இமயமலை உருகவில்லை! மத்திய அரசின் உடான்ஸ் அறிக்கை!!

ஜெய்ராம் ரமேஷ் அமைச்சராக உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: உலக வெப்பமயமாதலால், இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதாக சொல்கின்றனர். அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. உருகும் பனிப்பாறைகள் மீண்டும் ஒன்று சேர்ந்து உருவாகிவிடுகின்றன. குறிப்பாக சியாச்சின், கங்கோத்ரி பகுதிகளில் இப்படித்தான் நடக்கிறது. அதனால், இமயமலை உருகிவிடும் என்று கவலை கொள்ள வேண்டியதில்லை. முதலில் வெப்பத்தால் சுருங்கி உருகும் பனிப்பாறைகள், பிறகு அப்படியே பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றன.
சில ஆண்டு காலமாக அலாஸ்கா மற்றும் கிரீன்லாந்தில் ஏற்பட்டுள்ள பனிப்பாறைகள் உருகுவது போன்ற ஆபத்தான நிலை இமயமலையில் இல்லை.இருப்பினும், பனிப்பாறைகளின் நிலைமை சொல்லத்தக்கதாகவும் இல்லை. இந்த இரண்டுங்கெட்டான் நிலை, உலக வெப்பமயம் பற்றிய எச்சரிக்கை மணி என்றே நாம் கொள்ள வேண்டியதிருக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றப் பிரச்சினைக்காக பலநாடுகள் பங்கு பெற்றுள்ள அய்.நா.,வின் உயரமைப்பின் தலைவரான டாக்டர் பச்சோரி, இது குறித்து அளித்த இறுதி அறிக்கையில், இமயமலைப் பனிப்பாறைகள் உலகின் பிற பகுதிகளைவிட வேகமாக உருகுகின்றன. இப்படியே போனால் 2035இல் இமயமலையே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சகத்தின் அறிக்கை குறித்து,இந்த அறிக்கையின் அடிப்படையை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அறிக்கை வித்தியாசமான தகவல்களை அளித்துள்ளது. இது
குறித்து ஆராய்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
உண்மைலேயே மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்துக்கும், அதன் அமைச்சர் ஜெயராம் ரமேசுக்கும் சுற்று சூழலைப் பத்தியும், நாட்டு நடப்பையும், உலக வெப்பமடைதல் குறித்தும் எதுவும் தெரியாது என்றே தெரிகிறது. உலக வெப்பமடைதல் குறித்து ஒவ்வொரு நாட்டினரும், அறிஞர் பெருமக்களும், சுற்று சூழல் ஆர்வலர்களும் , பலவகையான ஆராய்ச்சிகளும் ஆய்வுகள் செய்து கட்டுரைகளையும், ஆவணங்களையும் சமர்பித்துள்ளனர். டாகுமெண்டரி படமாகவே தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

உதாரணத்திற்கு அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் அவர்களின் "An Inconvenient Truth" என்ற டாகுமெண்டரி படத்தினை பார்த்தாலே போதும்.அந்த அளவிற்கு அலசி ஆராய்ந்து தயாரித்துள்ளனர். இதெல்லாம் அமைச்சருக்கு தெரியாதா ? தெரிந்துக் கொள்ளகூடிய பக்குவமில்லையா? நேரமில்லையா ?.சும்மா இருக்குற நேரத்துல, இதுகுறித்து கூகுளில் தேடினாலே போதும், லட்சக் கணக்கான பக்கங்கள் வருகின்றன. ஜெயராம் ரமேசுக்கு அதுக்கு கூட நேரமில்லை போல.

உதாரணத்திற்கு அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் அவர்களின் "An Inconvenient Truth" என்ற டாகுமெண்டரி படத்தினை பார்த்தாலே போதும்.அந்த அளவிற்கு அலசி ஆராய்ந்து தயாரித்துள்ளனர். இதெல்லாம் அமைச்சருக்கு தெரியாதா ? தெரிந்துக் கொள்ளகூடிய பக்குவமில்லையா? நேரமில்லையா ?.சும்மா இருக்குற நேரத்துல, இதுகுறித்து கூகுளில் தேடினாலே போதும், லட்சக் கணக்கான பக்கங்கள் வருகின்றன. ஜெயராம் ரமேசுக்கு அதுக்கு கூட நேரமில்லை போல.
இமயமலை உருகுகிறது என்பதற்கான ஆய்வு வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு :
படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைய நாம தேடுற மாதிரி, அமைச்சர்களுக்கும் தகுதி ஏத்த பொறுப்புகளைக் கொடுக்கணும். அது நடைமுறைக்கு வராதவரை, இது போன்ற ஏட்டிக்கி போட்டியான அறிக்கைகள் வந்து கொண்ட்தான் இருக்கும்போல. என்னத்த சொல்றது. இவரெல்லாம் அமைச்சர் ஆகணும்னு விதி, ஆக்கணும்னு நம்ம விதி.
0 கருத்துக்கள்:
Post a Comment