பிராமணர்கள் வாக்குகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறும்


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எஸ்.வி.சேகர், திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த இரு தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். என்று கூறியுள்ளார்.


முதல்வர் கருணாநிதியால் மட்டுமே முற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு 16 சதவீதம், குறிப்பாக பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர முடியும். இதன் மூலம் 40 லட்சம் பிராமணர்கள் வாக்குகள் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு மாறும்’’என்று தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். இதனால் 20 லட்சம் குடும்பத்தினர் பயனடைவர். முல்லை பெரியார், காவிரி பிரச்சனைகளில் அண்டை மாநிலங்களை விட மழைதான் நமக்கு சாதகமாக உள்ளது’’என்று தெரிவித்தார்


'காலம் பதில் சொல்லும்' , 'கால சுழற்ச்சி' என்ற கூற்றுக்கு இதுவல்லவா சரியான சான்று.
ஆரியர் என்ற பார்ப்பன பிராமணர் இந்தியாவிற்கு வந்த முதலே பிராமணர் அல்லாத பிற இனத்தவர்களை அடிமை போலவே, தீண்டத்தகாதவர்கள் போலே நடத்தினர். சொல்லொண்ணா துயரத்திற்கு நம் முன்னோர்கள் தள்ளப்பட்டனர்.


வருடங்கள் உருண்டோடின...காலங்கள் மாறின...காட்சிகள் மாறின, பிராமணர் அல்லாத பிற ஜாதி இனத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்து வாழ்வாதார சூழ்நிலைகளைத் தந்தது அதிமுக, திமுக கட்சிகளின் அரசு. பிராமணர் மவுசு குறைந்தது. ஆட்டம் கண்டது பிராமணர் கூட்டம்.


'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்று சொல்வார்கள். அதுபோல, இன்று பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பெற திமுக என்ற திராவிட கட்சியை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றது. 


அப்பன் செய்த பாவம் பிள்ளையை வந்து சேரும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.


அதைப் போல இப்போது இருக்கும் பிராமணர்களின் முன்னோர்கள் செய்த பாவத்திற்கு அவர்களது சந்ததிகளை வந்து சேர்ந்து இருக்கிறதோ ?

Posted by போவாஸ் | at 8:31 PM

1 கருத்துக்கள்:

Anonymous said...

Please remember, Infosys Narayanamurthy once said, "India is the only country where people fight to call themselves backward". Whatever these apps are doing, will go and hurt their children one day...

Post a Comment

Related Posts with Thumbnails