விவேக்குக்கு எதிராக கறுப்புக் கொடி!
ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் ஆபாசமாகத் திட்டிய விவேக் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை என பத்திரிகையாளர்கள்- புகைப்படக் கலைஞர்கள் முடிவு செய்திருப்பது தெரிந்ததே.
கடந்த வாரம் நடந்த ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக விவேக் கலந்து கொண்டது தெரிந்ததும், விழாவையே ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் புறக்கணிக்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கதிகலங்கிப் போனார்கள். அந்த செய்தியும் எந்தப் பத்திரிகையிலும் வராமலேயே போனது.
இப்போது மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் விவேக். இது ஒரு சினிமா ஆடியோ வெளியீட்டு விழா. பிலிம் சேம்பரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விவேக்கும் கலந்து கொள்கிறார். விஷயம் தெரிந்ததும், அனைத்துப் பத்திரிகையாளர்களும் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது வீசப்பட்ட அவச்சொற்கள். அவர் அன்றைக்கு அனைத்துப் பத்திரிகையாளர்களையுமே வேண்டுமென்றே திட்டினார் என்பது அவரு
நாளை விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் கறுப்புக் கொடி காட்டி தங்களது கண்டனம் மற்றும் எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பதே அந்த முடிவு. இதுகுறித்து சினிமா பிரஸ் கிளப் நிர்வாகி ராமானுஜம் கூறுகையில், "விவேக் பேசிய வார்த்தைகள் காற்றோடு போய்விடுபவை அல்ல... காலம் உள்ளவரைக்கே தெரியும். எனவே இனி அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க மாட்டார்கள். அவரது செய்தியும் எங்களுக்குத் தேவையில்லை. ஆனால் பத்திரிகையாளர்களைப் பார்த்து மிகவும் கீழ்த்தரமாக, அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பிரயோகித்த இந்த நடிகருக்கு இதுவரை பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு காட்டவில்லை.
0 கருத்துக்கள்:
Post a Comment