நகைச்சுவை துணுக்குகள் - சர்தார்ஜி ஜோக்ஸ் - 2

எது என் குதிரை..?
குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.
சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".
அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார். அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வைத்துக் கொண்டு நின்றது. இதைப்பார்த்து கவலைப்பட்ட சந்தா சொன்னார், "சரி இனி சிகப்பு குதிரை உன்னது, வெள்ளை என்னது" 

வேலை வாய்ப்பகத்தில்...  
அரசு பணிக்காக வேலை வாய்ப்பகத்தில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக்கொண்டிருந்தார் ஒரு சர்தார். மிக கவனமாக ஒவ்வொன்றாக படித்து பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார். SEX என்று குறிப்பிட்டிருந்த இடத்திற்கு என்ன எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, 'மாதம் ஒரு முறை குறிப்பிட்டார்.இதை கவனித்த அருகில் இருந்த ஒருவர், சர்தாரிடம் சொன்னார், "அதில் ஆணா அல்லது பெண்ணா என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்" என்று சொன்னார். உடனே சர்தார், 'ஆண்/பெண் NN blem' என்று திருத்தி எழுதினார். அதற்க்கு பிறகு Salaaa EEEecced: என்ற இடத்தில் 'Yee' என்று எழுதினார். விண்ணப்பத்தின் கீழ் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்த குறிப்புகளை படித்துவிட்டு (IIIIIIcciii), உடனே விண்ணப்பத்தை கிழித்து போட்டு விட்டார். பக்கத்திலிருந்த ஒருவர் "ஏன் என்னாச்சு கிழித்து போட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டதற்கு சர்தார் சொன்னார், "நான் இப்ப அவசரமா டெல்லி போகனும், ஏன்னா இந்த விண்ணப்பத்தை அங்கதான் பூர்த்தி செய்யனும்னு இதிலே போட்டிருக்கு" என்றார். அருகிலிருந்தவர் குழம்பிப் போனவராய், "எங்கே அப்படி போட்டிருக்கு காண்பிங்க பார்க்கலாம்" என்றதற்க்கு, சர்தார் காண்பித்த இடத்தில் " Fill The Application In Capital" என்று எழுதியிருந்தது.. 

என்னையா முந்துகிறாய்..
ஒரு இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக்கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர். முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்.. 

எத்தனை இட்லி?
ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார்.அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார், 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார். உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்.. 
சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார். 

ஹாஸ்பிட்டலில் நண்பர்
நோய்வாய்பட்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்றுவிட்ட நண்பரை பார்க்க சர்தார் ஒருவர் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்றுக் கொண்டிருந்த சர்தார், நண்பரின் நிலைமை திடிரென்டு மிகவும் மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார். அந்த நிலையில் பேச முடியாத நண்பர் செய்கையால் ஒரு பேப்பரும், பேனாவும் வேண்டுமென கேட்டார். அவசரமாக ஏதோ எழுதி கொண்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே அவரைவிட்டு பிரிந்தது. சர்தார் அந்த பேப்பரில் தன் குடும்பத்துக்கு ஏதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்கக் கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் சர்தார், நண்பர் வீட்டுக்கு போய் துண்டு பேப்பர் விஷயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி அதைப் படித்துப் பார்க்க சொன்னார். பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி மயக்கம் போட்டு கீழேயே விழுந்துவிட்டார், அப்பொழுதுதான் சர்தார் அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் "நீ என் ஆக்சிஜன் குழாய் மீது நின்றுக் கொண்டிருக்கிறாய் என்று எழுதியிருந்தது.." 

Posted by போவாஸ் | at 11:35 AM

1 கருத்துக்கள்:

வரதராஜலு .பூ said...

Nice Jokes (பழசுதான் என்றாலும்)

Post a Comment

Related Posts with Thumbnails