சுவையான நகைச்சுவை
சுவையான நகைச்சுவை
பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?
விழுந்தது பலாப்பழம் ஆச்சே.
------------------------
ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற?
எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்.
------------------------
உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு?
எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லைங்க எல்லோரும் ஒல்லி தான்.
------------------------
நகை கடைக்காரனுக்கு பிடித்த சோப்?
பொன் வண்டு.
------------------------
ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன்.. ஆசீர்வாதம் பண்ணு பாட்டி.
பார்த்து மெதுவா ஓடிப்போ, வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே.
------------------------
டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்?
ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.
------------------------
நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க?
நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்.
------------------------
அந்த ஆள் புத்தகத்தை தின்கிறார் ஏன்?
அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு.
------------------------
கி.பி. 5000ல் உலகம் எப்படியிருக்கும்?
உருண்டையாகத்தான்...
------------------------
ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான்.
என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.
உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா
ஆமாம்
எங்கே தொலைத்தாய்?
அடுத்த தெருவில் தொலைத்தேன்.
அதை இங்கே ஏன் தேடுகிறாய்?
அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்.
------------------------
அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?
அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.
------------------------
குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?
நாம கேட்டா கொடுப்பாரா...
------------------------
உங்க வீட்டில் இன்று சாம்பாரா?
எப்படி கண்டுபிடித்தீர்கள்?
நான் மூக்காலும் உணர்ந்தவன்.
------------------------
வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது?
எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.
------------------------
கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?
இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள்.
------------------------
மிகவும் மக்கான ஊர் எது?
மாமண்டூர்.
------------------------
நம்ம கபாலி ரொம்ப சின்சியர்
எப்படி சார்?
நேத்து நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான்.
------------------------
ஒவ்வொரு விரல்லியும் ஒரு சிகெரட் வெச்சு பிடிக்கிறாரே?
நிறைய சிகெரட் பிடிப்பாருன்னு சொன்னனே அது இவர்தான்.
------------------------
நேற்று அவனை ஒன்றுக்குமூ லாயக்கில்லை என்று கூறிய பிறகு எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும்படி ஒரு காரியம் செய்து விட்டான்.
அப்படி என்ன காரியம் செய்தான்?
கால்வாயை குச்சியால் கலக்கி விட்டான்.
------------------------
மெக்கானிக்கு பிடித்த சோப் எது?
வீல் சோப்.
------------------------
நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்?
நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும்.
------------------------
வயதான பாட்டி வீட்டிற்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிந்தார். அங்கு வந்தவர் என்ன தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றார்? வீட்டிற்கு உள்ளே போட்ட நைகைய தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார் பாட்டி?
ஏன் வெளியே தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றர் அவர் ? உள்ளே மின்சாரம் கட் அதான் வெளியே தேடுகிறேன் என்றாராம்.
------------------------
உள்ளாடை அணியும் ஊர் எது?
வாணியம் பாடி
------------------------
சாப்பிடக்கூடிய ஆணி எது?
பிரியாணி
------------------------
ஒரே வீட்ல பத்து தடவைக்கு மேலே திருடியிருக்கியே ஏன்?
நான் அவங்க பேமிலி திருடன் எஜமான்.
------------------------
உங்க வீட்டு கதவுல ராமசாமி இன் அவுட்னு போர்டு வெச்சிருக்கீங்கேள, அவர் ரொம்ப பிஸியா?
ம்ஹும் கடன்காரங்களுக்கு உதவியா இதை வெச்சிருக்கார்.
------------------------
உங்க வீடு எங்கே இருக்கு ஸார்?
அடமான பேங்க்ல இருக்கு ஸார்?
------------------------
அந்த கடையில் குடை வாங்காதீங்க அது ராசில்லாத கடை
வாங்கினா என்ன ஆகும்?
மழையே வராது.
------------------------
எதுக்கு வேலைக்காரியை எட்டு மணிக்கு வரச் சொல்ற?
ஏழு மணிக்கு தலைப்பு செய்திகள் சொல்லுவா எட்டு மணிக்கு பக்கத்து வீட்டுச் செய்தியெல்லாம் விரிவா சொல்லுவா.
------------------------
நான் நீச்சல் கத்துக்கேறன்
எங்கே...?
தண்ணியிலதான்...!
------------------------
கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?
ஏன்?
கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்கடி முடியாதே.
------------------------
இவருக்கு நான் பொண்ணுதர்றேன். நீ பொண்ணு தர்றேன்னு பயங்கர போட்டி
அப்படி என்ன வேலை செய்றாரு?
தண்ணீர் லாரி வச்சிருக்காரு.
------------------------
குடி குடியை கெடுக்கும் படம் என்னாச்சு?
ஊத்திக்கிச்சு
------------------------
டி.வி. வாங்கினால் 20 கைக்குட்டைகள் இலவசமாக கொடுக்கிறா ர்களே ஏன்?
மெகா சீரியல் பார்க்கும் போது வரும் கண்ணீரை துடைக்கதான்.
------------------------
ஆட்டோவில் பயணம் செய்த கிராமவாசி மீட்டரில் 30ரூ காட்டிய போதும் 15ரூ தான் தந்தார் ஏன்?
டிரைவரும் ஆட்டோவில் வந்ததால் 50-50 பாதி பாதி.
------------------------
உன் பல்லழகைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்குன்னு என் காதலிகிட்டே சொன்னது தப்பாப் போச்சு
என்னவாம்?
பார்த்துகிட்டே இருங்கன்னு சொல்லி பல்செட்டை கழட்டி என் கையில கொடுத்துக்கிட்டு போயிட்டார்.
------------------------
குடி குடியைக் கெடுக்குமாடா?
நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும்.
------------------------
100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை திட்றாரே ஏன்?
அவர்க்கு வயது 102.
------------------------
எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்
எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக் கும்.
------------------------
இங்கே ஒருத்தன் நாயா கத்திக்கிட்டிருக்கேன் எங்கடிபோன?
உங்களுக்கு பிஸ்கட் வாங்க தாங்க போனேன்.
------------------------
என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண் டு இருக்க முடியாது.
உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா?
நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத் தை விட்டு ஓடிடுவேன்.
------------------------
குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க
வெளிய விட்டா கெட்டுப்போயிடும் அதான்.
------------------------
மறதிக்கு பெயர் போன புகழ் பெற்ற ஓர் அறிஞர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் சோதனையாளர் பயணிகளிடம் டிக்கெட்டைக் வாங்கி பார்த்து விட்டு அந்த அறிஞரிடம் வந்து அவருடைய டிக்கெட்டை கேட்டார். அறிஞர் அதை வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார்.
அவர் யார் என்பதை அறிந்திருந்த டிக்கெட் சோதனையாளர் பரவாயில்லை நான் உங்களிடம் வார்த்தைகளை நம்புகிறேன். டிக்கெட் தேட வேண்டாம் என்று சொன்னார். அதற்கு அறிஞர் எனக்கு தற்போது பொரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்பொழுது எந்த ஊருக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்பது தெரியவோ அந்த டிக்கெட் எனக்கு இப்பொழுது தேவைப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
0 கருத்துக்கள்:
Post a Comment