நகைச்சுவை துணுக்குகள் - சர்தார்ஜி ஜோக்ஸ் - 1
சிறுநீர் கொண்டு வா!
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார். டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.
ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.
சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.நண்பர்: ஏன்?
சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது
நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?
சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.
சிறந்த டிரைவர்..?
அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்.
அன்னையின் கடிதம்.
வஹே.. குரு..
அன்புள்ள பந்தாவுக்கு,நான் இந்த கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன், ஏன்னா நான் வேகமா எழுதினா உன்னால படிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். நீ வீட்டைவிட்டு போகும் போது இருந்த வீட்ல இப்ப நாங்க இல்லை. நம்ம வீட்டிலிருந்து 20 மைல் து¡ரத்தில்தான் எல்லா ஆக்சிடன்டும் நடக்குதுன்னு பேப்பர்ல வந்த அன்னைக்கே அந்த வீட்டை உன் அப்பா காலி பண்ணிவிட்டார். புதுவீட்டு அட்ரசை என்னால இப்ப உனக்கு எழுத முடியாது, ஏன்னா, இதற்கு முன்னால இங்கிருந்த சர்தார் இந்த வீட்டு நம்பரை அவன் புதிய வீட்டுக்கு வைக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு போய்விட்டானாம். ஏன்னா அவன் வீட்டு அட்ர¨¨ மாற்ற வேண்டாம் பாரு..இந்த இடம் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு வாஷிங் மிசின் கூட இருக்கிறது. ஆனா அது ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்கிறது. போன வாரம் மூனு சட்டையை போட்டு சங்கிலியை பிடித்து இழுத்து விட்டேன். பிறகு கொஞ்சம் சத்தம் கேட்டது, ஆனா சட்டைகள் இதுவரை எங்கு போனதுன்னு தெரியல. கிளைமேட் ரொம்ப மோசமில்கை, போன வாரம் இரண்டு முறை மழை பெய்தது, முதன் முறை மூன்று நாட்களும், இரண்டாவது முறை நான்கு நாட்களும் பெய்தது. நீ கோட்டு கேட்டிருந்தாய் அல்லவா? அனுப்பியிருக்கிறேன். மெயிலில் அனுப்புவதற்க்கு கோட்டு மிகவும், எடை அதிகமாக இருந்ததால், அதிலிருந்த பட்டன்களை அறுத்து எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் போட்டிருக்கிறேன். சுடுகாட்டிலிருந்து, பாட்டியை எரித்ததிற்கான பில் வந்திருக்கிறது. இந்த முறை பணம் கட்டாவிட்டால் பாட்டியையே திருப்பி இங்கு அனுப்பி விடுவாதாக எழுதியிருக்கிறார்கள். மறுபடியும் பாட்டி இங்கு வந்துவிட்டால் தங்குவதற்கு ரொம்ப ககடமாக இருக்கும். உன் அப்பா மயானத்தில் புல்வெட்டும் வேலை ஒன்றில் சேர்ந்திருக்கிறார். நல்ல வேலை, அவருக்கு கீழே 500 பேர் இருக்கிறார்களாம், பெறுமையாக எல்லோரிடமும் சொல்கிறார். முக்கியமான செய்தி, உன் அக்காவுக்கு இன்று காலை குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை, அதனால நீ இப்ப மாமாவா இல்லை மாமியா என்று எனக்கு புரியல. உன் மாமா ஜீதேந்தர் போன வாரம் தவறுதலா விஸ்கி வாட்டுக்குள்(பெரிய பாத்திரம்) விழுந்துவிட்டார். காப்பாற்றப் போன இரு நன்பரையும் போட்டு அடி அடின்னு அடித்துவிட்டு கடைசியில் மூழ்கி செத்து போனார், அவரை எரிச்சப்ப மூன்று நாள் முழுசா எரிஞ்சாராம். வேறு ஒன்றும் எழுதுவதற்க்கு இல்லை. மற்றவை அடுத்த மடலில்..அன்புடன் உன் அம்மா.
1 கருத்துக்கள்:
சிரிக்க வைச்சுட்டீங்க...
(nizampakkam)
Post a Comment