பிரமிட் சாய்மீராவுக்கு 7 ஆண்டு தடை

சென்னையைச் சேர்ந்த பிரமிட் சாய் மீரா தியேட்டர் பிரைவேட் லிமிடெட் (பிஎஸ்டிஎல்) நிறுவனத்துக்கு பங்கு பரிவர்த்தனை மையம் செபி 7 ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது. இதனால் இந்நிறுவனப் பங்குகள் இனி பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது.

இந்நிறுவனம் பங்கு ஒதுக்கீடு செய்ததில் காணப்பட்ட முறைகேடுகளை செபி கண்டறிந்து அதனடிப்படையில் இந்தத் தடையை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2006-ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியீட்டில் நிறுவன ஊழியர்களுக்கு 4,22,200 பங்குகளை ஒதுக்கியதாக தெரிவித்தது. ஆனால் இதில் 98.5 சதவீத பங்குகளை 7 பேருக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த 7 பேரும் நிறுவன ஊழியர்கள் அல்லர். இவர்களுக்கு மாதாந்திர சம்பளம் ஏதும் வழங்கப்படவில்லை. இவர்கள் ஏழு பேரது பெயரும் வருகைப் பட்டியலில் இடம்பெறவில்லை. அத்துடன் இவர்களது தகுதி மற்றும் நிறுவனத்தில் இவர்களுக்கு உள்ள அனுபவம் உள்ளிட்ட தகவல் ஏதும் இடம்பெறவில்லை.

இந்த 7 பேரும் நிறுவனத்தில் 2006 ஜூலை முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் மட்டும் இருந்துள்ளனர். டிசம்பர் மாதம் ராஜிநாமா செய்துள்ளனர். பங்கு ஒதுக்கீடு முடிவடைந்த உடன் அவர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறியது தெரியவந்துள்ளது. அனைவருமே தங்களது ஜவுளித் தொழிலை விட்டுவிட்டு ஆறுமாத காலம் இந்நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

நிறுவனம் பொது பங்கு வெளியீடு வெளியாகி அது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட காலம் வரையில் இருந்து பின்னர் வெளியேறியுள்ளனர். இதன் மூலம் சட்டவிரோதமாக ரூ. 2.31 கோடி ஆதாயமடைந்துள்ளனர் என்றும் "செபி' குறிப்பிட்டுள்ளது.

Posted by போவாஸ் | at 11:57 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails