டாடாவின் புதிய குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் அறிமுகம்.

 டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கிராமப்புற மக்களுக்கு பயன்படக் கூடிய வகையில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு சாதனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

TATA Swach water filter


TATA Swach – World’s most cost-effective water purifier




சுவாச் என்று பெயரிடப்பட்டுள்ள 19 லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த குடிநீர் சுத்திகரிப்பு சாதனம், தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் அழித்து சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சுத்திகரிப்பு கருவி நானோ தொழில் நுட்பத்தில் நெல் உமியை அழுத்தி, வெள்ளி முலம் பூசப்பட்ட உருளையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணிர் மேல் நோக்கி சென்று சுத்தரிகரிக்கப்படுகிறது. இது 3 ஆயிரம் தண்ணீர் சுத்தரிகரித்து முடித்தவுடன் தானாகவே சுத்திகரிப்பதை நிறுத்திவிடும்.இதன் விலை ருபாய்.1000 மட்டுமே.



இது குறித்து டாடா சன்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.கோபாலகிருஷ்ணன், டாடா கெமிக்கல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.முகுந்தன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டாடா கெமிக்கல்ஸ், டாடா கன்சல்டன்ஸி, டைட்டன் ஆகிய நிறுவனங்களின் முயற்சியால், பூனாவில் உள்ள டாடா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக வேறு குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் இல்லை. இந்த தொழில் நுட்பத்தில் வேறு குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் இல்லை. இது இயங்குவதற்கு மின்சாரம் தேவையில்லை. 




இதை தயாரிப்பதற்கு ஹால்டியாவில் தொழிற்சாலை நிறுவப்படும். இங்கு பத்து இலட்சம் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் தயாரிக்கப்படும். இதை முன்று முதல் ஆறு மாதங்களில் மேலும் பத்து இலட்சம் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் தாயரிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். இந்த தொழிற்சாலைக்காக ஏற்கனவே ரூ.20 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் ரூ.100 கோடி முதலீடு செய்யப்படும். 




தற்போது கிடைக்கும் புள்ளி விபரப்படி இந்தியாவில் சுகாதாரமற்ற குடிநீர் அருந்துவதால் வருடத்திற்கு 4 லட்சம் பேர் இறக்கின்றனர். மக்களுக்கு ஏற்படும் 85 விழுக்காடு வியாதி குறிப்பாக வயிற்றுப் போக்கு, வாந்திபேதி, வயிறு வீக்கம், சளி போன்றவை சுகாதாரமற்ற குடிநீரால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. 



இந்த சுவாச் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் விற்பனை செய்யப்படும். பிறகு படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவை வழக்கமாக கடைகளில், முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாய சங்கங்கள், உரம், பூச்சுமருந்து, விதை விற்பனை செய்யும் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தார். 

Posted by போவாஸ் | at 1:54 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails