தமிழக காங்கிரஸில் உருவாகும் புது கோஷ்டி

தமிழக காங்கிரஸில் உருவாகும் புது கோஷ்டி.



சிதம்பரம் கோஷ்டி,
வாசன் கோஷ்டி,
தங்கபாலு கோஷ்டி,
இளங்கோவன் கோஷ்டி....
இப்படி பல பல கோஷ்டிகள் இருக்கும் காங்கிரஸில் புதிதாக உருவாகி சேர இருக்கிறது

விஜய் கோஷ்டி.

இதுவரை நடிப்பில் தான் ஒரு சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற முடியாத விஜய் காங்கிரஸில் சேரப்போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

விஜய் காங்கிரஸில் சேருவதால், காங்கிரசிற்கு லாபமா ? நஷ்டமா ?

காங்கிரஸ் என்றாலே கோஷ்டியும், சண்டையும், சச்சரவும் இருக்கும் என்று அனைவரும் நன்கு அறிந்த ஒன்றே. காங்கிரஸ் கட்சியினரே பல சமயங்களில் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த கூட்டத்தில் விஜய் சேர்ந்தால் எப்படி இருக்கும் ?.

இன்று, விஜய் கட்சியில் சேரப் போகிறார் என்று விஷயம் வெளியே கசிந்ததும் வாங்க வாங்க என்று அழைக்கின்ற வாய், நாளைக்கு ஏன்டா இவர கட்சியில சேத்துகிட்டோம் என்று புலம்பும் நேரம் கண்டிப்பாக வரும்.

விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் மற்ற கோஷ்டியினருக்கு கட்டுப் படுவார்களா?.

மேலிடத்தில் இருந்து, மாவட்டம், வட்டம், ஊராட்சி என்று இவரது ரசிகர்கள் பதவிக்காக ஆசைப் படுவார்கள். மனிதனுக்கு ஆசைகள் என்பது இயற்கைதானே.

இவரால், இருக்கின்ற பல கோஷ்டியினரை மீறி, தன ரசிகர்களின் தாகத்தைப் போக்க முடியுமா?.

இது கொஞ்சம் கஷ்டமே.

சீனியர் கோஷ்டியினரையும், மற்ற கோஷ்டியினரை மீறி விஜயால் மட்டுமல்ல அவரது ரசிகர்களாலும் தொண்டர்களாலும் பெரிதாக ஏதும் செய்ய முடியாத சூழ்நிலைகள் வரும்.

விஜய்க்கு தக்க மரியாதை கிடைக்குமா?.

இவர் காங்கிரஸில் சேரும்போது வேண்டுமானால் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினரும் தமிழகத்தில் 2011ல் நமது ஆட்சிதான் என்று கூவிக் கொண்டு இருக்கலாம்.

விஜயைவிட பக்கம் பக்கமாக , சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும், தேர்தல் நேரத்திலும் வசனங்களைப் பொழிந்து தள்ளும் விஜயகாந்தாலே ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர இன்று வரை இயலவில்லை.

விஜயால் என்ன முடியும் என்று தெரியவில்லை ?.

ஆரம்பகட்டத்தில் விஜயகாந்திற்கு கூட்டம் சேர்ந்ததைப் போல விஜய்க்கும் மதி மயங்கிய ரசிகர்களின் கூட்டம் சேரும்.
சேரலாம் .

பின்னர் எல்லாம் புஸ்வானம் போல் புஸ்ஸாகப் போவது உறுதி.

விஜய் காங்கிரஸில் சேருவதால் கொஞ்சம் பலம் சேரலாம்....ஆனால், அதுகூட ஒரு உபயோகமில்லாத பலமாக இருக்கும்.

ஒரு பெரிய குழி விஜய்க்காக காத்திருக்கிறது. நிச்சயம் அதில் அவர் வீழ்வாரா ? அல்லது வெல்வாரா ? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இவர் அரசியலில் சேர்வது தேவையில்லாத ஒன்று என்று பலர் நினைக்கிறார்கள்....அதில் நானும் ஒருவன்.

ஆனா, இவரு " ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன் " சொல்வாரு. என்ன பண்றது.

எல்லோரும் கடலில்தான் முத்து எடுப்பார்கள்..

நம் விஜயோ அரசியல் என்ற ஒரு சாக்கடையில் மூழ்கி முத்து எடுக்க ஆசைப்படுகிறார்.

இவர் முத்தும் எடுக்க மாட்டார், சிப்பியும் எடுக்க மாட்டார்....

நொந்து நூலாகி...நூடுல்ஸ் ஆகப் போவது உறுதி.


விஜய் காங்கிரஸில் சேருவதற்கு பதிலாக திராவிட கட்சிகளான தி.மு.கவிலோ , அ.தி.மு.கவிலோ சேர்ந்தால் ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பியாவது ஆகலாம்.

காங்கிரசில இருக்குற கோஷ்டியில இவரு போயி சிக்கி சின்னா பின்னாமா ஆனாத்தான் இவருக்குத் தெரியும். புரியும்.

சினிமாவிலும் நடிக்க முடியாமல்...அரசியலிலும் பிரகாசிக்க முடியாமல் ...கடைசில...வடை போச்சேன்னு வீட்டில் உக்காரப் போறாரு.

பாக்கலாம் இது எவ்ளோ தூரம் போகுதுன்னு.

Posted by போவாஸ் | at 4:04 PM

1 கருத்துக்கள்:

கடல் சுறா said...

இன்னாங்னா இப்டி சொல்ட்டீங்கோ...
அவருதான் சிதம்பரத்துக்கு அடுத்த Finance Minister ஹி ஹி ஹி ...

Post a Comment

Related Posts with Thumbnails