ஜாதி, மதம் இல்லாத திருமண பதிவுச்சான்று அறிமுகம்
திருமணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஜாதி, மதம் குறிப்பிடாத திருமண பதிவுச்சான்றிதழை பத்திரப்பதிவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
திருமணங்கள் பதிவுச் சட்டப்படி, கடந்த நவ. 24 முதல் திருமணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்வது ஏற்கெனவே நடைமுறையில் இருந்தாலும், காதல் திருமணம் செய்தவர்கள் தான் அதை பெரும்பாலும் பயன்படுத்தினர். அவர்களுக்கு ஆங்கிலத்தில் பதிவுச்சான்று தரப்பட்டது. அதில் ஜாதி, மதம், பெற்றோர் விவரம், தொழில் உட்பட அனைத்து விவரங்களும் இடம்-பெற்றிருந்தன. இதற்கான விண்-ணப்பத்தை பூர்த்தி செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தன. இதை தவிர்க்க, ஜாதி, மதம் இல்லாத புதிய திருமணப்பதிவுச் சான்றிதழை தமிழ், ஆங்கிலத்தில் பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. தம்பதியின் பாஸ்போர்ட் போட்டோக்கள் ஒட்டிய அந்த சான்றிதழில், பெற்றோர் பெயர், ஊர் மற்றும் திருமணம் நடந்த தேதி, ஊர் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய-தாக உள்ளது.
கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு ஜாதி குறிப்பிடாத இந்த சான்றிதழால் அரசின் நிதியுதவி கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இது குறித்து மதுரை பத்திரப்பதிவு டி.அய்.ஜி., அண்ணாமலையிடம் கேட்டபோது, “தம்பதியினர் அவரவர் ஜாதி சான்றிதழை சமர்ப்பித்-தால் நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படாது. மேலும், ஏற்கெனவே திருமணம் செய்தவர்கள் கூட, தங்கள் திருமணத்தை பதிவு செய்யலாம்,’’ என்றார்
0 கருத்துக்கள்:
Post a Comment