சோனி எரிக்சன் கம்பெனி மூடல்:2ஆயிரம் ஊழியர்கள் வேலை இழப்பார்கள்

செல்போன் தயாரிப்பில் ஜப்பானைச் சேர்ந்த சோனி எரிக்சன் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஜப்பான், சுவீடன், ஆலந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன. 
 
சென்னை அருகில் உள்ள மணப்பாக்கத்தில் சோனி எரிக்சனின் மென் பொருள் மேம்பாட்டு மையம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்தது. சமீபத்தில் வெளியான டி.715செல் போன்கள் இங்கு தான் வடிவமைக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. 
 
சர்வதேச அளவில் சோனி எரிக்சன் நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சோனி எரிக்சனின் புதிய தலைவராக பொறுப்பேற்றவர் உலகம் முழுவதும் உள்ள கிளைகளின் செயல் பாட்டை ஆராய்ந்தார். அவர் அனுப்பிய பிரதிநிதிகள் சென்னை வந்து ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினர். 
 
இதில் சென்னை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் இம்மையத்தை உடனடியாக மூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மணப்பாக்கத்தில் சோனி எரிக்சனின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அலுவலகமும் மூடப்படுகிறது. 
 
சென்னை அலுவலகம் மூடப்பட்டதன் மூலம் 60ஊழியர்கள் உடனடியாக வேலை இழந்தனர். 2010-ம் ஆண்டு வாக்கில் 2ஆயிரம் ஊழியர்கள் வேலை இழப்பார்கள்.

Posted by போவாஸ் | at 12:24 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails