'வேட்டைக்காரன்' - கவலையில் விஜய்

'வேட்டைக்காரன்' படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கிவிட்டதால் விஜய் நிம்மதியாக இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் நிஜம் அதுவல்ல... சன் நிறுவனத்தின் வியாபார திறமையையும் மீறி இந்தப் படம் ஓடாமல் போய்விடுமோ என்ற கவலையில், எடுத்த காட்சிகள் மற்றும் பாடல்களில் திருத்தங்கள் செய்த வண்ணமுள்ளாராம் விஜய். 

தொடர்ந்து மூன்று படங்கள் படுசுமார் என்ற ரிசல்ட் வந்துவிட்டதால், வேட்டைக்காரன் ஹிட் ஆகியே தீரவேண்டிய கட்டாயம் விஜய்க்கு. 

இந்தப் படமும் சொதப்பினால், நிச்சயம் தனது பொன்விழாப் படத்துக்கு கத்தி வைப்பார்கள் விநியோகஸ்தர்கள் என்பதால் இந்தக் கூடுதல் அக்கறையாம். 

மேலும் இதுவரை இணையத்தில் வெளியானதாகச் சொல்லப்பட்ட பாடல்கள் மற்றும் வீடியோ எதுவுமே உண்மையானவை இல்லையாம். இவை இணையத்தில் வந்ததால் அவற்றுக்குப் பதில் புதிதாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள் வேட்டைக்காரன் யூனிட்டில். 

மேலும் இந்தப் படத்தோடு சூர்யாவின் ஆதவன் படமும் தீபாவளிக்கு மோத உள்ளது. எனவே அந்தப் பட வெளியீட்டை சில நாட்கள் தள்ளி வைக்க முடியுமா என்றும் முயற்சித்து வருகிறார்களாம். 

இவற்றையெல்லாம்விட விஜய்யை மிகவும் கவலையில் ஆழ்த்தியிருப்பது இணையத் தளங்களில் தன்னைப் பற்றி வரும் தாறுமாறான செய்திகள்தானாம். தன் படங்களை கிண்டலடித்து வரும் இணையதள நக்கல் கட்டுரைகளைப் பார்த்து பயங்கர அப்செட்டிலுள்ள விஜய், இதைச் சமாளிப்பது எப்படி என்று தெரிந்த பிஆர்ஓக்களிடம் கேட்டு வருகிறாராம். 

இந்தப் பிஆர்ஓக்களில் சிலர்தான் இணையத் தளங்களைப் புறக்கணித்து நடிகர்களுக்கும் படங்களுக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ரகசியம் விஜய்க்கு தெரியாது போலும்!. 

இந்த செய்தியினை thatstamil.comல் இருந்து படித்தது.எடுத்தது, 
 thatstamil.comல் இந்த செய்தியை படித்த வாசகர்கள் தந்த சில நக்கலான (உண்மையான) கமெண்ட்ஸ்.... 

"அய்யய்யோ வருதுடா விஜய் படம் தமிழ்நாட விட்டு எல்லா ஓடுங்கடா, இவன் தொல்ல தாங்கமுடியலப்பா, பன்ச் டயலொக் பேசியே ஆழ காளிபன்னிடுவன் "

vijay: சார், என்னோட வேட்டைக்காரன் பட ரிலீஸ் தேதி அறிவிக்கட்டா? 
rajini: நோ .நோ
vijay: ஏன்? 
rajini: கண்ணா, சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகம் ஆய்டும்.

" ஆபத்து. ஆபத்து. விஜய் படம் ரிலீஸ் ஆக போகுதாம். எல்லோரும் பாதுகாப்பான இடத்த நோக்கி போங்க."

" ஹலோ விஜய் மொதல்ல நடிக்க பழகு, தேவை இல்லாம பன்ச் டயலாக் பேசாத, அடுத்த நடிகர்களை சீண்டாத, அட்லீஸ்ட் ஒரு படத்துலயாவது உன் நடிப்பு தெரமய காட்டு அதவிட்டுட்டு ஓவரா புல்டப்ப் குடுக்காத "

" என்ன தான் உடம்புல ஆயில் தடவி மண்ணில் புரண்டாலும் ஓட்டுற மண்தான் உடம்பில் ஓட்டும். "

" டோன்ட் வொர்ரி விஜய் [^] சார் நீங்க நெனச்ச மாத்ரி வேட்டைக்காரன் படம் நல்லா ரன் (தியேட்டரை விட்டு) ஆகும் ஆல் தி பெஸ்ட் "

" உன் படத்தை பார்ப்பவர்கள் பைத்தியமாகிவிடுகிறார்கள் "

" இப்பதான் மக்களுக்கு உண்மை தெரிய ஆரம்பிச்சிருக்கு. so wait and see vijay. "

" அது nammala thorathitu வருது. அது ரொம்ப danger ache. Pona தீபாவளி ku அத pathavanga mental ayitangalam. Athoda attack la இருந்து makala kapatha Government vaccine kandu pidika pogutham. அது அது அது....... எது??? Vettaikaran... Ellorum பொய் olinchukunga. "

" விஜய்:அஜித் இன்னுமா என்ன இந்த உலகம் நம்புது? 
அஜித்: அது அவுங்க செஞ்ச பாவத்துக்கு நாம கொடுக்குற தண்டனை தன நாம படம். அது!!!!!அது!!!!அது!!!!! 
விஜய்:நீங்க பரவ இல.என்னை தான் இவனுக ரொம்ப படுத்துறங்க. 
அஜித்:ஆமா விஜய் உங்க படம் எப்ப ரிலீஸ்? 
விஜய்:தீவாளி ரிலீஸ்.உங்களுக்கு 2 டிக்கெட் அனுப்புறன் ஷாலினியோட வந்துருங்க அஜித்: (யோசிக்கிறார்) இந்த தீபாவளிக்கு நாம இங்க இருந்த நாம செத்தோம்.முதல மலேசியாக்கு ரெண்டு டிக்கெட் வாங்கனும். "

" சன் நிறுவனத்தின் வியாபார திறமையையும் மீறி இந்தப் படம் ஓடாமல் போய்விடுமோ ? Thats Correct. "

" விஜய் தமிழ் சினிமாவின் சாபம்.. விஜய் [^] ரசிகர்கள் எல்லாம் நான் முட்டாளாய்தான் இருப்பேன் என்று சபதம் எடுத்து கொண்டவர்கள்.. அது அவர்களின் தலைவிதி.. யார் என்ன செய்ய முடியும்.. ஐம்பது தடவை ஒரே படத்தில நடிக்கிறான்..."

" சத்தியமா சொல்றேன். கடவுள் மனிதனாக தமிழனாக பிறக்க வேண்டும். அவன் விஜய் படம் பார்த்து மூளை கொழம்பி அழுவுறதை நான் ரசிக்க வேண்டும் "

" டேய் இன்னாட பேரு இது வேட்டைக்காரன். தாடிக்காரன் என்று வை, படம் நல்ல ஓடும், இல்லன இந்த படமும் ஒரு வில்லு ஆயிரும்." 

"யாராவது விஜய் நடிச்ச(Act) படம் ஒன்னு சொல்லுங்களேன் "

" விஜய்யா யாரு அது ? புது நடிகரா? "

" ஒரே மாதிரி படங்கள் பண்ணின யார்தான் வேருக்கமட்டர்கள் DO சொமே THING DEFERRENCE மூவிஸ் அண்ட் DEFERENT கரக்டோர் லைக் சூர்யா ,விக்ரம் பிறகு யு வில் ராக் அண்ட் CHANGE யுவர் சென்டிமென்ட் ABOUT அம்மா . தக்கசி தட்ஸ் ஆல் டூ ஓல்ட் SUBJECTSOME THING லைக் ரோமடிங் மூவிஸ் அண்ட் சங்கே யுவர் கேட்டுப்லைக் ஹேர் ஸ்டால் CUT ஆப் யுஒர் FUNKY ஹேர் மேக் இட் ஸ்மார்ட் ." 
படம் ரிலீசாகுரதுக்கு முன்னாடியே இப்படி கமெண்ட்ஸ். 
இனி ரிலீஸ் ஆச்சுனா...இன்னும் எவ்ளோ கமண்ட்ஸ் வருமோ ?..நினைச்சு பாக்கவே முடியலை, 

என்னோட கமண்ட்ஸ்.
" எத்தனை படம் நடிச்சோமாங்கிறது முக்கியமில்லை. நாலு பேரு சொல்ற மாதிரி நடிச்சோமாங்கிறது தான் முக்கியம். " 
" தரமில்லாத சாப்பாட்டை அண்டா நிறைய பொங்கி வைக்கிறது வேஸ்ட்.
தரமோடு இருக்கும் சாப்பாட்டை ஒரு தட்டு நிறைய கொடுப்பது பெஸ்ட். " 
" எண்ணிக்கையில் உயர்வது உயர்வல்ல .... தரத்தில் உயர்வதே உயர்வு "

Posted by போவாஸ் | at 12:39 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails