நோபல் பரிசுக்கு - கலைஞரின் படைப்புகள்



நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதற்காக முதல்வர் கலைஞரின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணி முடிவடைந்தது. டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் நடைபெறவுள்ள விழாவில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இப்புத்தகங்களை வெளியிடுகிறார்.
முதல்வர் கலைஞரின் நூல்களை, அனைவரையும் வாசிக்கச் செய்யவும், நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய வசதியாக, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பொறுப்பை, பாரதியார் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் க.திருவாசகம் செய்து வந்தார். பல்கலையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. மொழி பெயர்ப்புப் பணிகள் நிறைவு பெற்று விட்டதால், டிசம்பர் மாத இறுதியில் இவற்றை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொல்காப்பியப் பூங்கா
கவிதை மழை (மூன்று தொகுதிகள்)
சங்கத் தமிழ்
பொன்னர் சங்கர்
தென்பாண்டிச் சிங்கம்
அனார்க்கலி (ஓரங்க நாடகம்)
பாயும்புலி பண்டாரகவன்னியன்
உரைநடைகள்
பராசக்தி
மனோகரா
சிறுகதைகள் ஆகிய 12 நூல்கள் வெளியிடப்படவுள்ளன. 
சென்னைப் பல்கலை அரங்கத்தில் நடைபெறவுள்ள விழாவில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நூல்களை வெளியிடவுள்ளதாக, பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

Posted by போவாஸ் | at 11:29 PM

1 கருத்துக்கள்:

அஹோரி said...

பேசாம சைனா பக்கம் ஓடி போயிரலாமா ?

Post a Comment

Related Posts with Thumbnails