அடியோடு குறையும் எஸ்எம்எஸ் கட்டணம்!

எஸ்எம்எஸ் ரேட்டா அடியோடு குறைக்க தொலைத்தொடர்பு ஆணையம் ட்ராய் முடிவு செய்துள்ளது.

எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல் சேவைக்கு பல்வேறு மொபைல் சர்வீஸ் நிறுவனங்களும் கணிசமான கட்டணம் வசூலித்து வருகின்றன. 

பல மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள், கால் சார்ஜைவிட அதிகமாக எஸ்எம்எஸ் கட்டணம் வசூலித்து வருகின்றன.

ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு 50 காசு முதல் 1 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கும் ரேட் கட்டர் எனும் பெயரில் ஒரு தொகையை வசூலிக்கிறார்கள் (கட்டண குறைப்புக்காக). ஆனால் இதன்படிதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று சோதித்துப் பார்க்கும் பொறுமையோ, நேரமோ யாருக்கும் இல்லை என்பதால் மொபைல் நிறுவனங்கள் காட்டில் வசூல் மழை.

உண்மையில் ஒரு எஸ்எம்எஸ்ஸின் விலை ஒரு பைசா அல்லது அதில் 10-ல் ஒரு பகுதிதானாம். காரணம் ஒரு குறுந்தகவலுக்கு அதிகபட்சம் 1 KB க்கும் குறைவான இடத்தையே எடுத்துக் கொள்கிறது. ஒரு KB-க்கு ஒரு பைசாதான் கட்டணம் எனும்போது, அதைவிட குறைவான இடமே தேவைப்படும் எஸ்எம்எஸ்ஸுக்கு ஒரு பைசாவுக்கும் குறைவாகத்தானே கட்டணம் வசூலிக்க வேண்டும்?

இதை வைத்துப் பார்க்கையில் குறைந்தது 40 முதல் 100 மடங்கு வரை ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பத்திரிகைகள் ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. 

இதனால் எஸ்எம்எஸ் கட்டணங்களை குறைத்தே தீர வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது ட்ராய். விரைவி்ல் ஒரு எஸ்எம்எஸ் 1 பைசா அல்லது, குறிப்பிட்ட கட்டணத்துக்கு வாழ்நாள் முழுவதும் எஸ்எம்எஸ் வசதி என்ற அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. 

இன்னும் ஓரிரு தினங்களில் இந்த அறிவிப்பு வரவிருக்கிறது

காத்திருப்போம்.

Posted by போவாஸ் | at 11:04 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails