தேமுதிகவுக்கு ஆரம்பமே அடி சறுக்கல் : வேட்புமனு சர்ச்சை.
வந்தவாசி ( தனி) தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் ஆதி திராவிடர் இன பட்டியலில் எப்படி இடம் பெற்றார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வந்தவாசி (தனி) சட்டசபைத் தொகுதி ரிசர்வ் தொகுதி என்பதால், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். தே.மு.தி.க., வேட்பாளர் ஜனார்த்தனனின் தாயார் பெயர் லூர்துமேரி, காஞ்சிபுரம் மாவட் டத்தைச் சேர்ந்தவர். கடந்த 19 ஆண்டுக்கு முன் வந்தவாசியில் வந்து குடியேறினார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் வந்தவாசி நகராட்சி 22வது வார்டில் போட்டியிட்டு 20 ஓட்டுகளை பெற்றார்.இவர் ஆதி திராவிட வகுப்பில் இருந்து கிறிஸ் தவ மதத்திற்கு மாறி வந்தவாசி சி.எஸ்.ஐ., சர்ச்சில் கிறிஸ்தவ முறைப்படி ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தவர்கள் பிற்பட்ட வகுப்பினர் பட்டியிலில் சேர்க்கப்படுவர். இந்நிலையில், ஜனார்த்தனன் மனு தாக்கலின் போது, "ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்' என, ஜாதிச் சான்றிதழ் சமர்பித்துள்ளார்."கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஜனார்த்தனன் எப்படி ஆதிதிராவிடர் எனக் கூறி தேர்தலில் போட்டியிட முடியும்' என, எதிர்க் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தே.மு.தி.க., வைச் சேர்ந்தவர்கள், "ஜனார்த்தனன் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர் தான்' எனக் கூறிவருகின்றனர். எனவே, எதிர்க்கட்சியினர் அவர் கிறிஸ்தவர் என்பதை நிரூபணம் செய்ய சர்ச்சில் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்திற்கு மாறியுள்ளாரா என்ற விவரங்களையும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில், ஜனார்த்தனனுக்கு மாற்று வேட்பாளராக ராமதுரை என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.தே.மு.தி.க.,வில் இவருக்கு எதிராக உள்ள கோஷ் டியினர் இவரது மனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக நினைத்து சுயேச் சையாக மனு தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.
இது குறித்து தே.மு.தி.க., வேட்பாளர் ஜனார்த்தனனிடம் கேட்டபோது,""நான் கிறிஸ்தவராக இருந்து ஆரிய சமாஜ் மூலமாக மீண்டும் இந்துவாக மாறிவிட்டேன்,'' என்றார். எப்போது எந்த ஆண்டு சேர்ந்தீர்கள் என கேட்டபோது, "" நான் பிறகு பதில் சொல்கிறேன்,'' (அப்படியே உங்க கட்சித் தலைவரப் போலையே சமாளிக்கிறீங்க ?) என மட்டும் கூறி முடித்துக் கொண்டார்.
ஒவ்வொரு தேர்தல் வரும்போதும்....தேமுதிகவினர் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் போது இது போன்ற நிலையே தொடர்கிறது. வேட்புமனுவிலேயே இவ்வளவு குளறுபடி, தவறுகள் செய்கின்ற தேமுதிக ஒரு பொறுப்பான கட்சியாகவும் தெரியவில்லை, எதிர்கட்சியாகவும் தெரியவில்லை ?.
"நான் ஒருவனே உத்தமன்","என்னால் மட்டுமே நியாயமான ஆட்சி தரமுடியும்" என்று கூறிக் கொண்டிருக்கும் மாலுமி விஜயகாந்து இந்த சர்ச்சைக்கு என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லை.?
0 கருத்துக்கள்:
Post a Comment