" தே.மு.தி.க. அலுவலகத்திற்குள் தி.மு.க. இருக்கிற கதையைக் கேளுங்கள். தேர்தல் பிரசாரத்தின்போது, தனியார் மருத்துவமனைகளில் அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பதாகக் குற்றஞ்சாட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார் அல்லவா? ஆனால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்திலேயே அரசு வண்ணத் தொலைகாட்சிப் பெட்டிதான் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறதாம்."
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்.
தன் கட்சியில இருக்குற ஓட்டையையே பாக்க முடியலை, தீர்க்க முடியலை. இதுல திமுகவை எதிர்க்க, குறை சொல்ல வந்துட்டாரு விஜயகாந்து. அடுத்தவங்கள குறை சொல்றது சுலபம். விஜயகாந்து மத்தவங்கள குறைசொல்றதுகு முன்னாடி இவரு பக்கம் எல்லாம் ஒழுங்கானு பாக்கணும்.
என்னத்தசொல்ல, இவரு பின்னாடி போற மக்கள் பாடு திண்டாட்டம்தான். வெளில தெரிஞ்சது தூத்துக்குடில மட்டும்தான். தெரியாதது எங்கெல்லாம் இருக்கோ?. சொல்ல முடியாது அவரு வீட்டுலயும், அவரோட காலேஜ் ஹாஷ்டல்லையும் கூட இருக்கலாம் ? எல்லாம் விஜயகாந்துக்கே வெளிச்சம்.
Posted by போவாஸ்
|
at
12:03 AM
|
நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதற்காக முதல்வர் கலைஞரின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணி முடிவடைந்தது. டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் நடைபெறவுள்ள விழாவில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இப்புத்தகங்களை வெளியிடுகிறார்.
முதல்வர் கலைஞரின் நூல்களை, அனைவரையும் வாசிக்கச் செய்யவும், நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய வசதியாக, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பொறுப்பை, பாரதியார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் க.திருவாசகம் செய்து வந்தார். பல்கலையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. மொழி பெயர்ப்புப் பணிகள் நிறைவு பெற்று விட்டதால், டிசம்பர் மாத இறுதியில் இவற்றை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொல்காப்பியப் பூங்கா
கவிதை மழை (மூன்று தொகுதிகள்)
சங்கத் தமிழ்
பொன்னர் சங்கர்
தென்பாண்டிச் சிங்கம்
அனார்க்கலி (ஓரங்க நாடகம்)
பாயும்புலி பண்டாரகவன்னியன்
உரைநடைகள்
பராசக்தி
மனோகரா
சிறுகதைகள் ஆகிய 12 நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
சென்னைப் பல்கலை அரங்கத்தில் நடைபெறவுள்ள விழாவில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நூல்களை வெளியிடவுள்ளதாக, பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
Posted by போவாஸ்
|
at
11:29 PM
|