நண்பர்களுக்கும் இலவச விமானப் பயணம்
மத்திய அமைச்சர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி நண்பர்கள், உறவினர்களும் இலவசமாக விமானத்தில் பயணம் செய்யலாம். இதற்கான திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் கடும் அமளிக்கு இடையே குரல் வாக்கு மூலம் நிறைவேறியது.
இப்போதைய சட்ட விதிகளின்படி மத்திய அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டும் இலவசமாக விமானத்தில் ஆண் டுக்கு 34 தடவை பயணம் செய்யும் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மத்திய அமைச்சர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் விஸ்தரிக்கப்பட உள்ளது. அமைச்சர்களின் சம்பளம், மற்றும் பயணப்படிகளுக்கான திருத்த மசோதாவை (2009) மக்களவையில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் 3 தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தார்.
இதன்படி, ஒரு அமைச்சருக்கு இந்தியாவுக்குள் பயணம் செய்ய வழங்கப்படும் பயணப்படி அவருடன் அவரது மனைவி, சட்ட ரீதியில £ன குழந்தைகள் அல்லது தத்து எடுத்த குழந்தைகள், அவரை சார்ந்துள்ள குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் உறவினர்களுக்கும் வழங்கப்படும்.
ஒற்றைப் பயணம் என்றால் அதிகபட்சமாக ஆண்டுக்கு 48 தடவையும், திரும்பி வரும் இரட்டைப் பயணம் என்றால் 12 தடவையும் அனுமதிக்கப்படும். தனியாகவோ அல்லது மொத்தமாகவோ இந்த பயணத்தை மேற்கொள்ளலாம். அமைச்சருடன் குடும்பத்தினர் சேர்ந்தோ அல்லது தனியாகவோ பயணம் செய்யலாம். ஆனால் உறவினர், நண்பர்கள், அமைச்சருடன் சேர்ந்து செல்லும்போது மட்டுமே சலுகையை பெற முடியும்.
இந்த திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
------------------------------------------------
நம்மளோட வரிபணத்துல என்னென்ன கூத்து அடிக்கிறாங்க பாருங்க.
இதுகெல்லாம் எப்ப ஒரு முடிவு வரப் போகுதோ ?.
0 கருத்துக்கள்:
Post a Comment