விஜயின் மாஸ்டர் ப்ளான் - புதிய தகவல்கள்.

விஜயின் மாஸ்டர் ப்ளான்  - புதிய தகவல்கள்.


நடிகர்  விஜய்  புதிதாக அரசியல் கட்சி துவங்கப் போகிறார், காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார். - என்றெல்லாம் உலவிய பேச்சுக்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். " நான் தற்போது அரசியல் கட்சி துவக்கப் போவதுமில்லை, காங்கிரஸில் சேரப்போவதுமில்லை. எனது மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி நற்பணிகளைத் தொடருவேன்" என்று தெரிவித்தார். விஜய் எடுத்துள்ள இந்த முடிவின் பின்னணியில் பல்வேறு ரகசியங்கள் இருக்கின்றன.
புதிதாக அரசியல் கட்சி துவங்கி அதை அடுத்த தேர்தல் வரை கொண்டு செல்ல கோடிக் கணக்கில் பணம் தேவை. ஆகவே, இப்போதே கட்சி ஆரம்பித்தால் தேர்தல் வரை கட்சியை வளர்க்க பெருந்தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். அப்படி செலவு செய்து ஒரு கட்சியை உருவாக்க, நடிகர் விஜய்யோ, அவரை இயக்கிக் கொண்டிருக்கும் அவரது தந்தை எஸ்.எ. சந்திரசேகரோ தயாராக இல்லை.
 இந்த சூழ்நிலையில்தான் விஜய் காங்கிரஸில் சேருவது பற்றி யோசித்து இருக்கிறார். காங்கிரஸில் இனைந்து ஒரு குறிப்பிட்ட காலம் வர பாலிடிக்ஸ் நடத்திவிட்டு பிறகு ஏதாவது காரணத்தைச் சொல்லி காங்கிரசிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பிப்பது (மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் தோற்றுவித்ததைப் போல) எனத் திட்டமிட்டிருக்கிறார் விஜய்.
காங்கிரஸில் இணைவதன் மூலம் தான் மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களின் போது  வரவேற்பு ஏற்பாடுகள், விளம்பரங்கள், நிகழ்ச்சி ஏற்பாடுகள், பயணச் செலவுகள் ஆகியவற்றை கட்சிப் பிரமுகர்கள் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தனக்கோ, தனது ரசிகர் மன்றத்தினுக்கோ பெருஞ்செலவு ஏற்படாது என்பது ஒரு காரணம்.
காங்கிரஸில் இருக்கும் காலம் வரை கட்சி நிகழ்ச்சி, சுற்றுப்பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுக்க கட்சி செலவிலேயே பயணித்து தனது ரசிகர் மன்றங்களை விரிவுபடுத்தி ஆதரவாளர்களை பெருக்கிக் கொள்வது. இது இரண்டாவது காரணம்.

இந்நிலையில், 'காங்கிரஸில் சேரும் தனது முடிவு பற்றி ரசிகர் மன்ற பிரமுகர்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்பதை அறிந்துல்கொள்ள மாவட்ட ரீதியாக ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளார் விஜய். ரசிகர் மன்ற நிர்வாகிகளில் பலர் தி.மு.க அனுதாபிகள். அப்படிப்பட்ட அனுதாபிகள், காங்கிரஸில் இனைந்து பணியாற்றும் விஜயின் யோசைன்ன்கு எதிர்ப்ப தெரிவித்திருக்கிறார்கள்.
"காங்கிரஸில் நாம் இணைந்தால் நமது தனித்தன்மையை இழந்துவிடுவோம். காங்கிரஸில் உள்ள பத்து கோஷ்டிகளில் நமது அணி பதினொன்றாவது கோஷ்டியாக இருக்குமேயொழிய் பலமான கோஷ்டியாக உருவெடுக்க முடியாது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உங்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் எங்கள் சொந்த பணத்தை செலவழித்து மன்றத்தை வளர்த்துள்ளோம். காங்கிரசிற்கு நீங்கள் போவதாக இருந்தால் உங்களின் ரசிகராக மட்டுமே இருப்போம். நாங்கள் காங்கிரசிற்கு வர மாட்டோம்" என்று கூறி விட்டனர்.
இவர்களில் வேறு சிலர், "இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவுக் குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருந்தவர் நீங்கள். ஆனால் காங்கிரஸ்காரர்களோ இலங்கைத் தமிழர்களை ஒழிக்க ஆயுதம் வழங்கியவர்கள். அவர்களுடன் இணைவதா?" என்று குரல் எழுப்பினார்கள். "வெட்கக்கேடு! வெட்ககேடு! காங்கிரஸில் சேருவது வெட்கக்கேடு" என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். இதனால் விஜய் சற்று குழம்பித்தான் போனார்.


பிறகு தன தந்தையுடன் தீவிர ஆலோசனை செய்திருக்கிறார். தன தந்தையிடம் விஜய், "காங்கிரஸில் சேர்ந்தால் சினிமா தொழில் போய்விடும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர் மன்றங்களில் இருந்து எதிர்ப்பு இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு மக்களிடம் பாய் நம் ஆதரவாளர்களை வளர்ப்போம். பிறகு தனிக்கட்சியா ? காங்கிரசா ? என்று முடிவு செய்வோம்" என்று கூறிவிட்டாராம். இதைத் தொடர்ந்தே காங்கிரஸில் சேரும் முடிவைக் கைவிட்டார் விஜய்.
இந்நிலையில் புதிய மூவ்களில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய். தனது மக்கள் இயக்கத்தை வலுவானதாக ஆக்குவதில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார். இனி ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு விசிட் செய்வார். அங்கே தனது ரசிகர்களை மட்டுமல்லாமல் நற்பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களையும் சந்தித்துப் பேசுவார்.
முதல் கட்டமாக வருகின்ற செப்டம்பர் இருபதாம் தேதி பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். மக்கள் இயக்கித்தில் உறுப்பினர்களை சேர்க்கவும் மக்கள் நலப்பணிகளைத் துவக்கி வைக்கவும் போகிறார் நடிகர் விஜய்.
முதல் ரவுண்ட் சுற்றுப் பயணத்தில் மக்கள் இயக்க உறுப்பினர் சேர்ப்பு வைபவங்களை நடத்தி முடித்த பிறகு இலவச கம்ப்யூட்டர் பயிற்ச்சி மையங்களையும், இலவச தையல் பயிற்ச்சி மையங்களையும் மாவட்டம் மற்றும் ஒன்றியம் தோறும் வேகமாக துவக்கப் போகிறாராம்.
சென்னையில் துவக்கிய கம்ப்யூட்டர் பயிற்ச்சி மையத்திற்கான முழு செலவையும் விஜய் தனது சொந்தப் பணத்தில் செய்திருக்கிறார். பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ரசிகர் மன்றத்தினர் செலவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளிடம், "அரசியலில் குதித்த பிறகு நாங்கள் சென்னையில் தேர்தல் களத்தை சந்திப்போம்.

அதனால்தான் இந்த மாவட்டத்தில் எங்கள் சொந்த செலவில் பயிற்சி மையம் ஆரம்பித்திருக்கிறோம். மற்ற மாவட்டங்களில் நாங்கள் போட்டியிடப் போவத்தில்லை. அங்கேயுள்ள மன்ற நிர்வாகிகளான உங்களுக்குத்தான் எம்.எல்.ஏ சீட் தரப் போகிறோம். எதிர்காலத்தில் எம்.எல்.ஏ வாகப் போகும் நீங்கள் இந்தச் செலவைக் கூட செய்யக் கூடாதா ? " என ஆசை வார்த்தை பேசி இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் துவக்கத் தூண்டுகின்றனராம் நடிகர் விஜயும், அவரது அப்பாவும்.
சென்னை, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னையில் உள்ள பயிற்சி மையம் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. மற்ற இரு மாவட்டப் பயிற்சி மையங்களும் பணமில்லாததால் சரிவர இயங்கவில்லை.
இதில் புதுக்கோட்டை மையத்தில் பழைய கம்ப்யூட்டர்களை வைத்து மையத்தைத் துவக்கியுள்ளனர். சில நாட்களிலேயே அந்தக் கம்ப்யூட்டர்கள் பழுதாக, பயிற்ச்சி மையம் பயனற்று கிடக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் துவங்க விரும்புவோருக்கு புதிய நிபந்ததனைகளை விதித்துள்ளார் நடிகர் விஜய்.
கம்ப்யூட்டர் மையம் நடத்தும் இடத்தை மூன்றாண்டு கால ஒப்பந்தத்திற்கு வாடகை அல்லது ஒத்திக்கு எடுத்து பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்பது முதல் நிபந்தனை.
கம்ப்யூட்டர் பயிற்சியாலரிடமும் பனி ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை.
கம்ப்யூட்டர் பயிற்சியாளரை சென்னை அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்விற்கு அனுப்ப வேண்டும்.
அங்கு நடக்கும் நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்றவரையே பயிற்றுநராக நியமிக்க வேண்டும் என்பது மூன்றாவது நிபந்தனை.

இவற்றை செய்த பிறகே கம்ப்யூட்டர் பயிற்சி மையம் துவக்க அனுமதியும், துவக்க விழாவிற்கு வருகை தர 'கிரீன் சிக்னலையும்' கொடுக்கிறாராம் நடிகர் விஜய்.
அடுத்த ஆறு மாத காலங்களுக்குள் பத்து லட்சம் உறுப்பினர்களை மக்கள் இயக்கத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பது விஜய் போட்டுல்லா அதிரடி திட்டமாம். அதைத் தன ரசிகர் மன்றத்தினரிடம் கூறியுள்ள விஜய், மக்கள் இயக்கத்தை வளர்ப்பது, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம், தையல் பயிற்சி மையம், மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவது போன்றவற்றை முடிக்கிவிட்டுள்ளார்.
இவையெல்லாம் முழு வீச்சில் (நாடகத்தை)அரங்கேறிய பிறகே 'புதிய கட்சியா ? , காங்கிரசா ?' என்பதை முடிவு செய்வாராம் நடிகர் விஜய்.

நன்றி: தமிழன் எக்ஸ்பிரஸ்.


தன ரசிகர்களின் உதவியால், முழுக்க முழுக்க தன சுய லாபத்திற்காக, அரசியலில் அடி எடுத்து வைக்கவே இவர் முயல்கிறார்.இவர் ஊர் ஊருக்கு கம்ப்யூட்டர் சென்டர் திறப்பது, நலத்திட்டப் பணிகள் எல்லாம் ஒரு கண்துடைப்பு.
அதுவும் அவர் தன சொந்த செலவில் செய்யவில்லை. செய்யமாட்டாராம்.ரசிகர்கள் செய்ய வேண்டுமாம்.
சென்னையில் மட்டும் இவர் கம்ப்யூட்டர் சென்டர் திறப்பாராம். தமிழகம் முழுவதும் உள்ள மற்ற ஊர்களுக்கெல்லாம் தன ரசிகர் மன்றங்களின் சார்பாக ரசிகர்கள் திறக்க வேண்டுமாம். என்ன கொடுமை இது ?.ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர் தன ஒரு படத்தின் பாதி சம்பளத் தொகையை கொடுத்தாலே தமிழகம் முழுவதும் குறைந்தது 6 கம்ப்யூட்டர்கள் வாங்கி, இடம் பார்த்து, கம்ப்யூட்டர் சென்டர் திறக்க முடியும். நடத்த முடியும். ஆனால் இவர் செய்ய மாட்டார்.
ஒரு உண்மையான சமுதாய அக்கறையும், மக்கள் முன்னேற வேண்டும் என்று நினைப்பவன் கண்டிப்பாக செய்வான்.ஆனால் இவர் அப்படியல்ல.
ரசிகர்கள் கம்ப்யூட்டர் வாங்கி, ஒரு இடத்தினை வாடகைக்கு எடுத்து, கற்றுத்தர பயிற்சியாளரை வேலைக்கு எடுத்து, மாதா மாதம் வாடகை, மின்சாரம் முதலான இதர செலவுகள் செய்ய வேண்டுமாம். இவர் கம்ப்யூட்டர் சென்டர் திறக்க மட்டும் வருவாராம்.
இன்றைய சூழ்நிலையில் ஒரு பத்து கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமென்றால் குறைந்தது இரண்டரை லட்சமாவது தேவை படும். கம்ப்யூட்டர் சென்டர் நடத்தப் போகும் இடத்திற்கு வாடகை ஒரு 1000 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் பத்து மாத வாடகைப் பணம் அட்வான்ஸாக இட உரிமையாளரிடம் தர வேண்டும், இதற்கு மேல் கம்ப்யூட்டர் சென்டரின் இன்டீரியர்,பயிற்சியாளர்கள், இதர செலவுகள் எல்லாம் சேர்த்து ஒரு 1.50 லட்சமாவது செலவாகும்.
மொத்தம் எல்லாம் சேர்த்து சுமார் ஐந்து லட்சத்திற்கு குறையாமல் தேவைப்படும.
ரசிகர்களின் மேல் இவர் சுமத்தும் பாரங்களைப் பார்த்தீர்களா ? எப்படித் தாங்கப் போகிறார்கள் இவரது ரசிகர்கள் ?.
யாரோ நட்டுவைத்து தண்ணீர் ஊற்றி, பாதுகாப்பாய் வளர்த்த மரத்தில், காய்க்கின்ற காய் கனிகள் மட்டும் இவருக்கு வேண்டுமாம். என்ன ஒரு வில்லத்தனமான் எண்ணம்.
இவரிடம் தெளிவான பேச்சுமில்லை, தெளிவான சிந்தனையுமில்லை.விஜயை உயிராக மதிக்கும் ரசிகர்கள் மேல் அக்கறையுமில்லை.
இவரது எண்ணம், செயல், பேச்சு, செயல்பாடு எல்லாம் அரசியலை நோக்கி, தன சுய லாபத்திற்காகவே என்பது இந்த கட்டுரை மூலம் நிரூபணமாகிறது.
சமுதாய அக்கறை, மக்கள் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகள் இவரிடம் துளி கூட இல்லை.
தயவு செய்து இவரது ரசிகர்கள், தொண்டர்கள், நடுநிலையானவர்கள், இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்.

இவரா நமக்கு நன்மைகளை செய்யப் போகிறார். போராடப் போகிறார்.

சத்தியமாக இல்லை. 
இதெயெல்லாம் மீறி இவரது தொண்டர்கள், ரசிகர்கள் கம்ப்யூட்டர் சென்டர்களைத் திறந்தால் தன் தலையில் தானே மண் அள்ளிப் போடுவதற்கு சமம். அவர்களைப் போல ஒரு சிறந்த முட்டாள்கள் வேறு யாருமில்லை. 
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல எல்லாம் செய்துவிட்டு பின்னர் வருத்தப்பட்டு புலம்பாமல் இருக்க, இனிமேலாவது இவரது ரசிகர்கள், தொண்டர்கள் சற்று முழித்துக் கொள்வது நல்லது.
 

விஜய்க்கு எதிராகவோ அல்லது வெறும் வெட்டிப் பேச்சாகவோ எழுதவில்லை. ரசிகர்கள், தொண்டர்கள், மக்கள் ஒரு விழிப்புணர்வுடன் இருக்கவே எழுதப்பட்டது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Posted by போவாஸ் | at 10:53 AM

3 கருத்துக்கள்:

Anonymous said...

இவனும் இவன் அப்பனும் பிட்டு பட பசங்க, இவனுங்களுக்கு பின்னாடி நாலு மொட்ட (ஒன்றும் பயன் படாத) பசங்க.

kanavugalkalam said...

இந்த உண்மைய சொன்ன எவனுக்கு புரியுது.............

Post a Comment

Related Posts with Thumbnails