ரூ3600 கோடியில் ஹெலிகாப்டர்கள்: இத்தாலி நிறுவனத்திடம் வாங்க மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகள் குறித்து பேசிவரும் நிலையில், விஐபிக்களின் போக்குவரத்துக்காக ரூ.3,600 கோடி செலவில் புதிதாக 12 ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த 12 ஹெலிகாப்டர்களையும் இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட என்ற ஒரே நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் வழங்க துடித்துக் கொண்டிருக்கிறது.
இதுதொர்பான ஒப்பந்தங்கள் எல்லாம் கிட்டதட்ட முடிந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனால், விஐபி ஹெலிகாப்டர்கள் புதிதாக வாங்குவதற்கு ஏற்கனவே திட்டமிட்டபடி நிதியமைச்சகம் ரூ.1,400 கோடிக்கு மட்டுமே ஒப்புதல் தந்துள்ளது.
இதற்கு மிஞ்சிய தொகை தருவதற்கு நிதியமைச்சகம் தயக்கம் காட்டிவருகிறது. இதுதொடர்பாக இரண்டு அமைச்சகங்களுக்கும் இடையே கடந்த ஐந்து மாதங்களாகவே பிரச்சனை நடந்து வருவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு கொள்முதல் செய்வதற்கான அரசு ஒப்பந்தத்தில் பல விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக டாமன் எம்.பி ஒருவரும் மத்திய புலனாய்வு மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.
விஐபி ஹெலிகாப்டர்களுக்கான செலவு, முன்னணி போர் விமானம் வாங்குவதற்கு ஆகும் செலவை நெருங்குவதாக இருப்பது தெரிந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சகம் இதில் தனி அக்கறை காட்டிவருவதாகவும் அந்த எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
உலகெங்கும் அரசுகள் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் கூட சமீபத்தில் அதிபருக்கான அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------
நெஞ்சு பொறுக்கவில்லையே...காங்கிரசின் கண்மூடித்தனமான செலவினங்களைக் கண்டு.
இது அடுத்த போபோபர்ஸா ? யார் கண்டது, போக போகப் தெரியும்...
0 கருத்துக்கள்:
Post a Comment