நிருபரின் கேள்வியால் டென்சனான ராமதாஸ்.

சேலத்தில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நிருபர் களின் கிடுக்கிப்பிடி கேள்வியால் டென்ஷனாகி, பாதியிலேயே எழுந்து சென்றது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வன்னியர் சங்க மாநாட்டில் கலந்து கொள்ள சேலம் வந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நிருபர் களிடம் கூறியதாவது: கோவை வனக்கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அவர்களை அழைத்துப் பேசி கோரிக் கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். வரும் 2011ல், ஜாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு கணக்கெடுக்கும் போது பயன்படுத் தப்படும் படிவத்தில், எஸ்.சி., எஸ்.டி., பட்டியலுடன் ஓ.பி.சி., என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
"ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 2008ல் துவக்கப்பட்டு, வரும் 2012 டிசம்பரில் முடிக்கப்படும்' என்று, அறிவித்த போதிலும் இத்திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோருதலே இன்னும் நடக்கவில்லை. நதி நீர் பிரச்னையில், தமிழகத் துக்கு, கேரளாவால் முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது. கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் மின்சாரம், காய்கறி, அரிசி போக்குவரத்தை பத்து நாட்கள் நிறுத்தினால், கேரளா வழிக்கு வந்து விடும். ஆனால், நாம் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விட்டுக்கொண்டு இருக்கிறோம். இடைத்தேர்தலில் பா.ம.க.,வினர், 49 "ஓ' பாரத்தை பயன்படுத்தி தங்களின் நிலையை வெளிப்படுத்துவர். இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதிலளித்தார்.


கேள்வி: இடைத்தேர்தலில் நீங்கள் எடுத்துள்ள முடிவை பொதுத்தேர்தலிலும் தொடர்வீர்களா?
பதில்: பொதுத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடும். வந்தவாசி தொகுதியில் இதற்கு முன் நடந்த தேர்தலில், பா.ம.க., போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. திருச்செந்தூர் தொகுதியிலும் எங்கள் கட்சிக்கு கணிசமான ஆதரவு உள்ளது.(ஆதரவு இருக்கு...உங்களுக்கு இருக்கா ? )



கேள்வி: வன்னியர் சங்கத்தின் சொத்துக்களை நீங்கள் எடுத்துக் கொண்டதாகவும், உங்கள் பெயரில் சொத்துக்கள் இருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனரே?
பதில்: தெருவுல போற நாய் களுக்கு எல்லாம், நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. கேள்வி கேட்கிறீரே நீர் எந்த பத்திரிகை, நான் சொல்றதெல்லாம் போடுவீங்களா? என் மீது எந்த சொத்தும் இல்லை. வன்னியர் நல வாரியம் அரசு தான் அமைத்துள்ளது. சொத்துக்கள் குறித்து அரசு தான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். என்னிடம் பொறுக்கிக் கொண்டு வெளியில் சென்ற சில நாய்கள் தான், அப்படிச் சொல்லி இருக்கும்.


அதே கேள்வியை மேலும் ஒரு நிருபர் கேட்டதால் டென்ஷன் ஆன ராமதாஸ், "நீங்கள் எந்த பத்திரிகை' என்று கேட்டார்.

நிருபர் பதில் கூறியும் ஆத்திரம் தணியாத ராமதாஸ், மேலும் கூறியதாவது: என் மீது சொத்துக்கள் இருந்தால் நிரூபித்து விட்டு எனக்கு தண்டனை கொடுக்கட்டும். தமிழகத்தில் என்னை போன்று நாகரிகமான அரசியல்வாதி யார் இருக்கிறார். தி.மு.க.,- அ.தி.மு.க.,வுல யாராது ஓர் ஆளை சொல்லு பார்ப்போம். ஏன் விவாதம் வச்சுக்கலாமா? அரசியல்வாதிக்கிட்ட அரசியல மட்டுமே கேட்குறதுக்கு முதல்ல பழகிக் கிடுங்க. இவ்வாறு கூறிய ராமதாசை, மற்ற பத்திரிகை நிருபர்கள் சமாதானப்படுத்தினர். எனினும், அவர் பாதியிலேயே எழுந்து சென்று விட்டார்.


நிருபரின் கேள்விக்கு, இவர் பதில் அளித்த விதத்தைப் பார்த்தாலே தெரிகிறது இவர் எவ்வளவு பெரிய அஅஅஅநாகரீகமான தலிவர் என்று. அரசியலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டியவர் இவர். அடுத்து வரப் போகும் பொதுதேர்தலில், மக்கள் இவருக்கு நல்லதொரு பாடத்தினை கற்றுத் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

Posted by போவாஸ் | at 9:05 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails