சுய சிந்தனையில்லாத விஜயகாந்த்.

சுய சிந்தனையில்லாத விஜயகாந்த்.

அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் ஆட்களை நாம் பார்த்திருக்க கூடும்.

அடுத்தவருடைய பெயர்களையும், பட்டங்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட ஒரு மகா மனிதர் இருக்கின்றார்.

அவரு வேற யாருமில்லைங்க…..நம்ம புரட்சி கலைஞர், கருப்பு எம்.ஜி.யார் விஜயகாந்து தாங்க.



இப்படி பெயர்களையும் பட்டங்ககளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு இவர் அடைந்த பேரும் புகழும் மிக அதிகமே.

எப்படி என்று பார்ப்போம்.


அ. விஜயகாந்தாக மாறிய விஜயராஜ் அழகர்சாமி நாயுடு:

விஜயராஜ் அவர்கள் சினிமா உலகில் நுழைய, பிரபலமாக ஆசை பட்டு தனது பெயரில் உள்ள “ராஜ்” இனை நீக்கி விட்டு …. அப்பொழுது மிக பிரபலமாக பேசப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல் வர வேண்டும் என்று எண்ணி ரஜினியின் பெயரில் இருக்கும் காந்தை எடுத்து தனது பெயரோடு ஒட்டிக் கொண்டு விஜயராஜ்……விஜயகாந்தாக மாறினார்.

பட வாய்ப்புகளும் வந்தது, அதன் மூலம் பேரும் புகழும் வந்தது.


ஆ. புரட்சி கலைஞராக மாறிய விஜயகாந்த்:

புரட்சி கலைஞர் என்று அழைக்கப்படும் இவர் என்ன புரட்சி செய்தார்.
பசுமை புரட்சியா ?
கல்வி புரட்சியா ?.
அல்லது
மக்கள் நலனுக்காக பல போராட்டங்கள் நடத்தி மக்கள் புரட்சி செய்தாரா ?.

ஒன்றுமே செய்ய வில்லை.

நமது தமிழக முதல்வர் கருணாநிதியை விரும்புவர்களும் விரும்பாதவர்கள்கூட அவரைக் கலைஞர் என்று பெருமையாக அழைத்து புகழாரம் சூட்டுவர்.

கலைஞரிடம் மதிப்பும் மரியாதையும் இருப்பதை போல் காட்டிக் கொண்டு ஆட்டுத் தோல் போர்த்தி கொண்ட ஒரு நரி போல் அவரிடம் நட்பாக இருந்து கொண்டு, கலைஞரிடம் அளவற்ற பாசத்துடன் இருப்பதைப் போல் நடித்து கொண்டு, சத்தமில்லாமல் புரட்சியையும் கலைஞரையும் ஏற்கனவே மாற்றிய பெயரோடு அடை மொழி போல் போட்டுக் கொண்டார்.

இதன் மூலம் அவர் அடைந்த பேரும் புகழும் அதிகமே.


இ. தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் :

விஜயராஜ் விஜயகாந்தாக மாறி, விஜயகாந்துக்கு முன்பு புரட்சி கலைஞர் என்ற அடை மொழியும் போட்டுக் கொண்டு சில காலங்கள் சொல்லும் படியான படங்களில் நடித்து கொண்டு இருந்தார்.

பின்னர் காலங்கள் மாறின, காட்சிகள் மாறின. நடித்த படங்கள் ஓடவில்லை, பார்க்க ஆளுமில்லை என்ற நிலை ஆனது. இந்த நிலையில் அவருக்கு உதித்ததுதான் அரசியல் பிரவேசம்.

கட்சி
ஆரம்பித்தார்.

தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் என்று பெயரும் சூட்டினார்.

கட்சியின்
பெயராவது தனது சுய சிந்தனையில் உதித்த பெயரை வைத்தாரா ?. அதுவுமில்லை. கட்சிக்கு பெயர் வைக்க இவர் திரும்பிய இடம் தி.மு...

திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை காப்பி அடித்து கொஞ்சம் உல்டா பண்ணிமுற்ப்போக்கு திராவிட கழகம் என்று மாற்றி, அதன் முன் தேசிய என்று போட்டுக் கொண்டார்.

கட்சியின் பேரைக் கூட சுயமாக சிந்தித்து பெயர் வைக்க தெரியாதவர். கட்சிக்கு பெயர் வைப்பதற்கே இவர் இன்னொரு கட்சியை நாட வேண்டியிருக்கின்றது. அப்படி பட்ட இவரெல்லாம் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்.


ஈ. தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் கட்சிக் கொடி :

கட்சியின் பெயருக்கு தி.மு.கவிடம் இருந்து திருடிய இவர், கட்சிக் கொடியையும் தி.மு.கவிடம் இருந்தே திருட நினைத்தார். அதுவும் நடந்தது.

கருப்பு சிவப்பு நடுவே மஞ்சளைச் சேர்த்தார்.

கட்சிக் கொடியகிவிட்டது.






நீங்களே பாருங்கள் , இவரது கட்சிக் கொடியில் கருப்பும், சிவப்பும் மட்டுமே மேலோங்கித் தெளிவாக தெரிகிறது. இவர் கழுத்தில் இருக்கும் துண்டினைப் பாருங்கள்.


. கருப்பு எம்.ஜி.யார் - விஜயராஜ் :

தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் என்று கட்சியும் ஆரம்பித்து விட்டார். சட்ட சபைத் தேர்தல் வந்தது. பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். கட்சியின் பெயர் சூட்ட தி.மு.க தேவைப் பட்டது.

இப்பொழுது அரசியலில், பிரசாரத்தில், மக்களிடம் பிரபலமாக, ஓட்டுக்களை வாங்க இன்னொரு நபரின் பெயர் தேவைப் பட்டது.

அவர் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.யாரின் பெயர்.

பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் தன்னை ஒரு கருப்பு எம்.ஜி.யார். என்று கூறி பிரச்சாரம் செய்தார். அவரது ரசிகர்கள் தொண்டர்கள் கருப்பு எம்.ஜி.யார் என்று பேனர்களும் வைத்தனர், அப்படியே கோஷமிட்டனர்.

ஆனால் நம் மக்கள், விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.யார் அல்ல அவர் ஒரு வெறுப்பு எம்.ஜி.யார் என்று தங்களது ஓட்டுகள் மூலம் காட்டினர்.

எம்..ஜி.யாரின் பெயரைக் கூட சொல்லக் கூட இவருக்கு தகுதியில்லை.


இனி வரும் காலங்களில் யாரின் பெயரை தன்னுடன் சேர்க்கிறார் என்று பார்க்கலாம்.

இன்று கலைஞரை தாக்கும் இந்த விஜயராஜ் என்ற விஜயகாந்த் தனது அடைமொழியான புரட்சி கலைஞரை நீக்க மனம் உள்ளதா.

திராவிட முன்னேற்ற கழகத்தினை, கடுமையாக, வெட்டி பரபரப்புக்காக தாக்கும் நீங்கள் உங்களது கட்சியில் உள்ள திராவிட கழகம் என்று இருப்பதை நீக்கத் தயாரா ?

கொஞ்சம் கூட சுய சிந்தனைல இதுவரை ஏதும் பண்ணாத இவர் என்னத்தை பண்ணி கிழிக்க போறார்.

இதுல
ஆட்சி மாற்றம் வரும், தே.மு.தி.க ஆட்சியைப் பிடிக்கும், முதல்வர் ஆவேன் என்று வெட்டி வாய்ச் சவடாலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.

Posted by போவாஸ் | at 3:21 PM

1 கருத்துக்கள்:

Vaanathin Keezhe... said...

மீடியை தயவால் பெரும் வெளிச்சத்துக்கு வந்த இந்த பேர்வழி, இன்று வார்த்தைக்கு வார்த்தை அந்த மீடியாவைத்தான் திட்டித் தீர்ப்பதை... என்னவென்று சொல்வது!

-வினோ

Post a Comment

Related Posts with Thumbnails