200ன்னு ரூபாய அள்ளி வீசுறாரே அவர் என்ன பெரிய கோடீஸ்வரரா?
நண்பர் 2 : நீ வேற வாங்கின கடனை திருப்பி வாங்க சம்பளத்தன்னிக்கி ஆபிஸ்க்கே கடன்காரங்க வந்திருக்காங்க.
ஒருவர் : அந்த சலூன் கடைக்காரரை ஏன் கைது செஞ்சாங்க?
மற்றொருவர் : "தலை சீவிட்டாராம்"
கோபு : 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்க எழுதின கதையப் படிச்சதும் நீங்களா இப்டி எழுதியிருக்கீங்கன்னு ஆச்சரியமா இருந்தது.
பாபு : உங்களுக்காவது ஆச்சரியம் எனக்கு சந்தேகமா இருந்தது.
ரமனன் : என்னது நம்ம பத்திரிகை ஆபீஸ்லேந்து திருடிட்டு போனவன் திருப்பி பார்சல் அனுப்பியிருக்கானா?
பாபு : அதை ஏன் கேக்கறீங்க? பத்திரிகைக்கு வந்த கதையெல்லாம் படுகண்றாவியா இருக்குன்னு திருப்பி அனுப்சுட்டான் சண்டாளன்.

Posted by போவாஸ் | at 4:37 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails