சென்னையில் “மிஸ் இந்தியா” போட்டி: “சிக்” ஆடையில் அணிவகுத்த அழகு அரவாணிகள்
அரவாணிகளுக்கு முதன் முதலாக அகில இந்திய அளவில் அழகி போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். சென்னை கோயம்பேட்டில் உள்ள ஓட்டலில் இதற்கான போட்டி இன்று நடந்தது. போலீஸ் கூடுதல் கமிஷனர் எம்.ரவி அழகி போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மணிப்பூர், கோவா, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களில் இருந்து 120 அரவாணிகள் கலந்து கொண்டனர். 800 அரவாணிகள் நாடு முழுவதும் இருந்து போட்டியைகாண குவிந்தனர்.
கூந்தல் அழகு, நடை அழகு, கண்கள் அழகு, அழகான தோல், மிஸ் இந்தியா ஆகிய கட்டங்களாக போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்ற அரவாணிகள் அழகான ஆடைகளில் ஒய்யாரமாக அணிவகுத்து வந்தனர். விதவிதமான கூந்தலில் தங்கள் அழகை வெளிப்படுத்தினார்கள். கவர்ச்சி கண்களை சிமிட்டி பார்வையாளர்களை அசர வைத்தனர்.
மாலையில் மிஸ் இந்தியா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கிரீடம் சூட்டப்படும். நடை, உடை, கண் என ஒவ்வொரு போட்டியிலும் 3 அரவாணிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்படும் அரவாணிக்கு பரிசுத்தொகையும், பதக்கமும் வழங்கப்படும்.
இந்த போட்டியை இந்திய சமுதாய நல அமைப்பு நிறுவனம் நடத்துகிறது. அதன் அமைப்பு செயலாளர் அரிகரன் கூறுகையில், 3 ஆண்டுக்கு ஒருமுறை இது போன்ற அழகி போட்டி அரவாணிகளுக்கு நடத்தப்படும். இனி 2012-ம் ஆண்டு நடைபெறும் என்றார்.
-------------------------
அரவாணிகளின் வாழ்க்கைத் தரம் மாறிட, மேன்மை அடைந்திட போட்டிகள், விழிப்புணர்வுகள் தேவைதான். ஆனால் அழகிப் போட்டி நடத்துவது தான் கேவலத்திலும் கேவலம்.
வேறு விதமான போட்டிகள் மூலம் தங்கள் திறமையை வெளிபடுத்த வாய்ப்புகள் அமையும்.
Posted by போவாஸ்
|
at
6:26 PM
0 கருத்துக்கள்:
Post a Comment