ஆஸியில் நெடுமாறன், லண்டனில் வைகோ, டென்மார்க்கில் திருமா, கனடாவில் சீமான்


ஆஸியில் நெடுமாறன், லண்டனில் வைகோ, டென்மார்க்கில் திருமா, கனடாவில் சீமான்நாளை  27ம் தேதி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள்.
மாறுபட்ட தகவல்களால் மாவீரர் தின நிகழ்ச்சி குறித்து உலகத் தமிழர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழக தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

அந்த வகையில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்ணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்.

இதே போல லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டென்மார்க் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கனடாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமான், பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்று பேசவிருக்கிறார்கள்.
---------------------------------------------------
ஆஸ்திரேலியாவில் நெடுமாறன் !
லண்டனில் வைகோ !
டென்மார்க்கில் திருமாவளவன் !
கனடாவில் சீமான் !
பிரான்சில் ஜி.கே.மணி !
அப்போ தமிழ் நாட்டில். ???


போராட்டம் நடத்த தமிழர்களும், தமிழ்நாடும் வேண்டும்.
கோஷம் போட்டு பெரியாளாக்க தமிழர்களும், தமிழ்நாடும் வேண்டும்.
அடி உதைபட தமிழர்களும், தமிழ்நாடும் வேண்டும்.
போஸ்டர் ஒட்ட தமிழர்களும், தமிழ்நாடும் வேண்டும்.


ஆனால், உலகமே எதிர்ப்பார்க்கும் மாவீரர் தினத் திருநாள் அன்று, தாய் தமிழ்நாட்டில் ஒரு பொதுக்கூட்டமோ, மாநாடோ அல்லது குறைந்த பட்சம் தாய் தமிழ்நாட்டிலிருந்து ஒரு அறிக்கையாவது விட்டிருக்க வேண்டும்.
ஏன் வெளிநாட்டில் பொய் உரையாற்ற வேண்டும் ?.
தமிழ்நாட்டில் இல்லாத எழுச்சிமிகு தமிழர்களா வெளிநாட்ட்ல் இருக்கிறார்கள் ?.


இதில் கனடாவில் சீமான் கலந்து கொள்ளப் போகும் நிகழ்ச்சியின்  போது நடனங்கள், கவிதைகள், குறும் படங்கள், மாவீரர்களின் தியாகங்களைப் போற்றி பாடல்கள் மற்றும் மாணவர்களின் பேச்சுக்கள் போன்றவை மேடையேறவுள்ளன.


இதையே தமிழ்நாட்டில் செய்யக் கூடாதா?.


எல்லா பேரும், புகழும், வசதியும், வாய்ப்பும் தமிழ்நாட்டிலும், தமிழர்கள் மூலமாக பெற்றுவிட்டு நல்லதொரு தினமான மாவீரர் தினத்தின் போது இங்கே இல்லாமல், இங்கே கொண்டாடாமல், வெளிநாட்டில் போய் நிகச்சிகளில் கலந்து கொண்டு, கொண்டாட வேண்டிய அவசியம் என்ன ?.


தமிழர், தமிழ், ஈழம், பிராபகரன் என்று தூக்கத்தில் கூட சொல்லிக் கொண்டிருக்கும் இவர்கள் இதை தமிழ்நாட்டில் அல்லவா கொண்டாடிருக்க வேண்டும். ?
உண்மைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Posted by போவாஸ் | at 1:00 PM

5 கருத்துக்கள்:

செந்தழல் ரவி said...

தமிழ்நாட்டில் கலைஞர் இல்லையா ???

போவாஸ் said...

செந்தமிழ் ரவிக்கு, கலைஞரைத்தான் அவர்கள் தமிழினத் துரோகின்னு சொல்றாங்களே ? .

புலவன் புலிகேசி said...

தமிழ் நாட்டு அரசியல்வியாதிகள் விட்டு விடுவார்களா??

புலவன் புலிகேசி said...

//செந்தமிழ் ரவிக்கு, கலைஞரைத்தான் அவர்கள் தமிழினத் துரோகின்னு சொல்றாங்களே ? .//

அதனாலதான் இங்க பேசல...

Anonymous said...

Inga pesuna ullalara poga vendi varume

Post a Comment

Related Posts with Thumbnails