தெரிந்துகொள்வோம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகுதி 2


தகவல் பெறும் உரிமைச்சட்டம், 2005

 

மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த நோக்கத்தை எய்துவதற்கும், குடிமக்கள் ஒவ்வொருவரும், அரசு(அல்லது) அரசு சார்ந்த அலவலகங்களிடமிருந்து தகவல் பெறுவதற்கும் ஏதுவாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
தற்போது,தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005-ஐ, ஐம்மு-காஷ்மீர் மாநிலம் நீங்கலாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், அக்டோபர் மாதம் 2005-ல் முழுமையாக நடைமுறைப்படுத்த, மத்திய அரசால் சட்டம் வெளியிடப் பட்டுள்ளது. அரசு அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்கும் வகையில் இச்சட்டம் உள்ளது. எனவே அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல் திறனிலும், வெளிப்படையான நிலை, செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலங்களின் கட்டுப்பாட்டிலுள்ள தகவல்களை குடிமக்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொ்ள வழி செய்யும் சட்டமே தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 ஆகும். 2005 ஆம் ஆண்டின் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கண்காணித்தல் மற்றும் செயலாக்கம் தொடர்பான பொருள் பொதுத்துறையிலிருந்து, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறைக்கு அரசாணை நிலை எண்.1365, நாள். 21.11.2006ன் மூலம் மாற்றப்பட்டுள்ளது. இத்துறையில், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் செயலாக்கம் மற்றும் நிருவாகம், அதன் தொடர்புடைய அறிவுரைகள்,


ஆணைகள், விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. இச்சட்டம் தொடர்பாக ஏதேனும் விளக்கம் அல்லது தெளிவுரை வேண்டின் பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை (நி.சீ.3) என்ற பிரிவிலிருந்து உரிய தகவலைப்பெறலாம். பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறையின் சிறப்பு ஆணையாளர் மற்றும் அரசு செயலாளர் அவர்கள் இச்சட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் ஆவார். இச்சட்டத்தின் கண்காணித்தல் மற்றும் செயலாக்கத்திற்காக துணைச்செயலாளர் (த.பெ.உ.ச.) மற்றும் சார்புச்செயலாளர் (த.பெ.உ.ச.) ஆகியோர் தனியே நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டத்தின் நோக்கங்கள் 
1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான 
ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்;
2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே 
பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் 
பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை ஊழலை ஒழித்தல்.
4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு 
உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.

Posted by போவாஸ் | at 12:21 AM

1 கருத்துக்கள்:

Unnmaivirumbi. said...

Yes Sir.
I have something to say. Using this section of law, why cant somebody ask the court to reveal the current status of our former PM late.Mr. Rajeev Gandhi's murder case? This will help the people to come out of so many 'MISTRIES' which are prevailing at present, like all the accused persons are still in the list? Is this possiblle?

Post a Comment

Related Posts with Thumbnails