அய்யப்பன் மீது நம்பிக்கை


சபரிமலை மண்டலப் பூஜை விழா தற்போது நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க மாலை அணிந்து 41 நாள் விரதம் இருந்து வந்து செல்வார்கள். இதில் உடல் பலகீனமானவர்களுக்கு கேரள தேவசம் போர்டு சில அறிவிப்புகளைச் செய்துள்ளது.
 
அதன்படி நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயாளிகள், ஆஸ்துமா பாதித்தவர்கள் சபரிமலை வரும்போது தங்களது மருத்துவர்களிடம் ஆலோசனை மற்றும் அனுமதி பெற்று வருவது சிறந்தது என்றும், முறையான உடற்பயிசிக்குப் பின்னரே சபரிமலை வரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

நோய் அறிகுறி உள்ளவர்கள் மாலை அணியும் முன்பும், மாலை அணிந்த பின்பும் சபரிமலை தட்பவெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. அவ்வாறு சிகிச்சை பெற்ற பின்பும் 41 நாள் விரதம் முடிந்த பின்பு சபரிமலை செல்லலாம் என்று மருத்துவர்கள் அனுமதி அளித்தால் வரலாம்.

சபரிமலையில் 18 படிகளை ஏறி அய்யப்பனை தரிசிப்பதற்கு முன்னதாக உடல் நலம் பாதித்தவர்கள் மருத்து மாத்திரைகளைக் கொண்டு வரவேண்டும். மேலும் சபரிமலையில் உள்ள மருத்துவ ஆலோசனை மையங்களின் உதவியையும் நாடலாம் என்று கேரள தேவசம் போர்டு தெரிவித்துள்ளது 

இதிலிருந்து அவர்களுக்கே அய்யப்பன் மீது நம்பிக்கை என்பது தெளிவாகிறது.

என்று திருந்தப் போகிறார்களோ ?.

Posted by போவாஸ் | at 9:59 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails